தண்டனையை திரும்ப பெற நீதிபதி கர்ணன் மனு Dinamalar
பதிவு செய்த நாள் :
தண்டனையை திரும்ப பெற நீதிபதி கர்ணன் மனு

புதுடில்லி:கோர்ட் அவமதிப்பு வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 தண்டனையை, திரும்ப, பெற, நீதிபதி, கர்ணன் ,மனு

கோர்ட் அவமதிப்பு வழக்கில், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்த சுப்ரீம் கோர்ட், உடனடியாக அவரை கைது செய்யும்படி, மேற்கு வங்க மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்நிலை யில், நீதிபதி கர்ணன் கோல்கட்டாவிலிருந்து சென்னை சென்றார்.

அவரை கைது செய்வதற்காக, கோல்கட்டா போலீசார், நேற்று முன்தினம் சென்னை சென்ற னர். அவரை, கோல்கட்டா போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி,

ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு முன், வழக்கறிஞர் மேத் தீவ்ஸ் ஜே நெடும்பரா, மனு தாக்கல் செய்தார். நீதிபதி கர்ணன், தன் சார்பில் ஆஜராக அதிகாரம் அளித்துள்ளார் என்பதற்கான ஆவணங்களையும், அவர் தாக்கல் செய்தார்.அப்போது, 'நீதிபதி கர்ணன் எங்கிருக்கிறார்?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பிய தற்கு, ''அவர் சென்னையில் தான் இருக்கிறார்,'' என, வழக்கறிஞர் பதில் அளித்தார். இதையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் அமர்வு அறிவித்தது.

போலீசார் திணறல்


சென்னையில் தங்கியிருந்த, கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தலைமறைவாக உள்ள தால், அவரை கைது செய்ய முடியாமல், மேற்கு வங்க போலீசார் திணறி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த கர்ணநத்தம் கிராமத்தை சேர்ந்தவர், கர்ணன். இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது,தலைமை நீதிபதி உட்பட, 20 பேர் மீது, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால், உச்ச நீதிமன்ற பரிந்துரையின் படி, பிப்ரவரி மாதம், கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரி வித்து, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.

நீதிபதிகள் தொடர் பான ஊழல் பட்டியலையும்,

Advertisement

அவர் பிரதமருக்கு அனுப்பினார். இதனால், உச்ச நீதி மன்றம், அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சென்னை வந்த கர்ணன், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளி கையில் தங்கி இருந்தார். அவரை கைது செய்ய, மேற்கு வங்க, டி.ஜி.பி., மற்றும் கூடுதல், டி.ஜி.பி., உள்ளிட்ட அதிகாரி கள், சென்னை வந்தனர்.தகவல் அறிந்த கர்ணன், தலைமறைவாகி உள்ளார். அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல், மேற்கு வங்க போலீசார் திணறி வருகின்றனர். அதனால்,சென்னை போலீஸ் கமிஷனர், கரன் சின்கா வை சந்தித்து, உதவி கேட்டனர். அதையடுத்து, திருவல்லிக் கேணி உதவி கமிஷனர் தலைமை யில் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க போலீசார், நேற்று தமிழக டி.ஜி.பி., - டி.கே. ராஜேந்திரனை சந்தித் தனர். அப்போது, கர்ணன் தங்கியுள்ள இடத்தை, உளவு போலீசார் வாயி லாக, கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, சென்னை, சூளைமேடு, சவுராஷ்டிரா நகரில் உள்ள, கர்ணனின் மகன் வீட்டில், மேற்கு வங்க போலீசார் தேடுதல் நடத்தினர். கர்ணன் தங்கியிருந்த, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், வருகை பதி வேட்டை ஆய்வு செய்தனர்; அவரது உதவி யாளரிடமும் விசாரணை நடத்தினர். நேற்று இரவு, பட்டினம்பாக்கத்தில் உள்ள, அவரது உறவினர் வீட்டிலும் விசாரித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மே-201723:16:21 IST Report Abuse

ரங்கன்கிரிமினல்கள் தலைமறைவானால் அர்த்தம் உண்டு....ஆனா....

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
12-மே-201720:16:59 IST Report Abuse

Sivagiriமன்னிப்பு கேட்டு . . . பின் மனதில் வைத்து பழிவாங்குவதும் ராஜதந்திர வழக்கம்தான் . . . . தற்போது தமிழ்நாட்டிற்கே கிரகம் சரியில்லை . . . தமிழனுக்கும்தான் . . . காலம் கருதி இருப்பர் கலங்காது . . .

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
12-மே-201720:13:25 IST Report Abuse

Sivagiriபுகார் தெரிவித்தால் புகார் கொடுத்தவரையே குற்றவாளி ஆக்கி உள்ளே தள்ளி பெண்டை நிமித்தி குற்றத்தை தானே செய்ததாக ஒப்புக் கொள்ள செய்வது தமிழ்நாட்டில் சாதாரணம் தில்லியிலும் அப்படித்தான் போல . . . பெருந்தன்மையாக நேரிலோ அல்லது போனிலோ நேரடியாக பேசினாலே . . . ஈகோ பிரச்சினை தீர்ந்து இருக்கும் . . . கல்வியினால் சாதி ஒழியும் என்பது பொய்யாகி விட்டது . . . ஜூனியர்-களை அரவணைத்து செல்வதும் சீனியர்களுக்கு அழகு. . .

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X