தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை! Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 தமிழகம் , நீதிபதி, கர்ணன், 6 மாதம், சிறை, தண்டனை!

புதுடில்லி: கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, சி.எஸ்.கர்ண னுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித் துள்ளது. ஐகோர்ட் நீதிபதிக்கு, கோர்ட் அவ மதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப் படுவது இதுவே முதல் முறை.

 தமிழகம் , நீதிபதி, கர்ணன், 6 மாதம், சிறை, தண்டனை!

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன், 61, சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்தபோது, தலைமை நீதிபதி உட்பட, 20 நீதிபதிகள் மீது பல்வேறு
குற்றச்சாட்டுகளை கூறினார். இது குறித்து, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு, அவர் கடிதம் எழுதி இருந்தார்.

இதை கோர்ட் அவமதிப்பு செயலாக எடுத்துக் கொண்டு, சுப்ரீம் கோர்ட், சுயமாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமை யிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து வந்தது.


மனநல பரிசோதனை:


இதனிடையில், கோல்கட்டா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட, நீதிபதி கர்ணன், நீதித்துறை மற் றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. மேலும், அவரது மனநலம் குறித்த மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ள, உத்தரவிட்டி ருந்தது.

நீதிபதி கர்ணன் மீதான கோர்ட் அவ மதிப்பு வழக்கு, சுப்ரீம் கோர்ட்அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப் பட்டுள்ளதாக, அமர்வு கூறியது. 'அவருக்கு என்ன தண்டனை அளிக்கலாம்' என, மூத்த வழக்கறிஞர்களிடம், அமர்வு கேட்டது.

சென்னை ஐகோர்ட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கே.கே.வேணுகோபால், ''நீதிபதி கர்ணன், வரும், ஜூன், 11ல் ஓய்வு பெறுகிறார். அதன்பின்பே, தண்டனை அளிக்க வேண்டும். ஒரு நீதிபதிக்கு தண்டனை அளித்தால், அது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்திவிடும்,'' என, கூறினார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த, சுப்ரீம் கோர்ட் அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
நீதிபதியாக இருப்பதை காரணமாக வைத்து, கோர்ட் அவமதிப்பு வழக்கில், கர்ணன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்தான்,

Advertisement

நீதித் துறைக்கு களங்கம் ஏற்படும். இந்த வழக்கில், அவரை நாங்கள் நீதிபதியாக பார்க்கவில்லை. நீதிக்கு முன்னாள் அனைவரும் சமமே.

சிக்கல் இல்லை


அதனால், கோர்ட்டை அவமதித்தது, நீதித் துறையை அவமதித்தது போன்ற குற்றங்களை செய்துள்ள நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படு கிறது. அவரை உடனே கைது செய்ய, மேற்குவங்க டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.தன்னிடம் மனநலப் பரிசோதனை நடத்த வந்த மருத்துவர் குழுவிடம், தான் நல்ல உடல்நலம் மற்றும் மன நலத்துடன் இருப்பதாக கர்ணன் கூறியுள்ளார்;

அதை மருத்துவர் குழுவும் மறுக்கவில்லை. அதனால், அவருக்கு தண்டனை விதிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.மேலும், நீதிபதி கர்ணன் கூறும் எந்தக் கருத்துகளையோ, உத்தர வுகளையோ, இனி பத்திரிகை, 'டிவி' போன்ற ஊடகங்கள் வெளியிடக் கூடாது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு, தீர்ப்பில் கூறியுள்ளது.

இதற்கிடையே, கோல்கட்டாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு திரும்பி உள்ளார் நீதிபதி கர்ணன். அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், முதல்முறை யாக, ஒரு ஐகோர்ட் நீதிபதிக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது, நீதித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
13-மே-201711:28:08 IST Report Abuse

A shanmugamதலித் நீதிபதியாக இருப்பதால் இவ்வளவு நாளைக்கு இழுத்தடித்து கொண்டு "கண்ணாம் மூச்சி விளையாட்டு விளையாடுகிறர்கள். ஆனால் வேற ஜாதியை சேர்ந்த நீதிபதியாக இருந்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் தள்ளி தும்சம் பன்ணிஇருபாங்கோ சட்டத்தின் முன் "தலித்" ஜாதியை தவிர்த்து மற்ற பின்தங்கிய மிகவும் பின்தங்கிய ஜாதி அனைவரும் சமம்.

Rate this:
VELAN S - Chennai,இந்தியா
10-மே-201722:55:33 IST Report Abuse

VELAN Sவந்துட்டார்லா கர்ணன் தலைப்பு செய்திலே, சும்மா இருந்தா தலைப்பு செய்திலே வர முடியுமா, நோகாமல் நொங்கு திங்கணும்னு பார்க்கிறீங்களே, சும்மா இல்லை , கர்ணன் ஹார்ட் ஒர்க் பண்ணி தலைப்பு செய்திலே வந்திருக்காரு, அது மாதிரி எல்லோரும் முயற்சி செய்யங்கோ .

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
10-மே-201722:26:01 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஓர் நீதிபதிக்கு குற்றமாக தெரிவது மற்றோர் நீதிபதிக்கு குற்றமாக தெரிவதில்லை எப்படி

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
10-மே-201722:18:53 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஏழை பேச்சு மேடைக்கேராது என்ற கூற்றும் உண்டு. யார் செய்யினும் குற்றம் குற்றமே.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-மே-201721:57:56 IST Report Abuse

தமிழ்வேல் பத்திரிகை சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
10-மே-201721:40:53 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்நீதிபதிகளுக்கு இடையான ஈகோ பிரச்சினை விஸ்வரூபமெடுத்து அசிங்கமாக வெளிப்பட்டுள்ளது.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
10-மே-201717:01:55 IST Report Abuse

Balajiதமிழகத்தை சார்ந்தவர் மீண்டும் ஒரு மோசமான உதாரணத்துக்கு ஆளாகியிருப்பது வருத்தத்திற்குரியது......... சாதியை காரணம் காட்டி தப்பிக்கொள்ளலாம் என்று நினைத்தார்........ தற்போது எனக்கு ஒரு சந்தேகம்....... இவருக்கு எதிராக தீர்ப்பு வருவதற்கு முன்பே தண்டிக்கப்பட்டுள்ள நீதிபதி உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்........ இப்படி ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடமிருக்கா???? அப்படியே இருந்தால், இவர் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள் இவருக்கு தீர்ப்பு வழங்க முடியுமா??????? தலையை சுற்றுகிறது....... யாராவது சட்டம் தெரிந்தவர்கள் விளக்குங்கள்.................

Rate this:
gmk1959 - chennai,இந்தியா
10-மே-201716:57:41 IST Report Abuse

gmk1959நான் பைத்தியம் இல்லை - எந்த பைத்தியமாவது தான் பைத்தியம் என்று ஒத்துக்கொண்டு இருக்கிறதா ??? நான் பைத்தியம் தான் பைத்தியத்தின் வாக்குமூலம் ஏற்றுக் கொள்ள முடியாது ???? இறுதி முடிவு ??? இந்த கூத்தை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கும் கோடான கோடி இந்திய குடிமக்கள் தான் பைத்தியங்கள்

Rate this:
suresh - chennai,இந்தியா
10-மே-201716:30:15 IST Report Abuse

suresh//தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன்// சுந்தர் பிச்சை அவர்களின் சம்பளத்தை குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட தினமலர், அவரை இந்தியர் என குறிப்பிட்டு தமிழகத்தை சேந்தவர் என குறிப்பிடாமல் தவிர்ததது(அல்லது மறந்ததோ), ஆனால் கர்ணன் அவர்களை தமிழகத்தை சார்ந்தவர் என குறிப்பிடுகிறது, என்ன உள் குத்தோ ?

Rate this:
V.Ravichandran - chennai .,இந்தியா
10-மே-201716:24:34 IST Report Abuse

V.Ravichandranதமிழன்டா

Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement