டிடிவி தினகரன் கைது | லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது| Dinamalar

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது

Updated : ஏப் 27, 2017 | Added : ஏப் 26, 2017 | கருத்துகள் (185)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 டிடிவி, தினகரன், கைது

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் டில்லியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு ரூ 50 கோடி லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில், தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று(ஏப்.,25) 4 வது நாளாக விசாரணை நடத்தினர் . சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணை நீடித்த நிலையில் நேற்று(25ம்தேதி) நள்ளிரவில் தினகரன் கைது செய்யப்பட்டார்.


லஞ்சம் விவகாரம்: நள்ளிரவில் தினகரன் கைது

போன் அழைப்புகள் ஆய்வு:

சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் ரூ 1.30 கோடியுடன் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.


ஒரே வரியில் பதில்:

தினகரன், தரகர் சுகேஷ் சந்திரா, நண்பர் மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகிய நால்வரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் நீடித்தது.


நள்ளிரவில் கைது:

4 நாட்களாக 37 மணி நேரம் நடந்த விசாரணை நள்ளிரவில் நிறைவடைந்து, முடிவில் தினகரன் கைது செய்யப்பட்டார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (185)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Koteeswaran Iyer - salem,இந்தியா
26-ஏப்-201722:47:42 IST Report Abuse
Koteeswaran Iyer மேற்படி விசாரணையில் தேர்தல் நாமினேஷன்ல் காட்டிய சொத்து கணக்கையும் பரிசீலனையும் செயய வேண்டும். வருமான வரியும் இப்பணம் எப்படி வந்தது? என விளக்க வேண்டும். அது சரி டெல்லி க்கு இப்பணம் எப்படி இத்தனை காவலையும் மீறி சென்றது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - ஈரோடு,இந்தியா
26-ஏப்-201720:51:46 IST Report Abuse
தமிழ் லஞ்சம் குடுக்க முயற்சித்ததற்காக கைது செய்தது வரவேற்கத் தக்கது. ஆனால், லஞ்சம் வாங்க தயாராக இருந்த, முயற்சி செய்த தேர்தல் ஆணைய நபர் யார்? அதைக் கண்டுபிடிங்கப்பா முதலில். இதுவரை நடந்த ஒரு சில முக்கியமான தேர்தல்கள் என்ன லட்சணத்தில் நடந்திருக்கும் என்பது புரியும் ஜனநாயக முறையில், நேர்மையான முறையில் தேர்தல் நடக்கிறதா என்ற சந்தேகம் நிறையவே இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
26-ஏப்-201720:26:42 IST Report Abuse
Ramakrishnan Natesan இங்கே ஒன்றை பார்க்க வேண்டியது இவர் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் இதை கூறுவது ஒரு தேர்ந்த fraud இவர் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் எனில் இதை வாங்க இருந்த அந்த கருப்பு ஆடு தேர்தல் அதிகாரி யார் அவரை ஏன் இவர்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X