சிவகாசி ரதியே...சிரிக்கின்ற வெடியே...-பாடலாசிரியர் ஞானகரவேல் 'பளீச்'| Dinamalar

சிவகாசி ரதியே...சிரிக்கின்ற வெடியே...-பாடலாசிரியர் ஞானகரவேல் 'பளீச்'

Added : மே 10, 2017
Advertisement
சிவகாசி ரதியே...சிரிக்கின்ற வெடியே...-பாடலாசிரியர் ஞானகரவேல் 'பளீச்'

பெண்களை மழை, வானம், வானவில், பூ என வர்ணிப்பது பாடலாசிரியர்களின் வழக்கமாக இருக்கும். ஆனால் 'பூ' படத்தில் பெண்ணை வர்ணிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும்.'சிவகாசி ரதியே சிரிக்கின்ற வெடியே, உன்னை எந்த காலம் பார்த்தது தாயி, நீ அந்தக்கால ஐஸ்வர்யா ராய்' என, நடிகை பரவை முனியம்மாவை பார்த்து பாடகர் முத்துக்கருப்ப தேவர் பாடுவது போல பாட்டு இடம் பெற்றிருக்கும். பாடலில் இடம் பெற்ற வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பாடலாசிரியர் ஞானகரவேல், 36.தினமலர் வாசகர்களுக்காக அவருடன் பேசியதிலிருந்து...* சினிமாத்துறையில் எப்படி?விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மற்றும் தேவாங்கர் பள்ளிகளில் படித்தேன். பட்டப்படிப்பை மதுரை அருளானந்தர் கல்லுாரியிலும், மேற்படிப்பை திருச்சியிலும் முடித்தேன். பள்ளியில் படிக்கும் போதே கவிதை, கட்டுரைப்போட்டியில் பரிசு வாங்கியது தான் சினிமாவிலும் பாடல் எழுத காரணமாக அமைந்தது.* மனதை ஈர்த்த சம்பவம்?2005ல் 'பூமியை சுமந்த புல்வெளி' என்ற என் கவிதை தொகுப்பை வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் மு.மேத்தா ஆகியோர் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தியது என்னை நெகிழ வைத்தது.* சினிமாவில் எழுதிய பாடல்கள்?60 சினிமாக்களில் பாடல்கள் எழுதியுள்ளேன். இதில் 35 பாடல்கள் வெளிவந்துள்ளன. நகரம் படத்தில் 'வைகை சிரிச்சா துாங்காநகரம், பிரிவேது பிரிவேது நட்புக்கு பிரிவேது...' ஒன்பதுல குரு படத்தில் 'அழையாதே சும்மா சும்மா அழையாதே' , கிருமி படத்தில் அனைத்து பாடல்கள், ஆண்டவன் கட்டளை படத்தில் நான்கு பாடல்களும் எழுதியது குறிப்பிடத்தக்கவையாகும். * பெயர் வாங்கி கொடுத்த பாடல்?முதலில் வெளியாகி உற்சாகப்படுத்தியது சிவகாசி ரதியே... என்ற பாடல் தான். * தற்போது கைவசமுள்ள சினிமாக்கள்?சிகை, அதி மேதாவி, பதுங்கி பாயனும் தலை, பட்ஷி, விசிறி, கள்ளன் உட்பட பத்து சினிமாக்களுக்கு பாடல் எழுதி வருகிறேன்.* பிடித்த பாடல்கள்?நடிகர் சந்திரபாபு பாடல்கள் மிகவும் பிடிக்கும்.* படித்த கவிஞர்கள்?வரி வீச்சு மிக்க பாரதியார், வர்ணனையில் லயிக்க வைக்கும் வைரமுத்து.பாராட்ட: 87544 50701.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X