சீமை கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சீமை கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை

Added : ஏப் 28, 2017 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சீமை கருவேல மரம், சென்னை ஐகோர்ட், தடை

சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி சீமைக்கருவேல மரங்களை வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கறிஞர் மேகநாதன் என்பவர், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக ஐ.ஐ.டி., நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். சீமைக்கருவேல மரங்களை அகற்றினாலும் புதிய மரங்கள் நடப்படுவதில்லை எனவும் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சீமைகருவேல மரங்களை வெட்ட தடை விதித்ததுடன், இது தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பாக ஐ.ஐ.டி., இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு மே11ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

சீமை கருவேல மரங்கள் வெட்ட ஐகோர்ட் தடை

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் - ஈரோடு,இந்தியா
29-ஏப்-201709:31:16 IST Report Abuse
தமிழ் சீமைக் கருவேல மரம் வெட்டும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது. சுற்றுச் குழல் மீது அக்கறை உள்ள இவர் இவ்வளவு நாளாக என்ன செய்து கொண்டிருந்தார்? இவர் குறிப்பிடும் ஒரு சில விஷயங்கள்...... "இந்த மரத்தை வெட்டுவதால், மண்ணின் உறுதித்தன்மை பாதிக்கப்படும். மலைப் பகுதிகளில் இந்த மரத்தை வெட்டுவதால், மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. விலங்குகளுக்கு உணவு மற்றும் நிழல் தரும் மாற்று மரங்களை நடாமல், இந்த சீமை கருவேல மரங்களை வெட்டுவதை ஏற்க முடியாது. சீமை கருவேலம் மரங்களை அகற்ற உத்தரவிடுவது என்பது காடுகளை அழிப்பதற்கு சமமானதாகும்"..... எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தெரிந்தாலும், இந்த வழக்கு "சிவ பூஜையில் கரடி" போல குட்டையைக் குழப்பும் முயற்சியாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. குறைந்தபட்சம், தரிசு நிலங்களில், ஆறு, ஏரி, குளம், கால்வாய் போன்ற நீர் நிலைகளில் உள்ள மரங்களை அகற்ற என்ன பிரச்சினை ?. இனி குழு அமைத்து, ஆராய்ந்து, சட்டம் இயற்றி... எவ்வளவு காலம் ஆகுமோ. நமக்கு, நாமே எதிரி. வெளில இருந்து யாரும் வரவேண்டியது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-ஏப்-201709:23:16 IST Report Abuse
Srinivasan Kannaiya நீதிமன்றங்கள் வர வர இயந்திரதனமாக நடந்து வருகிறது... கருவேல மரங்கள் நீரை எங்கு இருந்தாலும் உறிஞ்ச கூட தன்மை உள்ளதால் அவை வெட்ட படவேண்டும்... கரு வேல மரம் வெட்டுவதற்கு தடை விதிப்பதை விட... கருவேல மரம் ஒன்று வெட்டினால் இரண்டு நிழலதரும் மற்ற மரம் நடவேண்டும் என்று தீர்ப்பு அளித்து இருக்கலாம்...எல்லாவற்றையும் விட நட்ட மரங்களை பராமரிக்க ஒரு சட்டம் போடவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
29-ஏப்-201706:18:18 IST Report Abuse
SureshJaihind Stupid persons
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X