பிளஸ் டூவிற்கு பிறகு...| Dinamalar

பிளஸ் டூவிற்கு பிறகு...

Updated : மே 13, 2017 | Added : மே 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement


பிளஸ் டூவிற்கு பிறகு...


பிளஸ் டூ தேர்வு முடித்து ஆயிரத்திற்கு மேல் மார்க்குகள் எடுத்தும் சோர்ந்து போய் குழப்பத்தில் உள்ள மாணவர்களை இந்த காலகட்டத்தில் பார்க்கமுடிகிறது,மாணவர்களை விட பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுடனேயே இருக்கின்றனர்.மாணவன் என்ன பிரியப்படுகிறானோ அதை படிக்கவையுங்கள் என்று எளிதாக சொல்லிவிடுகின்றனர் ,ஆனால் மதிப்பெண் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் 'உனக்கு எல்லாம் இதற்கு இந்த ஆசை 'என்று உதைத்து தள்ளாத குறையாக ஏளனத்துடன் விரட்டிவிடுகிறது.

மருத்துவக் கல்வியும் கிடைக்காமல் என்ஜீனிரிங்கும் கைகூடாது என்ற நிலையில் பணம் கட்டி தனியார் பொறியியல் கல்லுாரியில் படிக்கவைக்க இயலாமல், ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் கல்லுாரியில் குவியும் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் கையை பிசைந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்குமாக சேர்த்து பத்திரிகை தகவல் அலுவலகமும்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து இலவசமாக ஒரு கவுன்சிலிங் நடத்தியது.
டெக்னோகிராட்ஸ் இன்டியா காலேஜ் பைன்டர் நிறுவன நிர்வாகி நெடுஞ்செழியன் இந்த கருத்தரங்கை நடத்திச் சென்றார்.அவர் பேச்சு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.பிளஸ் டூவிற்கு பிறகு படிப்பதற்கு மத்திய அரசு சார்பில் நிறைய வேலை வாய்ப்புள்ள படிப்புகள் இருக்கின்றன தமிழக மாணவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.இந்த படிப்பு படிப்பதில் உள்ள சவுகரியம் கட்டணம் நியாயமாகவும் குறைவாகவும் இருக்கும் என்பதுடன் மேற்படிப்பு படிப்பதற்கும் இதில் வாய்ப்புகள் நிறைய உண்டு.மருத்தும் மற்றும் பொறியியல் படிப்பைத் தாண்டி நுாற்றுக்கணக்கான படிப்புகள் இருக்கின்றன இப்போதும் விண்ணப்பிப்பதற்கு நேரம் இருக்கிறது விரைந்து செயல்படுங்கள்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பு சொல்லிக்கொடுக்கும் 95 சதவீத பொறியியல் கல்லுாரிகள் மாணவர்களை பணம் காய்ச்சி மரமாகத்தான் நினைக்கின்றன,தரமான படிப்பு இல்லை படித்தாலும் பாஸாவது சிரமம், பாஸானாலும் வேலை கிடைப்பது அதைவிட சிரமம்.

அதே போல சென்னையில் உள்ள புகழ் பெற்ற தனியார் பொறியியல் கல்லுாரியில் நிறைய செலவழித்து படித்து முடித்து வாங்கும் சம்பளத்தைவிட ,காந்திகிராம பல்கயைில் குறைந்த செலவில் படித்து முடித்து அதிகம் சம்பளம் வாங்கமுடியும்.
எந்தப் படிப்பு கிடைத்தாலும் படியுங்கள் அந்தப் படிப்பில் இரண்டாவது வருடம் வரும்போது படிக்கும் படிப்பிற்கு தொடர்பாக உள்ள மற்ற படிப்புகளையும் படியுங்கள் மூன்று வருட படிப்பை முடிக்கும் போது மிகவும் பயனுடையதாக இருக்கும், அதே போல உங்கள் திறமையை வெளிப்படுத்தும் தன்மையை வளர்த்துக் கொண்டால் எந்தப் படிப்பு படித்திருந்தாலும் எளிதில் ஜெயிக்கலாம்.

இந்தப்படிப்பு படித்தால்தான் இந்த துறையில் ஜொலிக்கமுடியும் என்பதும் பொய் டைரக்கடர் மணிரத்னம் எந்த கல்லுாரியிலும் விஷ்வல் கம்யூனிகேசன் படிப்பை படிக்கவில்லை,விஷ்வல் கம்யூனிகேசன் படித்த ஆயிரக்கணக்கானவர்கள் இதுவரை எந்தப்படமும் இயக்கவில்லை

ஒரு விண்ணப்பத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் உங்களுக்கு விருப்பமான படிப்பு தொடர்பான அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பித்து வையுங்கள் அதற்கு தயராகிக் கொள்ளுங்கள் எளிதில் ஜெயிக்கலாம்.மேலும் சந்தேகங்களுக்கு நெடுஞ்செழியனை தொடர்பு கொள்ளவும் எண்:044-42303300
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை