நெரூர் மணல் குவாரி பகுதியில் தண்ணீர் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெரூர் மணல் குவாரி பகுதியில் தண்ணீர் விற்பனை

Added : மே 01, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெரூர்: கரூர் அடுத்த, நெரூர் மணல் குவாரி மூடியதால், தற்போது விவசாயம் என்ற போர்வையில் போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து டேங்கர் லாரிகள் மூலம் விற்றுவருகின்றனர்.
இதுகுறித்து, நெரூர் ராஜமாணிக்கம் கூறியதாவது: நெரூர் காவிரியாற்றில் இருந்து, பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், காவிரியில் மணல்கொள்ளை அதிகளவில் நடந்தது. இதைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் ஆற்றில் மணல் அள்ள தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, நெரூர் மணல் குவாரி மூடப்பட்டு தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தால், பெரும் பள்ளங்களாகவும், பாலைவனமாகவும் காட்சியளிக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் சென்று வந்த காரணத்தால், நெரூரில் இருந்து பஞ்சமாதேவி வரை சாலைகள் பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோவில் செல்லும் வழியில் விவசாயத்துக்கு போடப்பட்ட போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, விவசாயத்து பயன்படுத்தாமல் அதை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். நாள்தோறும் இப்பகுதியில் இருந்து, 3,000 முதல், 5,000 லிட்டர் கொண்ட தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் கரூர் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தூரத்துக்கு ஏற்ப, 2,000 முதல், 3,000 ரூபாய் வரை விற்று கொள்ளை லாபம் அடைகின்றனர். விதிமுறை மீறி இயக்கப்படும் தண்ணீர் டேங்கர் லாரிகளை, அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை