எதற்கு தர்மசங்கடம்? Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
எதற்கு தர்மசங்கடம்?: ஸ்டாலின்

சென்னை:''தி.மு.க., தலைவர், கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில், பா.ஜ., தலைவர் களை அழைத்து, அவர்களுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்த, நாங்கள் தயாராக இல்லை,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

எதற்கு தர்மசங்கடம்?: ஸ்டாலின்

அவர் அளித்த பேட்டி:



டில்லியில், மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்; அதற்கு, தி.மு.க., நிச்சயம் பக்கபலமாக இருக்கும். 'அரசியல் தலைவர்களை எல்லாம், பா.ஜ.,வுக்கு எதிராக, தி.மு.க., ஒருங்கிணைக் கிறது' என, பா.ஜ., கூறுகிறது. இதுபற்றி கேட்பதற்கான தகுதி, பா.ஜ.,வினருக்கு இல்லை.

'திராவிட இயக்கங்களை ஒழிப்பது தான், எங்களுடைய முதல் வேலை' என, பா.ஜ.,வினர்

சொல்கின்றனர். அப்படி சொல்பவர்களை, கருணா நிதியின் சட்டசபை வைர விழா மேடையில் உட்கார வைத்து, அவர்களுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்த, நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அப்போதே தெரியவில்லையா?


''பா.ஜ., ஆட்சிக் காலத் தில், மூன்று அமைச்சர் பதவிகளை கேட்டுப் பெற்றபோது, நாங்கள் மதவாத கட்சியாக, தி.மு.க.,வுக்கு தெரியவில்லையா...'' என, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தி.மு.க., தலைவர், கருணாநிதியின், 94வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டசபை பணியின் வைர விழா, ஜூன், 3ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இதில் பங்கேற்க, பல கட்சிகளுக்கு, தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இது பற்றி,பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:


கருணாநிதியை பயன்படுத்தி, அவர்கள் அரசியல் செய்கின்றனர். இந்துக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என முடிவெடுத்து, பா.ஜ.,வை, மதவாத கட்சி என, கூறுகின்றனர். இவர்கள், கோவில் கோவிலாக போகவில்லையா? அவர்களை, ஊழல்வாதிகள் என, அடையாளம் கண்டு கொண்டதால், மக்கள் ஓட்டு

Advertisement

போடுவதை நிறுத்தி விட்டனர். தி.மு.க., அழியு ம் கட்டத்தில் இருந்ததால், ஓடோடி வந்து, பா.ஜ.,வுடன் முன்னர் கூட்டணி வைத்தனர். மந்திரி சபையில், தயாநிதி, டி.ஆர்.பாலு, ராஜா போன்றோருக்கு பதவி பெற்றனர். அப்போதெல் லாம், நாங்கள் மதவாத கட்சியாக தெரிய வில்லையா?

அவர்கள், எத்தனை துறவிகளை சந்தித்தனர் என்பது, எங்களுக்கு தெரியும். அரசியல் நாகரி கம் கருதி, அதை சொல்ல மாட்டோம். மக்கள், இவர்களின் உண்மை முகத்தை அறிந்துள்ள தால், தேர்தலில் புறக்கணிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
12-மே-201719:09:48 IST Report Abuse

M.Guna Sekaranஅப்போ நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா ...............இப்படிக்கு கட்டுமரம் ?

Rate this:
venkatasubramani - Cincinnati,யூ.எஸ்.ஏ
12-மே-201718:02:24 IST Report Abuse

venkatasubramaniநல்ல pathivu

Rate this:
NMuthuuselvann Muthuuselvann - tirunelveli,இந்தியா
12-மே-201717:52:18 IST Report Abuse

NMuthuuselvann Muthuuselvannஇதில் புகழ்கின்றவர்கள் மிக்கக்மிக்கக் குறைவு இகழ்கின்றவர்கள் மிக மிக அதிகம் கருணை உள்ளம் கொண்ட தலைவராய் இருந்தால் இப்படி வார்த்தைகள் வருமா

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X