"தண்ணீர் காப்போம்.,தலைமுறை காப்போம்” - ஸ்டாலின் வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"தண்ணீர் காப்போம்.,தலைமுறை காப்போம்” - ஸ்டாலின் வேண்டுகோள்

Added : மே 08, 2017 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஸ்டாலின், நீர்நிலைகள், தண்ணீர், பேஸ்புக், அறிக்கை

சென்னை : தண்ணீர் காப்போம், தலைமுறை காப்போம் என்ற தலைப்பில் பேஸ்புக்கில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் கடந்த ஆறு வருடங்களாக தமிழகத்தின் ஆறுகள் எல்லாம் பாலை நிலங்களாக, அதுவும் மணல்கூட இல்லாத பாலை நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனையாகும்.
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசின் வேளாண்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை போன்றவற்றில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளாலும் இன்றைக்கு தமிழக மக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் பாசனத்திற்கு நீர் கிடைக்காமலும் தவிக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை காட்டாத அதிமுக அரசின் நடவடிக்கைக்காக காத்திருந்தால் இனி பலனில்லை.என்பது மட்டுமல்ல விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்களை தீர்க்க வேறு வழியில்லை என்ற நிலையில், "நமக்கு நாமே" என்ற முறையில், நமது தமிழக மக்களின் தாகம் போக்கவும், தமிழகத்தில் வறண்டு கிடக்கும் வயல்களின் வயிறு நிறையவும், அதன் காரணமாக விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்கவும் கருதி நேற்று குளத்தைத் தூர் வாரும் பணியைத் தொடங்கினேன்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் அனுமதித்தால் மட்டுமே தொண்டர்களை கருணாநிதி சந்திப்பார் என்றும், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆங்காங்கு உள்ள குட்டைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், ஆறுகள் ஆகியவற்றை மேம்படுத்தவும், பாதுகாத்திடவும் கழகத்தினர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். மாவட்டக் கழகச் செயலாளர்களில் தொடங்கி நகர ஒன்றிய பேரூர்கிளைச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் பொதுநல அமைப்புகளுடன் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் இணைத்து, உரிய அனுமதியினைப் பெற்று இத்தகையப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சொல்லால் அரசுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையைவிட, இந்த செயல் கடும் எச்சரிக்கையாக அமையட்டும் அ.தி.மு.க. அரசுக்கு. தண்ணீரைக் காத்து, தலைமுறையைக் காக்கும் பணியில் இன்றே இப்போதே களம் காண்பீர். தமிழகம் காப்பீர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
12-மே-201712:49:18 IST Report Abuse
Dhanraj Jayachandren நடிகன்டா நடிகன்டா
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-மே-201718:28:40 IST Report Abuse
Cheran Perumal கோவை காருண்யா பல்கலை வளாகத்தினுள் எத்தனை நீர்நிலைகள் மூடப்பட்டனவோ அதற்கு ஈடாக வெகுமதி பெற்ற தனது சகோதரியையும் சேர்த்துக் கொண்டு தூர்வாரட்டும். பாவம் கொஞ்சமாவது தொலையும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-மே-201716:50:14 IST Report Abuse
Endrum Indian தேர்தல் சீக்கிரம் வரும் என்ற நைப்பாசையில் மக்கள் முன் ஒரு வெற்றிசெல்வனாய் இருப்பது போல் ஒரு பில்டப்பை கொடுக்கின்றது இந்த டுபுக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X