ஜூன் 3 ல் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜூன் 3 ல் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

Updated : மே 09, 2017 | Added : மே 08, 2017 | கருத்துகள் (138)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கருணாநிதி, திமுக, வைரவிழா, பிறந்தநாள் விழா, தொண்டர்கள்

சென்னை : உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஆண்டு டிசம்பருக்கு பிறகு கட்சியினர் யாரையும் சந்திக்கவில்லை.
இந்நிலையில் ஜூன் 3 ம் தேதி அவரது 94 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. மிக பிரம்மாண்டமாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ள இந்த விழா சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இவ்விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும், இவ்விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்த கொள்ள உள்ளதாகவும் திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.பல மாதங்களுக்கு பிறகு தற்போது கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார். கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி நேரில் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



ஜூன் 3ல் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

Advertisement




வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
09-மே-201701:58:06 IST Report Abuse
SaiBaba 94 வயதில் ஒரு உடம்பு சரியில்லாத மனிதரை மேடையில் அமர்த்தி விழா எடுத்தால் அதை விட துன்புறுத்தல் ஒரு மனித ஜென்மத்திற்கு கொடுக்க முடியாது புகழ்,பதவி வசம் உள்ள பற்று யாரை விட்டது. ஜோதிபாசு முதல்வராக இருந்தவரையில் மே.வங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்ற முடியவில்லை. உடம்பு தளர்ந்ததும் அவராகவே ஒதுங்கிக்கொண்டார்.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ்அரசு அரசியலில் கொஞ்சம் நாகரீகம் இருந்தால் நல்லது என்பது என்னுடன் தாழ்மையான கருத்து.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh R - Chennai,இந்தியா
08-மே-201722:51:06 IST Report Abuse
Venkatesh R நல்லதுதான். கருணாநிதி எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறாரா அல்லது காட்சி பொருளாக பயன்படுத்தப்படுவாரா என்பது தெரிந்து விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X