கதை முடித்து நிமிர்ந்தனர்...| Dinamalar

கதை முடித்து நிமிர்ந்தனர்...

Updated : ஏப் 26, 2017 | Added : ஏப் 26, 2017 | கருத்துகள் (22)
Advertisement


துடித்து எழுந்தனர்,கொதித்து சிவந்தனர்,கதை முடித்து நிமர்ந்தனர்...


நம்ம ஊர் பெண்களால் நாட்டில் ஒரு நல்ல காரியம் நடந்து கொண்டு இருக்கிறது.

கோர்ட் உத்திரவால் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் தங்கள் கோபத்தை பலவிதமாக காட்டி வருகின்றனர்.

கிடைக்கும் சைக்கிள் கேப்பில் மதுக்கடையை திறப்போம், அங்கே குடியிருப்பு இருந்தால் என்ன அங்கே இருப்பவர்கள் எக்கேடு கெட்டால் என்ன?ஒரு நாள் எதிர்ப்பு காட்டுவார்கள் கடைமுன் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் போலீசைவிட்டு விரட்டினால் விலகி ஒடிவிடுவார்கள் என்று அரசாங்கத்தினர் தப்புக்கணக்கு போட்டுவிட்டனர்.

எந்த அரசியல் கட்சியையும் சேர்க்காமல், எவ்வித சாத மத அமைப்பிற்கும் இடம் தராமல் எங்கே கடை திறந்தாலும் அங்கே பெண்கள் கூடுகிறார்கள் கடுமையாக எதிர்ப்பை காட்டுகிறார்கள்,எத்தனை மணிநேரம் ஆனாலும் கடையை திறக்கவிடாமல் அரணாக நிற்கிறார்கள் போலீசைக் கண்டு அஞ்சாமல் நெஞ்சம் நிமிர்த்தி போராடுகிறார்கள்.

திருப்பூர் முதலிபாளையம் பெண்கள் இன்று ஒருபடி மேலே போய்விட்டனர்.அங்கே உள்ள சிட்கோ பஸ்ஸ்டாப் அருகே டாஸ்மாக் கடையை திறக்கபோகின்றனர் என்று தெரிந்ததும் கடைமுன் பெண்கள் திரண்டனர்.கடையை திறக்காதே விஷத்தை விற்காதே குடும்பத்தை நாசம் செய்யாதே குடியைக் கெடுக்காதே என்று கோபத்துடன் கோஷமிட்டனர்.

வேண்டிய மட்டும் கோஷம் போட்டாச்சுல்ல இனி கலைஞ்சு போங்க என்று என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.அவர்களுக்கு கூட்டத்தை கலைக்கணும், கடையை திறக்கணும், மதுவை விற்கணும்,கொடுக்கப்பட்ட 'பிரஷர்' அப்படி.

இதை புரிந்து கொண்ட பெண்கள் நாங்க இந்த பக்கம் போனபிறகு நீங்க அந்த பக்கம் கடையை திறந்து காவல் காக்க போறீங்களா? அந்த கதை இங்கே நடக்காது இனி இந்த பகுதியில கடை திறக்கவே அச்சப்படணும் 'வாங்கடி' என்று கிளம்பியவர்கள், பூட்டியிருந்த டாஸ்மாக் கடையை கல்லாலும் கம்பாலும் கம்பியாலும் உடைத்து திறந்தனர்,ஆவேசத்துடன் உள்ளே நுழைந்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர்,மேஜை நாற்காலிகளை உருத்தெரியாமல் செய்தனர்.

அதிகம் போனால் அரை மணி நேரமாகியிருக்கும் அங்கே ஒரு மதுக்கூடை இருந்தது என்பதற்கான அடையாளமே இல்லாமல் செய்தனர்.அவர்கள் துடித்து எழுந்ததையும் கொதித்து சிவந்ததையும் திறக்க இருந்த டாஸ்மாக் கடையின் கதை முடித்து நிமிர்ந்ததையும் பார்த்தவர்கள் டாஸ்மாக்கிற்கு எதிரான இந்த உக்கிர தாண்டவம் தேவைதான் இங்கு மட்டுமல்ல எங்கும் என்றே நினைத்தனர்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowmya Sundararajan - Clementi,சிங்கப்பூர்
08-ஜூன்-201717:57:36 IST Report Abuse
Sowmya Sundararajan யோவ் இதுதான்யா நியூஸ் . பலே பலே
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
01-ஜூன்-201714:32:52 IST Report Abuse
krishna நடப்பது குடி அரசு.குடியின் மூலம் வரும் வருமானத்தில் ஆட்சி நடத்துகின்றனர்.கேவலமான ஒரு செயல்.
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
27-மே-201712:26:44 IST Report Abuse
நக்கீரன் இந்த வீரமங்கைகளை வணங்குகிறேன். இந்த புரட்சி இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டும். பெண்கள் விழிப்படைந்தால் கண்டிப்பாக நாம் விரைவில் வல்லரசாகி விடுவோம்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மே-201716:46:49 IST Report Abuse
Endrum Indian வெற்றி வேல் வீர் வேல். உங்கள் பணி வெற்றி அடைய எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
22-மே-201712:30:01 IST Report Abuse
ஜெயந்தன் குடியை எதிர்த்து போராடும் பெண்களை விரட்டி அடிக்கும் போலீஸ் குடிகாரனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-201701:45:24 IST Report Abuse
தமிழ்வேல் பின்னிட்டீங்க.
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
15-மே-201723:52:30 IST Report Abuse
Arivu Nambi கதை முடித்து நிமிர்ந்தனர்.......நில்லுங்கள் ......நிமிர்ந்து நில்லுங்கள் .......செல்லுங்கள் ......தொடர்ந்து செல்லுங்கள் .....,பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் ....... நில்லுங்கள் ......நிமிர்ந்து நில்லுங்கள் .......செல்லுங்கள் ......தொடர்ந்து செல்லுங்கள் .......... வாழ்த்துக்கள் பட்டத்து ராணிகளே..
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
15-மே-201708:38:24 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இதுலே கொடுமை என்னான்னா குடிகாரனிடம் அடி உதை திட்டு வசவுகள் பொறுக்கமுடியாமல் பொறந்தவீட்டுலேயும் நாதி கிடைக்காமல் தூக்குலேயும் தீயிலேயும் சாவும் பொண்ணுகள் வ்வ்ளோ பேரு பிள்ளைகள் இவனுக்களிடம் மாட்டிண்டால் தவிக்கும் என்று பையானது அவர்களையும் கொன்னுட்டு தானும் சாவுதுங்க, பணக்காரன் குடிச்சால் வீட்டுலே கிடப்பான் ஏழைக்குடிச்சால் சாக்கடையே பொரளுவான் என்று சொன்னது நானில்லீங்க பெரியார் தான் சொன்னாரு ,கண்ணதாசனும் குடிகாரன்தான் அதான் அதன் பெருமைகளை பல பாடல்களிலே எழுதினார், (இடிக்கக்கேது அனுமார் கோயில் என்பதுதான் இவா கொள்கைகள்) சசியிடம் ஒருபெண்மணி இந்த சாராயக்கடிகளால் உனக்கேதான் லாபம் ஆனால் நாங்கல்லாம் ஏழைகள் ஏன்னா பாவம் செய்தோம் என்று அதுக்கு சசியின் பதில் நானா உன் புருஷனை குடிக்கச்சொன்னேன் என்று எவ்ளோ திமிரு இந்தப் பதில்லே, பல பொண்ணுகளே இந்தபாழாய்போன மதுவால் தாலிக் கட்டியவன் படுத்தும் பாடு தாங்காமல் கொலையுமே செய்றாங்க ஆனால் அரசுக்கு இந்தப் தண்ணீர் வித்த காசுதான் ஒரே வருமானமாம் நாசமாப்போக
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
13-மே-201713:12:04 IST Report Abuse
Sathish குடிக்காதீர்கள் என்று தந்தையிடமும் கணவரிடமும் பிள்ளையிடமும் சகோதரனிடமும் சொல்லி சொல்லி சலித்துப்போய்விட்டார்கள். அரசாங்கத்திடம் மதுக்கடை வேண்டாம் என்று கூறினாலும் ஒருபயனும் இதுவரை இருந்ததில்லை. இத்தனை நாட்களாய் மனதிற்குள் தேக்கிவைத்திருந்த ஆத்திரம் இப்போது பொங்கி வெளிவருகிறது.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
13-மே-201708:37:13 IST Report Abuse
ரத்தினம் எல்லா ஊர்களிலும் இது தொடரட்டும். சட்டம், ஒழுங்கு, சுகாதாரம், கல்வி தான் அரசின் வேலை. அதையெல்லாம் ஒழுங்காக செய்யாமல் சாராயம் விக்கிற அரசு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை