போலீஸ் ஸ்டேஷனில் நிர்வாணப்படுத்தி சித்ரவதை : திண்டிவனம் போலீசார் மீது பெண் பரபரப்பு புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் நிர்வாணப்படுத்தி சித்ரவதை : திண்டிவனம் போலீசார் மீது பெண் பரபரப்பு புகார்

Added : ஜன 28, 2011 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
போலீஸ் ஸ்டேஷனில் நிர்வாணப்படுத்தி சித்ரவதை : திண்டிவனம் போலீசார் மீது பெண் பரபரப்பு புகார்

பண்ருட்டி : விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீசார் சித்ரவதை செய்ததாக பண்ருட்டியைச் சேர்ந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (30). திண்டிவனம் போலீசார் தன்னை விசாரணைக்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக நேற்று முன்தினம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இது குறித்து மல்லிகா நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 26ம் தேதி மாலை 4 மணிக்கு திண்டிவனம் போலீசார் மூன்று பேர் வந்து உன் கணவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். உன்னை விசாரிக்க வேண்டும். அதனால் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் வரவேண்டும் என கூறினர். அப்போது நான் எனது கணவர் எந்த தவறும் செய்யமாட்டார் என கூறினேன். அதற்கு அவர்கள் அவசியம் விழுப்புரம் வரவேண்டும் என்றனர். அதனால் அவர்களுடன் சென்றேன்.


கோலியனூர் தாண்டி சென்ற போது திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதாக கூறினர். அங்கு சென்றதும் ஸ்டேஷன் அறையை மூடிக் கொண்டு மூன்று போலீசாரும் எனது துணிகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி என்னிடம் திருட்டு பொருட்கள் குறித்து விசாரித்து சித்ரவதை செய்து ஆபாசமாக திட்டினர். அப்போது எனது கணவரைக் காட்டுங்கள் என்றதும் ஒரு போட்டோவை காட்டினர். அது என் கணவர் இல்லை. எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகம் என கூறினேன். பின்னர் போலீசார் விநாயகத்திடம் விசாரித்த போது அவரும் தனது மனைவி ஒல்லியாக இருப்பார் என கூறியதால் என்னை அன்று இரவு 11 மணிக்கு பண்ருட்டிக்கு அழைத்து வந்து விட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற சேர்ந்தேன். இவ்வாறு மல்லிகா கூறினார். இதுகுறித்து பண்ருட்டி இன்ஸ்பெக்டர் செல்வம், மல்லிகாவிடம் விசாரித்து வருகிறார்.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
fardhikan - lakshmaangudi,இந்தியா
29-ஜன-201112:09:51 IST Report Abuse
fardhikan போலீசாருக்கு முதலவர் கொடுத்துள்ள உரிமை தான் இதெல்லாம். இல்லை என்றால் எப்படி தன கையில் இருக்கும் ஒரு துறையினர் எப்படி தவறு செய்வார்கள். அந்த லட்சணத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
G.Senthamilselvan - singapore,சிங்கப்பூர்
29-ஜன-201109:26:58 IST Report Abuse
G.Senthamilselvan என்ன செய்வது, போலீஸ், அவன் பொண்டாட்டி கிட்டையும் மகளுகிட்டையும் இல்லாததை தேடி பார்த்திருப்பான்.
Rate this:
Share this comment
Cancel
Sheik Oli - Kranji,சிங்கப்பூர்
29-ஜன-201109:07:49 IST Report Abuse
Sheik Oli எத்தனை முறை செருபால் அடித்தாலும் இவர்களுக்கு அறிவு வராது.சட்டம் ஒன்னு சொல்லும் பொது,இவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதே நிலைமை உங்கள் பெண்களுக்கு நடந்தால்?....உன்னை போன்றவன் இருப்பதை விட ....? திருந்துங்கடா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X