அற்புத ராமானுஜர்| Dinamalar

அற்புத ராமானுஜர்

Updated : மே 02, 2017 | Added : மே 02, 2017 | கருத்துகள் (4)
Advertisement


ஸ்ரீபெரும்புதுாரில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்
அற்புத ராமானுஜர் கண்காட்சி

ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த தினவிழாவினை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதுாரில் நடந்துவரும் திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், லிப்கோ நிறுவனம் 'அற்புத ராமானுஜர்' என்ற தலைப்பில் நடத்திவரும் ராமானுஜரின் வாழ்க்கை கண்காட்சி பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுவருகிறது.

ஸ்ரீபெரும்புதுார் ஹயக்ரீவா வித்யாஷ்ரமம் பள்ளியில் முப்பதாயிரம் சதுரஅடியில் கோயில் போன்ற அமைப்பிற்குள் ஐம்பது அரங்குகளில் ராமானுஜர் பிறந்தது முதல் அமரத்துவம் அடைந்தது வரையிலான காட்சிகள் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரங்கத்தின் முன்பாக நின்றால் போதும் அந்த அரங்கத்தின் காட்சிகள் ஔி ஒலியாக பார்வையாளர்களை வந்தடைகிறது.உதாரணத்திற்கு ராமானுஜர் தொட்டிலில் பிறந்த குழந்தையாக இருக்கிறார், அப்போது என்ன நடந்தது என்பதையும் அவர் ஒரு மகான் என்பதை எப்படி கணித்து சொன்னார்கள், யார் சொன்னார்கள் என்பதையும் பதிவு செய்யப்பட்ட கணீர் குரல் விவரிக்கிறது, பார்வையாளர்களுக்கு இது ஒரு புதிய தருகிறது.

அரங்கின் நடுவில் தமர் உகந்த திருமேனி (முதல் திருமேனி) ,தானுகந்த திருமேனி (இரண்டம் திருமேனி),தானான திருமேனி (மூன்றாவது திருமேனி) ஆகிய மூன்று திருமேனிகளும் அதிஅற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சி தவிர பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.மேலும் ராமானுஜர் தொடர்பான புத்தகங்கள் சிடிக்கள் சிற்பங்கள் விற்பனைக்கும் கிடைக்கின்றன.

லிப்கோ அறக்கட்டளை தலைவர் டி.என்.சி.விஜயசாரதி,துணைத்தலைவர் ராதா விஜயசாரதி ஆகியோர் கூறுகையில்,ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்திட்ட அற்புத மகான் அவரது அவதார நோக்கம்,அவர் இறைவன் மீது கொண்டிருந்த நம்பிக்கை,மக்களுக்கு ஆற்றிய பணிகள்,அவர் செய்திட்ட சீர்திருத்தங்கள் ஆகியவற்றை எங்களால் முடிந்தளவு எடுத்துச் சொல்லும் வகையில் அற்புத ராமானுஜர் என்ற இந்த கண்காட்சியை அமைத்துள்ளோம்.அனுமதி இலவசம்.வருகின்ற 5 ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியினை அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.இது தொடர்பான தகவல்களுக்கு தொடர்பு கொள்ள எண்:9566874070.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
01-ஜூன்-201714:59:07 IST Report Abuse
ganapati sb தமிழகத்தின் தவப்புதல்வனுக்கு இன்னும் எத்தனை சிறப்பு செய்தாலும் தகும்
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
15-மே-201716:53:41 IST Report Abuse
JSS ராமானுஜர் சொன்ன அறிவுரைகளை காற்றில் விட்டனர்.அதன் விளைவுதான் இப்போதைய ஜாதி மத சண்டைகள் வெறுப்புகள்.ஜாதி மத சண்டைகளை அரசியல் காட்சிகள் நம்பி கொண்டிருக்கின்றனர் ஓட்டுக்காக. இப்போது ஆயிரம் ராமானுஜர் வந்தாலும் நிலைமை திருந்தப்போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
02-மே-201720:00:54 IST Report Abuse
Manian சிறந்த சமூக சேவை. இப்படி ஒன்னு ரெண்டு நல்ல எண்ணம் உள்ளவங்க போல 60 , 70 பேர்கள் இருந்தால் இந்த நாடு எவ்ளோ மேலே இருக்கும்முனு நெனைச்சா உடம்பே புல்லரிக்குது. ஆயிரம் வருசகம் முன்னாலேயே ஜாதியத்தை ஒழிக்க நினைத்த இந்த மகானை போல . கிடட தடட ஆயிரம் வருஷம் கழிச்சுத்தான் காந்தி பிறந்தார். ஆனாலும், முகிலாகியர்கள், பிரிஷ்காரன் வேதச்ச ஜாதி வெறுப்பு சீமை கருவேல மரங்களை இந்த நவீன விஞ்ஞான காலத்திலே கூட மற்ற முடியவில்லை என்பது வேதனைக்குறியது. இந்த ராமானுஜ ஜெயந்தி பொதுவாக நீறு பூட்ட நெருப்பாக இருக்கும் நமது பண்பாடுகளை தட்டி எழுப்ப ஸ்ரீ ராமானுஜர் அருள்செய்வாராக. லிப்கோ விற்று நன்றியுடன் - அன்பன்.
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
24-ஜூன்-201704:59:30 IST Report Abuse
Dol Tappi Maa//முகிலாகியர்கள், பிரிஷ்காரன் வேதச்ச ஜாதி வெறுப்பு// எவ்வளவு நாளைக்கு இந்த பீலா விடுவீங்க ? தாழ்ந்த ஜாதியை சேர்ந்த ஏகலைவன் கட்டை விரலை வெட்டியது ஏன் ?மனு சாஸ்திரம் முகலாயர் எழுதினான் ? தாழ்ந்த ஜாதியை தொட்டால் தீட்டு என்று பிரிட்டிஷ் காரண சொல்லிக்கொடுத்தான் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை