பிராமண துவேஷம் வளர்ந்த கதை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

பிராமண துவேஷம் வளர்ந்த கதை!

Added : மே 07, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 பிராமண துவேஷம் வளர்ந்த கதை!

வெள்ளைக்காரனின் அடிமை ஆட்சியில் வாழ்ந்து வந்த நேரத்தில், தமிழகத்தில் ஏராளமானோர் கல்வி அறிவு இல்லாமல், அறியாமையில், ஏழ்மையில் வாழ்ந்தனர்; விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வாழ்ந்தனர். ஜாதிகளில் பல பிளவுகளை ஏற்படுத்திய வெள்ளையன், அதை மையமாக வைத்தே ஆட்சியை நடத்தினான். உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடு அப்போது அதிகம் இருந்தது. இதில், உயர் ஜாதியினருக்கும், வசதி படைத்தவருக்கும், சர், திவான் பகதூர், துபாஷ் பட்டங்களை வழங்கி, சமூகத்தை மேலும் பிளவுபடுத்தினான். கல்வி இல்லாத, வறுமை, ஏழ்மை நிலையில் இருந்தவர்களிடம், ஜாதியை காட்டி, பிளவுபடுத்தி, ஆட்சி புரிந்தான்; இதை, காந்தி எதிர்த்தார்.அடித்தள மக்கள், கூலி வேலை செய்து வந்தனர். அவர்கள், மாலை வேளைகளில் கள்ளுக் கடைகளில் வீழ்ந்து கிடந்தனர்; குடும்பத்தை பாழ்படுத்தினர்; அந்த குடும்பத்து பெண்கள், வறுமையிலும், கண்ணீரிலும் வாழ்ந்தனர். அந்த காலகட்டத்தில், கள்ளுக் கடைகளை நடத்தியவர்கள், பணம் படைத்த மேட்டுக்குடி மக்களே.
படிப்பு, தொழில், செல்வம் ரீதியாக சமுதாயத்தில் பிளவு இருந்தது. உயர்ந்த, தாழ்ந்த ஜாதி வேற்றுமையை எதிர்த்து, காந்தி போராட்டம் ஆரம்பித்தார்.பிராமண சமுதாயத்தினர், நன்றாக படித்து, வழக்கறிஞர், டாக்டர், ஆசிரியர், கோவில் அர்ச்சகர் என, பல அரசு பணிகளில் இருந்தனர். மற்ற ஜாதியினரும், அது போன்ற பணிகளில் இருந்தனர்.சுதந்திர போராட்டத்தின் தீவிரத்தை பார்த்து, வெள்ளைக்காரன், தேர்தல் முறையை கொண்டு வந்தான். அந்த தேர்தலில், பணம் படைத்த, சர், ராவ் பகதூர், மிட்டா மிராசுதாரர்கள் தான் நின்றனர்; வெற்றி பெற்றவர்களும் அவர்களே!
சுதந்திர போராட்டத்தை, காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்தியது. அதில் தான், தமிழகத்தில், ராஜாஜி, சத்யமூர்த்தி பங்கேற்றனர்; பல தலைவர்கள் உருவாயினர். 1927ல் ராஜாஜி, சேலம் நகரசபை தலைவராக இருந்தார். ஏழைகளுக்கு, ஹரிஜனங்களுக்கு சேலத்தில் காலனியை கட்டினார். அங்கு, நகரசபை
துப்புரவு தொழிலாளர்கள் வசித்தனர்.இந்த நேரத்தில், ஈரோட்டில், ஈ.வெ.ரா., நகரசபை தலைவராக இருந்தார். ஹரிஜன காலனிக்கு குடிநீர் வசதியை குழாய் மூலம் கொடுத்தார். இதைப் பார்த்து ராஜாஜி, ஈரோடு சென்று, ஈ.வெ.ரா.,விடம் விபரம் கேட்டறிந்தார்.தமிழகத்தில், ஈ.வெ.ரா., ஜாதி, சமய மூட நம்பிக்கையை எதிர்த்து, போராடி, பெயரும், புகழும் பெற்றார். அவர் பெரிய செல்வந்தர்; ஈரோட்டில் நிறைய சொத்துகள் அவருக்கு இருந்தன.அவரின் வழக்குகளில், ராஜாஜி தான் வாதாடுவார். பின்னாளில், ராஜாஜி, அந்த வழக்குகளை, பிரபல வழக்கறிஞர், சேலம் விஜயராகவாச்சாரியாரிடம் கொடுத்ததாக தகவல்.ஈ.வெ.ரா., தனி செல்வாக்குடன், ஜாதி ஒழிப்பு எதிர்ப்பு இயக்கம் நடத்தி புகழ் பெற்றார். இந்நிலையில், ஈ.வெ.ரா.,வை காங்கிரசுக்கு அழைத்த ராஜாஜி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக்கினார். காங்கிரசில் ராஜாஜியை எதிர்த்து, சத்யமூர்த்தி அய்யர் போன்ற பலர் அரசியல் நடத்தினர்.
சத்யமூர்த்தியின் ஆதரவாளர்கள் தீவிர ஆச்சாரமிக்கவர்கள். அவர்கள் நடத்தும் குரு குலங்களில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாடுகள் இருந்தன; இதை,
ஈ.வெ.ரா., எதிர்த்தார்.
ராஜாஜியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாத சத்யமூர்த்தி, ராஜாஜியால் காங்கிரஸ் தலைவரான, ஈ.வெ.ரா.,வை எதிர்த்து, அரசியல் காய் நகர்த்தினார்.
தஞ்சையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ஈ.வெ.ரா., காமராஜ் ஆகியோருக்கு தனியாக, வெளி திண்ணையில் உணவை வைத்தும், மற்ற பிராமணர்களுக்கு பிரமுகரின் வீட்டின் உள்ளேயும் சாப்பாடு பரிமாறினர். அவர்கள் இருவரும் சாப்பிட்ட இலையை, மாலை வரை யாரும் எடுக்கவில்லை.
மேலும், குரு குலங்களில் நிலவிய ஜாதி வேறுபாடுகள் தான், பிராமணர்கள் மீது வெறுப்பாக மாறியது. ராஜாஜியை எதிர்க்க முடியாதவர்கள் செய்த சதி வலை தான் இது. ஏனெனில், ராஜகோபாலாச்சாரியார், சுத்த வைஷ்ணவ பிராமணர். மற்றவர்கள், சிவனை வணங்கும் பிராமணர்கள். காங்கிரசில் நிலவிய ஜாதி வேறுபாட்டை எதிர்த்து, காந்திக்கு கடிதம் எழுதிய, ஈ.வெ.ரா., தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜாஜி, 1937ல் முதல்வரானார். சத்யமூர்த்திக்கு காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் கிடைத்தது. ஈ.வெ.ரா., காங்கிரசில் இருந்து விலகிய பின், தனியாக வந்து, சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். வர்ணாசிரம முறை, ஜாதி வேறுபாடுகளை எதிர்த்து இயக்கம் ஆரம்பித்தார்.
பெரும் செல்வந்தரான, ஈ.வெ.ரா.,விடம், மாத சம்பளத்தில் வேலை பார்த்தவர்கள் தான், குத்தூசி குருசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர். அவர்களை வைத்து தான், இயக்கத்தை நடத்தினார். தமிழகத்தில், ஈ.வெ.ரா., செல்வாக்கு ஓங்கியது.
ராஜாஜியை பார்ப்பனர் என்று, ஈ.வெ.ரா., குரல் கொடுத்தார். பிராமண ஆச்சாரத்தை, சமுதாயத்தில் புகுத்துவதை எதிர்த்தார்; ஆனால், தனிப்பட்ட முறையில் பிராமணர்களை எதிர்க்கவில்லை.
இந்த நேரத்தில், நீதிக் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள், சர்.தியாகராஜர், டாக்டர் நாயர், பெப்பிலி மகராஜ் போன்றோர். பெப்பிலி, தெலுங்கர். இவர், தேர்தலில் ஈ.வெ.ரா., புகழை பயன்படுத்தி, அவரை உடன் சேர்த்து, தேர்தலில் வெற்றி பெற்றார்.ஈ.வெ.ரா.,வின் காங்கிரஸ் எதிர்ப்பு, நீதிக் கட்சிக்கு பயன்பட்டது. அப்போது தான், சர். பி.டி.ராஜன், ராஜா முத்தையா செட்டியார், சுப்பராயன் போன்றோர் அமைச்சர்களாயினர். இவர்கள், தங்களது வாழ்வுரிமைக்காக, பிராமணரல்லாதோர், பிராமணர் என்ற பிரிவினையை சமுதாயத்தில் ஏற்படுத்தினர்.
இதில், ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு உணர்வை நீதிக் கட்சியினர் நன்றாக பயன்படுத்தி கொண்டனர். அண்ணாதுரையுடன் ஆலோசனை மேற்கொண்டு, திராவிட கழகத்தை ஆரம்பித்தனர்.
நீதிக்கட்சி பிரமுகர்களில் பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள் தான் இருந்தனர். அவர்களின் ஜாதிகளை சேர்ந்தவர்களுக்கு அரசில் பல முக்கிய வேலைகளை கொடுத்தனர். மருத்துவர், கல்வி, போலீஸ், பொறியியல் துறை ஆகியவை, இதில்
முக்கியம்.அந்த நேரத்தில் தான், பிராமணர், பிராமணரல்லாதோர் என்ற பிரிவு ஏற்பட்டது. சுதந்திரம் பெற்ற பின், காங்கிரஸ் கட்சியின் கல்விக் கொள்கை மாற்றத்தால், எல்லா வகுப்பினர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது.
காமராஜர் ஆட்சி காலத்தில், பரவலாக எல்லா ஜாதியினரும் கல்வி கற்றனர். மருத்துவம், பொறியியல், அரசுத் துறைகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது.
நான், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், கல்லூரி ஆசிரியர்களில் மலையாளிகள், கன்னடர்கள், கூர்க், தெலுங்கர்கள், தமிழர்கள் இருந்தனர். காரணம், சென்னை மாகாணம், ஆந்திரா, கேரளா, கர்நாடக பகுதிகளுடன் இணைந்து இருந்த நேரம் அது.
தமிழ் மாணவர்களில், தமிழன், தமிழன் அல்லாதோர் என்ற துவேஷத்தை, சில பேராசிரியர்கள் தூண்டினர். இதனால், மலையாளி,
கன்னடர்கள் மற்ற கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இவர்கள் பின்னாளில், தங்களுக்கு போட்டியாக உள்ள, தமிழ்நாட்டு பிராமணர்களுக்கு எதிராக பிராமணர், பிராமணரல்லாதோர் என்ற விதையை விதைத்தனர். இந்த பிராமண துவேஷம், சென்னை போன்ற நகரில் பெரிய பதவி உள்ள
இடங்களில் தான் தோன்றியது.
இதற்கு விதை விதைத்தது, நீதிக் கட்சியைச் சேர்ந்த, சர்.ராவ் பகதூர், அரசர்கள், மன்னர்கள் போன்றோர் தான். பிராமண துவேஷம் பற்றி, ஈ.வெ.ரா., சொன்ன போது, கீழ்த்தட்டு மக்கள் மனதில் நன்றாக பதிவானது. அப்போது ஏற்பட்ட பிராமண துவேஷம் நிலை கொண்டது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் நான் படித்த போது, பிராமணரல்லாதோரில், ஒரு ஜாதியினரின் ஆளுமை மிகவும் அதிகமாக இருந்தது. அவர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்தனர்.
அந்த ஜாதி மாணவர்களுக்கு, விடுதியில் நல்ல அறை, பரிசுகள், உதவித் தொகை வாங்கிக் கொடுத்தனர். இது, என் நண்பரும், பா.ம.க., நிறுவனருமான, மருத்துவர் ராமதாசுக்கும் தெரியும்; எங்களால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை.
பேராசிரியர், முதல்வர், துணைவேந்தர், பல்கலைக்கழகம் என, பிராமணரல்லாதவர் ஆளுமை அதிகமானது. பிராமண துவேஷம் என்பது, பிராமண சமுதாய செயல்பாட்டை நோக்கி மட்டுமே இருந்தது. தவிர, பிராமண மக்கள் மீது வன்முறை
கட்டவிழ்க்கப்படவில்லை.
இதை, சில மதத்தினர் அதிகப்படுத்தி, பிராமணரல்லாதோரை தங்கள் மதத்திற்குள் இழுத்தனர். காங்கிரஸ் ஆட்சி போய், கழக ஆட்சி வந்தவுடன், அதில் உள்ள தலைவர்கள், அமைச்சர்கள், அவரவர் ஜாதியை காத்தனர். ஓட்டுக்காக அவர்கள், பிராமண துவேஷத்தை வளர்த்தனர். மதவாத சக்திகள்
ஊக்குவிக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர்., என்ற மாபெரும் மக்கள் சக்தியின் முன், பிராமண துவேஷிகள், மதவாத சக்திகள், ஜாதி இயக்கங்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை; ஓடிவிட்டன. காரணம், அவர்களை சார்ந்தவர்கள்,
எம்.ஜி.ஆரின் விசுவாசிகள்.
எம்.ஜி.ஆர்., ஆட்சி காலம், பிராமண துவேஷம், ஜாதி அரசியல், மத அரசியல் போன்றவை இல்லாமல், ஊழல் மறைந்து, ஏழைகளின் நலன் காட்டும் அரசாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சியின் போதும், பிராமண துவேஷம் இல்லை. பிராமணர்களுக்கு எதிராக ஒரு, பேச்சு, மூச்சு கிடையாது. ஆனால், அவருக்கு பின், இன்று, பரப்பன அக்ஹரகாரத்தில் வாசம் செய்யும் பெண், தமிழகத்தில் எல்லா ஜாதி, மதத்தினரையும் தனித்தனியாக கனமாக கவனித்து, அமைப்புகளை தூக்கி விட்டார்.
இதனால், பல ஜாதி கரையான் புற்றுகள், தமிழகத்தில் வந்து விட்டன. இவர்களின் வேலை, எல்லா ஊர்களிலும் கட்டப் பஞ்சாயத்து, வசூல் என்றாகி விட்டது.
புதிய, தகவல் தொழில் நுட்பம், முகநூல், வாட்ஸ் ஆப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம், இன்றைய இளைய தலைமுறைகளின் கருத்துகள், ஜாதி வெறியர்களை ஓரம் கட்டி, ஒழித்து
வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gmk1959 - chennai,இந்தியா
16-மே-201714:21:57 IST Report Abuse
gmk1959 சலுகைகள், புத்தகம், சீருடை, கல்விக்கட்டணம் , உணவு , இவைகளை கொடுத்து, கட்டாயம் கல்வி கற்றாக வேண்டும் என்ற நிபந்தனை வைத்து இருந்தால் , நிறைய இல்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில சதவீதம் முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை இருந்து இருந்தால் அவர்கள் எல்லோரும் முன்னேறி இருப்பார்கள் இல்லாததால் அவர்களின் தலைவர்கள் மட்டுமே முன்னேறி கொழுத்து உண்டு கொண்டு இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
17-மே-201707:10:40 IST Report Abuse
Manianஜன நாயகத்தில் குடிக்கத்தான் உரிமை உண்டு, தடுக்க வழி இல்லை. மேல் தட்டு மாக்கள் சூழ்ச்சி என்பார்கள்....
Rate this:
Share this comment
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
15-மே-201708:48:55 IST Report Abuse
pollachipodiyan வாசக நண்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. பொதுஅறிவுக்கென வேண்டுமானாலும் அல்லது நமது தமிழ்நாட்டின் வரலாறு என்றேனும் படியுங்கள். துவேசம் ஏன் வேண்டும் என்பதே கேள்வி. சுய மரியாதை - சுயமாக மரியாதையை சம்பாரிப்பது, பெருவது. மனிதன் சுயமாக தனது திறமைகளை வளர்க்க வேண்டும். சரி. சரியான வாய்ப்புக்கள் கொடுக்கப் படவில்லை. அறுபது வருடமாக கொடுத்த வாய்ப்புகளை பெற்று மகிழ்த்தினவர்கள் தன்னைப்போன்ற பிறருக்கு தன்னால் ஆனதை உதவலாமே. அதை விட்டு இட-ஒதுக்கீட்டு மூலம் கிடைக்கும் அனைத்து வசதிகளும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கு மட்டுமே என்பது அநியாயமில்லவா? ஒரு குடும்பத்துக்கு ஒரு அரசு வேலை என்றாலும் போதுமே. நன்கு தெரிந்த நீதிபதி கர்ணன் அவர்களை பாருங்கள். அவர் தன் இனத்தை சார்ந்த நபர்களுக்கு படிக்க, முன்னேற வாய்ப்பு, தன்னால் ஆனா வசதி செய்திருக்கிறாரா? அரசு வழங்கும் இட-ஒதுக்கீடு மூலம் தன் வாரிசுகள் யார் யாருக்கு அரசு வேலை வாங்கிக்கிக் கொடுத்திருக்கிறார்? ஒரு வீட்டில் ஒரு நபர் பதவிக்கு வந்ததும், பிறருக்கும் வேண்டும் என்பது சரியா? சுய மரியாதை கட்சிக்காரர்கள் சுயமாக உழைத்து படித்து அரசு வேலை வாங்கினால் அதுக்கு ஒரு தனிமரியாதை கிடைக்கும். மாறாக இப்படி கேட்பது அதன் மரியாதையை கெடுக்கிறது. பிராமின் மீது உண்டான உருவாக்கிய துவேசம் பிறரின் ஆற்றாமையே காரணம். போட்டி இடுங்கள். உதவி உண்டு. பொறாமை கொண்டால் இந்த துவேசமே உங்களுக்கு எதிராக மாறும்.
Rate this:
Share this comment
Cancel
பொலம்பஸ் - CHENNAI,இந்தியா
13-மே-201722:24:53 IST Report Abuse
பொலம்பஸ் சுய மரியாதை, இட ஒதுக்கீடு - இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் மாறானவை. சுய மரியாதை உள்ளவன் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ள மாட்டான். இட ஒதுக்கீடு என்பதே திறமை உள்ளவனை ஒதுக்கித்த தள்ளி திறமை இல்லாதவன் உள்ளே புகுவதுதானே. இப்போது அரசு வெளியிடும் அரசாணைகளை படியுங்கள். எவ்வளவு பிழைகள். பள்ளி ஆசிரியர்களைப் பாருங்கள். இன்னும் எழுத்துக்கூட்டி தான் ஆங்கிலம் படிக்கிறார்கள். சில மாதங்களுக்குமுன் ஒரு பத்திரிக்கை நடத்திய சர்வேயில் தற்போது உள்ள சாஃபட்வேர் இன்ஜினீயர்களில் 80 சதவீதம் பேர் அந்த வேலைக்கே லாயக்கு இல்லாதவர்கள் என்று சொல்லியிருக்கிறது. சமீபத்தில் ஒரு குழந்தையின் கையை கட்டிவிட்டு இன்ஜெக்ஷன் போட்டு குழந்தை இறக்க காரணமான வைத்தியர் ஒரு இட ஒதுக்கீட்டு பேர்வழி. இன்னும் எவ்வளவோ. கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா ஓடிப்போய் கல்யாணந்தான் கட்டிக்கிலாமா என்று சமுதாய சீர்திருத்த கருத்தை பரப்பியவரும் இட ஒதுக்கீட்டு க் காரர். ஆனால் கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா நாம் கையோடு கைகோர்த்துக் கொள்ளலாமா என்று பாட்டு எழுதியவர் இட ஒதுக்கீட்டுக்கு காரர் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
obamadasan - Chennai,இந்தியா
13-மே-201717:25:32 IST Report Abuse
obamadasan ஏன் பரவலாக இந்த திடீர் பிராம்மண எதிர்ப்பு ஒருசில வருடங்களுக்குப் பிறகு. BJP யின் தொடர் வெற்றிதான். ஓட்டு அரசியல் நடத்துபவர்கள் இந்து எதிர்ப்பு கோஷத்தை முன்னெடுக்க முடியாததாலேயே பிராம்மண எதிர்ப்பை கையிலெடுக்கின்றனர். BJP யை மற்ற மதத்தினவரிடம் இந்துக்களுக்கான கட்சியென்றும் இந்துக்களிடம் பிராமணர்களுக்கான கட்சியென்றும் பிரச்சாரம் செய்கின்றனர். பெரியாரிஸ்டுகளின் முக்கிய குற்றச்சாட்டு பிராம்மணர்கள் ஆதிக்கம் செய்தனர் என்பது. கணிதமேதை ராமானுஜன் மற்றும் மகாகவி பாரதியின் வாழ்க்கையை படித்தவருக்குப் புரிந்திருக்கும் அவர்கள் அடுத்தவேளை சோற்றிற்கே அல்லல் பட்டது. பெரியாருக்குமுன் இருந்த பிராம்மணர் அடுத்தவேளை உணவிற்க்கும் சேர்த்து வைக்கும் பழக்கம் இல்லாத, தினசரி சாப்பாட்டுக்கே கையேந்த்திய உஞ்சவிருத்தி பிராம்மிணரே. காலப்போக்கில் அவர்களும் சோ அவர்கள் சொன்னதுபோல் பணம் சேர்க்கும் வைசிய தர்மத்தையே கடைபிடிக்கின்றனர். வன்முறையில் நம்பிக்கையில்லா பிராம்மண சமூகம், இந்தி மைல் கல்லை தார் பூசி அழித்ததில்லை, தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததில்லை ஆனால் உ வே சாமினாத அய்யர் தொடங்கி சுஜாதா வரை தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளவிடமுடியாதது. அப்பாவி பிராமணர்களின் மேல் ஏன் இந்த தாக்குதல்? அவர்கள் திருப்பி தாக்குவதில்லை என்பதாலேயே.அவர்கள் சங்கம் போராட்டம் நடத்தி தமிழகத்தையே உலுக்கி விடப்போவதில்லை. எவர் கொடும்பாவியும் கொளுத்தவும் போவதில்லை. தமிழகத்தில் ஏதாவது ஒரு சாதி மோதல் பிராம்மணர்களால் அரங்கேற்ற பட்டுள்ளதா? அல்லது தமிழ் நாட்டில் இரண்டு சதவீதம் உள்ள பிராமணர்கள் புழல் சிறையிலோ அல்லது பணம் கொழிக்கும் கவுன்சிலர், வட்டம், மாவட்டம், MLA, MP ஆகிய பதவிகளிலோ எத்தனை சதவீதம் உள்ளனர். நமக்கு முன் தலைமுறையில் ஆசிரியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் பல பிராம்மண சமுதாயத்தினர் இருந்தனர். அப்போது கல்வி, நீதி துறைகளும் அரசு இயந்திரமும் சிறப்பாக செயல் பட்டதை நாம் மறுக்க இயலாது.தமிழ் நாட்டில் ஏற்பட்ட பிராமண எதிர்ப்பு அரசியல் அவர்களை தமிழ் நாட்டை விட்டு விரட்டியது. இதன் பலன் இன்று டெல்லி மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளிலும் (தலைமை தேர்தல் அதிகாரிகள், துறை செயலர்கள், R B I கவர்னர் போன்ற), நாசா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களிலும் நிறைந்து திறம்பட செயலாற்றி வருகின்றனர். நம் தமிழின தலைவர்களின் பிராம்மண எதிர்ப்பு அரசியல் தமிழ் நாட்டிற்கு இப்படியொரு நிலையையே உருவாக்கி உள்ளது என்பதை மறுக்க முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
13-மே-201715:46:11 IST Report Abuse
Paranthaman கோயில்களின் புனித தன்மையை முன்னாள் திராவிட கட்சிகள் நாறடித்து விட்டிருப்பார்கள். ஏமாந்தால் கோயில்களை கூறு போட்டு விற்று விடுவார்கள்.அதை இன்றளவும் காப்பாற்றிய பெருமைக்குரியவர்கள் பிராம்மணர்களே...
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
13-மே-201710:42:06 IST Report Abuse
Manian சாரூ , அய்யக்க மாறுங்க எல்லாம் ஓடிபூடானுங்க. படிச்சவங்க மும்பாய், கொல்கொத்தா, டெல்லி, ஆஸ்திரேலிய, அமெரிக்கானு போயி அங்கிட்டு கோயில்கள் கட்டி வசதியா இருக்கானுங்க. இங்கிட்டு பெரிய நகரன்களளே பங்கு, தனியார் கம்பெனி, சார்ட்டட் அக்கவுண்டனுன்னு மேலே போயிகிட்டுருக்கானுக. கிராமங்களே பொதுவாக யாரும் இல்லை. அப்போ யாரு வங்காலை வெருட்டினனு அவுங்க அழதில்லை. பொதுவா, ஆசிரியாய் வேலைக்கு, சமையலுக்கு, பூசாரிக்குனு இப்போ புட்டி இருக்குற ஐயறு யாரும் போறதில்லை. ஒருத்தரு சொன்னாரு, அனுமாரு பிளாட்டை ஜாம்பவானுனு கரடி சொல்லிச்சு, ஆயாருங்களுக்கி இருக்குற தெறமையை திருவாரூர் மஞ்ச துண்டு தூண்டி விடாது, நாளந்தா போச்சு. அவனுக போயாக. இனிமே பேசி பயன் என்ன? அவனுக திரும்பி வரவே மாட்டானுக. நஷ்டம் அவனுகளது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
10-மே-201710:52:40 IST Report Abuse
Balaji ஒரு நல்ல கட்டுரை. ஜாதியை வளர்த்தது காங்கிரஸ். அ தி மு க, தி மு க வில் ஒரு பிராமின் ஏன் இல்லை?
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
14-மே-201710:28:01 IST Report Abuse
Manianபுத்தி உள்ளவர்களுக்கு அங்கே என்ன வேலை? அவர்கள் நியாயம், பாவம், புண்ணியம் என்று சொல்லி லஞ்சம் வாங்க விடமாட்டார்களே அப்புறம் கோடி கோடி எப்படி சம்பாதிக்க முடியும்? பொதுவாக, திருடங்க கூட அய்யரை கூடிக்கிட்டு பூஜையா செய்யபோறோம்? பாவம் -பண்ண, ஒரு பூஜை போடுன்னு 100, 200 கொடுத்தாப்போச்சு?...
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
08-மே-201705:35:06 IST Report Abuse
meenakshisundaram பிராமண எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்துபவர்கள் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்படவே செய்யாது.பிராமணர்களால் முன்னேறிய வாழ்வில் மேம்பட்ட தமிழகம் அவர்களை புறம் தள்ளுவது போல பேசிக்கொண்டு அவர்களின் வாழ்க்கை தத்துவங்களையே பின் பற்றி தமிழ் மக்களை ஏமாற்றலாவது கண் கூடு.என்றும் பிராமணர்களை மதித்து அரவணைத்து செல்லும் சமுதாயமே உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-மே-201702:21:44 IST Report Abuse
மலரின் மகள் இருமொழி புலமை பெற்றவர்கள் துவி பாஷ் என ஆரியப் பட்டவர்கள், சொல்வழக்கில் துபாஷ் என்று மக்களிடையே புழக்கத்தில் இருந்தது. பச்சையப்பா முதலியார் ஒரு துவி பாஷ். தமிழ் ஆங்கில புலமை பெற்றவர். அவர் ஒன்றும் பணக்காரர் அல்ல. ஏழ்மையானவர்தான். இருமொழி புலமையால் அந்காலத்தில் ட்ரான்ஸ்லசன் செய்து ஆங்கிலேயர்களுக்கு தந்து பெரும் பொருள் ஈட்டினார். அவர் கல்வி தந்தை, காஞ்சியிலும் சென்னையிலும் பல்வேறு பள்ளி கல்லூரிகளை நிறுவினார் பெண்களுக்காகவே தன் மனைவியின் பெயரில் கல்லூரி நிறுவினார். துபாஷ் பட்டம் பணக்காரர்களுக்கு பிராமணர்களுக்கும் தரப்பட்டது என்பது தவறு. ஆங்கிலேய ஆட்சியின் பொது நாடு முழுதும் உள்ள துவிபாஸ்கள் மொழி மாற்றம் செய்யும் பொது சில பல விஷயங்களை தங்களின் சாதகத்திற்கு ஏற்ப மாற்றி செய்து பெரும் பொருளை ஈட்டியது உண்டு என்று எழுதப் பட்டிருக்கிறது. பிராமணர்கள் மட்டுமல்லாமல் கோவில்களில் அர்ச்சனை செய்த அனைத்து ஜாதியினரையும் உயர் ஜாதியினர் என்று மாற்றி விட்டார்கள். புலால் உண்ணாதவர்கள் அனைவரையும் உயர் ஜாதியினர் என்று பல ஆண்டுகாலமாக அவர்களை மட்டம் தட்டி சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பை ஒதுக்கி அவர்களை ஒதுக்கி ஓரம்கட்டி விட்டார்கள். தாழ்த்தப் பட்ட ஜாதி என்று கூறி அளவிற்கு அதிக சலுகைகள் அதிகாரங்கள் துஸ்பிரயோகங்கள் செய்ய அனுமதி என்று சமுதாய சீர்கேட்டிற்கு வழிகோலி விட்டார்கள். உயர் ஜாதியினர் கல்வியை மற்றவர்களுக்கு போதிக்க வில்லையா? அப்படி என்றால் அனைவருக்கும் கல்வி யாரிடமிருந்து வந்தது? சில அநீதிகள் சமூக நீதி என்ற பெயரில் தொடர்கின்றன. நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாடியது பாரதி.
Rate this:
Share this comment
sudha - Chennai,இந்தியா
10-மே-201719:15:55 IST Report Abuse
sudhaதாழ்த்தப் பட்ட ஜாதி என்று கூறி அளவிற்கு அதிக சலுகைகள் அதிகாரங்கள் துஸ்பிரயோகங்கள் செய்ய அனுமதி என்று சமுதாய சீர்கேட்டிற்கு வழிகோலி விட்டார்கள். உயர் ஜாதியினர் கல்வியை மற்றவர்களுக்கு போதிக்க வில்லையா??? -> அரசின் சட்டங்களால் அவை வழி இல்லாமல் செய்தது, பள்ளிக்கு சென்றால் கூட அவர்கள் எப்படி நடத்த பட்டனர் என்பதை மீண்டும் விளக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன். அதிக சலுகைகள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. இன்றைய காலகட்டத்தில் மெடிக்கல் மற்றும் தொழில் நுட்ப படிப்பிற்கு வித்யாசம் மூன்றில் இருந்து நான்கு மதிப்பெண்கள் வித்தியாசப்படலாம், அதனால் எவரும் தகுதி இல்லதவர்களமுடியாது. அனைவரது கேள்வி இதனால் பலனடைந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அதையே எதிர் பார்ப்பது குற்றமாக பார்க்க படுகின்றது. இதில் எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், பல நூறு ஆண்டுகளாக அணைத்து பலன்களையும் அனுபவித்தவர்கள் இரண்டு தலைமுறைகள் நன்றாக உருவாவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் வேதனை. அணைத்து சமுதாயமும் சுயநலமாக மட்டுமே யோசித்தலின் விளைவு இது....
Rate this:
Share this comment
sundara pandi - lagos ,நைஜீரியா
12-மே-201722:25:16 IST Report Abuse
sundara pandiசுதா அவர்களே, சட்டங்களும் சலுகைகளும் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றப்படவேண்டாமா. மேல் ஜாதி என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் ஜாதியினர் , பல்வேறு நிலைகளிலும் புறம் தள்ளப்பட்டு வறுமையில் தான் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? கல்வியில், மற்ற அரசு சலுகைகளில் என அனைத்து விதங்களிலும் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசு சலுகைகளை பெற்றுக்கொள்ளும் தகுதியுடைய சமூகத்தினர் மீண்டும் மீண்டும் சலுகைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. காலம் மாறிவிட்டது , சட்டங்களை திருத்தவேண்டிய நேரம் இது...
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
07-மே-201706:36:32 IST Report Abuse
Rajarajan அருமையான கட்டுரை. நன்றி. ஒன்று மட்டும் நிச்சயம். பிராமணர் அல்லாதோர், தங்களை தாங்களே பிற்படுத்தப்பட்டவன்/தாழ்த்தப்பட்டவன் என்ற தங்களை கேவலப்படுத்தும் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து விடுபடாதவரை, இவர்களின் மீதான இந்த சமுதாய கறை, எப்போதும் அகலாது. இவர்களே மாற்ற விரும்பினாலும், இவர்களது சமுதாயத்தை சேர்ந்த இருவரால் இந்த நிலையை மாற்றவே இயலாது. ஒன்று, ஜாதி கட்சி/ ஜாதி அரசியல் செய்யும் தலைவர்கள். மற்றொன்று, போட்டி இல்லாத/ ஜாதி பெயரில் குறுக்கு வழியில் தங்களது வாரிசுகள் கல்வி மற்றும் வேலையில் இடவொதுக்கீடு பெற நினைப்பவர்கள். இந்த நிலையில், வீணாக பிராமணரை குறைசொல்வது என்பது, அவர்களது அறியாமைதான் காட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை