எஸ்பிஐ., புது ஏடிஎம் 'ஷாக்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எஸ்பிஐ., புது ஏடிஎம் 'ஷாக்'

Added : மே 11, 2017 | கருத்துகள் (66)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எஸ்பிஐ, ஏடிஎம், கட்டணம்

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5000 இருப்பு வைத்திருக்க வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. ரூ.5000 க்கும் குறைவாக இருப்பு வைத்திருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறியது.
இந்த அதிர்ச்சியில் இருந்து வாடிக்கையாளர்கள் மீண்டு வருவதற்குள் அடுத்த அதிர்ச்சி உத்தரவை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, எஸ்பிஐ.,யில் கணக்கு வைத்திருப்போர் எந்த வங்கியின் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை ஜூன் 1 ம் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது.
ஏடிஎம்.,ல் பணம் எடுக்க மட்டுமல்ல பழைய நோட்டுக்களை மாற்றவும், ரூ.5000 க்கு மேற்பட்ட அழுக்கடைந்த மற்றும் கிழிந்த நோட்டுக்களை மாற்றுவதற்கும் இந்த ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-மே-201712:13:46 IST Report Abuse
மலரின் மகள் அனைத்து கிராமங்களிலும் நிறைய நெட்ஒர்க் செய்து வைத்திருக்கிறார்கள். எளிமை படுத்தி இருக்கிறார்கள். சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆப்ஸ் கூட நன்கு இருக்கிறது. நொடியில் பணமாற்றத்திற்கு வசதிகள் உள்ளன. டவுன் தடவை குறைந்திருக்கிறது. அப்படி இருக்க என்துய எஸ் பி ஐ கார்டை வைத்து என் மற்ற வங்கிகளின் எ டீ எம் மில் பணம் எடுக்க வேண்டும். மாதத்திற்கு ஐந்தாயிரம் போதுமானது. அதுவே அதிகம். அதுவும் போக்குவரத்திற்கு பேருந்தில் ஆட்டோவில் செல்வதற்கும், கோவில், பூ வாங்குவது போன்ற சில பரிவர்த்தனைகளை மட்டுமே. மற்ற அனைத்தையும் மருத்துவம், கல்வி கட்டினோம், கூரியர் செலவு, சிறுகடைகளில் பொருட்களை வாங்குவது நுட்பட அனைத்திற்கும் எஸ் பி ஐ பிஓஎஸ் கருவி கொடுத்திருக்கிறது. கமிஷன் இல்லாமல் அனைத்தையும் செய்யலாம். ஐ எம் பி எஸ் மூலம் நொடியில் பணத்தை ஆன்லைனில் ரியல் டைமில் மாற்ற முடிகிறதே. ருபாய் நோட்டுகள் புழக்கத்தை குறைக்க இது போன்று நடவடிக்கைகள் அவசியம். மற்ற வங்கிகள் இன்னும் சில மாதங்களில் நிச்சயம் ஜூலை அல்லது ஒக்டோபரில் கொணரும்.
Rate this:
Share this comment
Cancel
Palanikumar Raju - Dindigul,இந்தியா
12-மே-201709:05:42 IST Report Abuse
Palanikumar Raju கடவுளே..இந்த 25 ரூபாய் கொள்ளை அடுத்தடுத்து முன்னேறி 1000 ரூபாய்க்கு போகாமல் இருக்கணும்..
Rate this:
Share this comment
Cancel
Raja - Bangalore,இந்தியா
12-மே-201708:36:52 IST Report Abuse
Raja டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயன் இப்போது தான் மெதுவாக மக்களை சென்றடைந்து கொண்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை