ஸ்டிரைக்கால் பாடம் கற்குமா அரசு? தனியார் பஸ்களுக்கு வழி விட வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டிரைக்கால் பாடம் கற்குமா அரசு? தனியார் பஸ்களுக்கு வழி விட வேண்டும்

Updated : மே 16, 2017 | Added : மே 14, 2017 | கருத்துகள் (100)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஸ்டிரைக், பாடம் கற்குமா அரசு?, தனியார் பஸ், வழி விட, வேண்டும்

சென்னை:பொதுமக்களுக்கு நல்ல சேவை வழங்கவும், பல ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணம் வீணாகாமல் தடுக்கவும், திடீர் ஸ்டிரைக்கால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அரசு போக்குவரத்து தனியார் மயமாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.அரசு ஸ்டிரைக் குறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் போக்குவரத்துதுறை சிறப்பாக இருக்கிறது.இங்குதான் கிலோ மீட்டருக்கு 42 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இது எல்லா மாநிலங்களை விட குறைவு . இதையும் தாண்டி அரசு பஸ்கள்,தனியார் பஸ்களுடன் போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது.1970களில் அதிக பஸ்கள் வைத்திருந்த டி.வி.எஸ். நிறுவனம் காமராஜரை ஆதரித்ததால், தனியார் பஸ்கள் தேசியமாக்கப்படும் என கருணாநிதி அறிவித்தார்.


ஆரோக்கியமான போட்டி

இப்போது, தனியார் பஸ்கள் 20 சதவீதமும் (4000 பஸ்கள்) அரசு பஸ்கள் 80 சதவீதமும்(20,000 பஸ்கள்) இயக்கப்படுகின்றன. மேலும் உண்மையான போட்டி கிடையாது. அரசு பஸ் ஆதிக்கமே இருக்கிறது.எனவே தனியார் பஸ்கள் அதிகரித்தால் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்.


நஷ்டத்துக்கு காரணம்

கடந்த 40 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக்கு ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மோசமான நிர்வாகத்தால், ஊழியர்களுக்கு வரவேண்டிய பணப்பலன்கள் நிலுவைத்தொகை ரூ.1,500 கோடி உள்ளது. இதற்கு காரணம் அரசு போக்குவரத்து துறையில் பணம் இல்லை.மேலும் அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு அரசும் வேண்டியவர்களுக்கு வேலை, உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் . இதுவே நஷ்டத்துக்கு காரணம்.தனியார் பஸ்கள் அதிகமாக இயக்கினால் அரசு பஸ்களுக்கு பயம் இருக்கும். அவ்வப்போது பஸ் கட்டணங்களை மாற்றி அமைக்கப்பட வேண்டும். 2001 ஆம் ஆண்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 2011ல் தான் உயர்த்தப்பட்டது.


கல்வி மற்றும் சுகாதாரத்துறை

டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே பஸ் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் நஷ்டத்தை குறைக்கலாம். அரசு ஓட்டுக்காக செயல்பட கூடாது. தி.மு.க. ஆட்சியில் பஸ் கட்டணமே உயர்த்தப்படவில்லை. ஜெ. ஆட்சியில்தான் இரண்டு முறை (2001, 2011)பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மட்டுமே அரசு நுழைய வேண்டும். மற்ற துறைகளில் நுழையக்கூடாது.தனியார் துறையில் 1 பஸ்சுக்கு ஐந்தரைஆட்களே இருக்கிறார்கள். ஆனால் அரசுதுறையில் 1 பஸ்சுக்கு ஏழரை ஆட்கள் இருக்கிறார்கள்.தனியார்மயமாக்கினால் நல்ல முறையில் பஸ்களை இயக்கி பொதுமக்களுக்கு சுகமான நல்ல சேவையை தர முடியும் இவ்வாறு கூறினார்.மதுரையை சேர்ந்த தனியார் பஸ் அதிபர் ஒருவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தனியார் பஸ்கள் ஓடாமல் இல்லை. சென்னை மதுரை குமரி, நீலகிரி தவிர மீதி அனைத்து மாவட்டங்களிலும் நகர் மற்றும் மொபசல் பஸ்கள் இயங்குகின்றன. 1970-ல் தனியார் மயமாக்கப்பட்டது அப்போதைக்கு பொருந்தி இருக்கலாம். இன்றைய கால கட்டத்தில் அரசே தொழில் செய்வது மக்களின் வரிப்பணம் வீணாவது தான் மிச்சம். திறமையாக நடத்துவது கடினம். இரண்டு திராவிட ஆட்சியிலும் உச்சத்தில் இருக்கும் ஊழல்களினால் எவ்வளவு திறமையாக நடத்தினாலும் வருடத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுவதை தடுக்க முடியாது.


அரசு வேலையல்ல

15 வருடங்களுக்கு முன்னர் தொலை தொடர்பு துறையில் பி.எஸ்.என்.எல் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இப்படித்தான் நஷ்டமும், முன்னேற்றமும் இல்லாமல் இருந்தன. தனியார் மயமாக்கத்தை ஊக்கப்படுத்திய உடன் இன்று டெலிபோன் துறை வளர்ச்சி மிக அபரிமிதமாக உள்ளது. டிராய் போல் அமைப்பை ஏற்படுத்தி அரசே டிக்கெட் விலையை நிர்ணயிக்க அமைப்பை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்துவதை மட்டும் அரசு கையில் வைத்திருக்க வேண்டும். பஸ்சை நடத்துவது அரசின் வேலையல்ல. இவ்வாறு கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
16-மே-201709:04:05 IST Report Abuse
Jaya Prakash பேசாம அரசாங்கத்தையே தனியார் மயம் ஆக்கிவிடலாம்... ஒவ்வொரு துறையை ஒன்னு ஒண்ணா தனியார்மயம் ஆக்கி நேரத்தை வீணடிப்பதை விட பேசாம இந்த செயல் படாத அரசையே தனியார்மயம் ஆக்கி விடலாம்... ஊழியர்களை சொல்லி குற்றம் இல்லை..... அரசு ஒழுங்கா நேர்மையா கண்டிப்போடு இருந்தா துறைகளும் நன்றா இருக்கும்.... ஊழியர்களும் ஒழுங்கா இருப்பர்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-மே-201707:54:37 IST Report Abuse
Srinivasan Kannaiya அவங்க எங்கே கத்துக்க போறாங்க... மக்கள்தான் கத்து கொள்ளுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Prabakaran NV - Singapore,சிங்கப்பூர்
16-மே-201707:43:56 IST Report Abuse
Prabakaran NV அதெப்படி ஊழியர்களின் ஓய்வு ஊதியத்தை (Provident Fund ), இன்சூரன்ஸ் பணத்தை 4500 கோடி அவர்களின் கணக்கில் போடாமல் கொள்ளை அடித்துவிட்டு, இப்போது அவர்களுக்கு 450 கோடி தருகிறோம் (அதுவும் நேற்றைய போராட்டத்திற்கு பின்) என்று சொன்னால் நியாயமா ? அது போல் அவர்களது மாதாந்திர pention பணத்தை (150 கோடி) 5 வருடங்களாக வழங்காமல் அதையும் வாயில் போட்ட அதிகாரிகளை பற்றி ஒருவரும் கண்டுகொள்ளாமல் தங்கள் பாதிக்கப்பட்டால் உடனே கூக்குரல் இடுபவர்களை என்ன சொல்வது ... முதலில் தவறு செய்த அனைத்து உயர் அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுங்கள். ஊழல் செய்ததாக ரெய்டு செய்யப்பட போக்குவரத்து துறை அமைச்சர் (விஜய பாஸ்கர்) மீதும் நடவடிக்கை எடுங்கள். நாம் அனைவரும் வேலை பார்க்கும் கம்பனியில் ஓய்வூதியம் தராமல் நம்முடைய மேலாளர் தின்று விட்டால் என்ன செய்வோம்?
Rate this:
Share this comment
Cancel
Shree Ramachandran - chennai,இந்தியா
16-மே-201707:32:53 IST Report Abuse
Shree Ramachandran திராவிட கட்சிகள் தமிழக போக்குவரத்து துறையை முழுக்க நாசப்படுத்தி இருக்கிறார்கள்.ஊழியர்களின் பணத்தில் பட்டாசு வெடிக்க நிர்வாகத்திற்கு என்ன உரிமை? ஒய்வு பெற்றபின் அவரது பணத்தை கொடுக்க வேண்டியத்து தானே? அரசியல் காரணங்களுக்காக அரசு போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தவில்லை. மற்றும் பராமரிப்பு வேலைகள் எம் எல் ஏக்கள் எடுத்துக்கொண்டு ஒன்றும் செய்வதில்லை. அதனால் பஸ்கள் அசுத்தமாகவும் பராமரிப்பின்றியும் அனாதையாக்க படுகின்றன. இப்போது போக்குவரத்து துறை அமைச்சரின் எண்ணம் எல்லாம், அரசு துறையை அநாதை ஆக்கிவிட்டு அந்த இடத்தில் தனது சொந்த முதலீட்டில் மக்களை கொள்ளை அடிப்பதே.
Rate this:
Share this comment
Cancel
mpvijaykhanna - dindigul,இந்தியா
16-மே-201701:06:37 IST Report Abuse
mpvijaykhanna TNSTC is a biggest transport corporation in the world. nothing states have 32,939 buses in their states. so TN government should give money to TNSTC to avoid loss. Recruit talent Branch managers to avoid losses. Instead of giving free items to peoples. give the proper financial support to TNSTC.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Nagercoil,இந்தியா
16-மே-201700:16:35 IST Report Abuse
Suresh தனியார் மினி பஸ் உள்ளது, தனியார் ஆம்னி பஸ் உள்ளது பிறகு எந்த தனியார் மையத்திற்கு வழி விடக்கூறுகிறீர்கள்.. மொபைல் சேவை வேறு ஏழை மக்களின் பயணச்சலுகைகள் வேறு, நாடு எவ்ளவு வளர்ந்தாலும் அரசு பஸ் கண்டிப்பாக இருக்கவேண்டும் இல்லை எண்டால் பஸ் கட்டணம் கண்டிப்பாக ஏழைகளை பாதிக்கும்..ஆசிரியர்களுக்கு 50 ஆயிரம் பஸ் ஓட்டுநர் நடத்தினர்களுக்கு 5 ஆயிரம் இவர்களும் மனிதர்கள் தானே பிறகு ஏன் இவ்ளவு பெரிய பாகுபாடு...
Rate this:
Share this comment
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
15-மே-201720:50:28 IST Report Abuse
Radj, Delhi தனியார் மயம் என்று சொல்வதே தவறு. இப்படித்தான் டெல்லியில் தனியார் பஸ்கள் அடாவடி தானம், அதிக ஸ்பீட், விபத்து மற்றும் தனியார் பஸ் முன்னாள் விட்டு அரசு பஸ் பின்னல் வருவது, இதையெல்லாம் வைத்து தான் ப்ளூ லைன் (தனியார் பஸ்) முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது . இப்போ தனியார் பஸ் தமிழ் நாட்டில் விட்டால் இதே நிலைமை தான் உருவாகும். அரசு தன கடமையெய் செய்யும். தொழிற்சங்கத்தின் அடாவடி தனத்தை சென்னை ஹை கோர்ட் பார்த்து கொள்ளும். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
15-மே-201720:05:49 IST Report Abuse
jagan சாணக்கியன் சொன்னது - " தண்ணீருக்குள் எப்போதும் இருக்கும் மீன் தண்ணீரை குடித்ததா இல்லையா என்று சொல்ல முடியாது அது போல் தான் ஒரு ராஜாவின் ஊழியர்களும்"......எபோதும் ஊழலில் கிடப்பது அமைச்சர் மற்றும் அரசு ஊழியர்கள்,
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
15-மே-201719:59:38 IST Report Abuse
jagan தனியார் மயமானால் விலை எகிறும் என்பது சரியான புருடா..ஏர் லைனில் தனியார் வந்த பின் விலை குறைந்தது, சேவை சிறு நகரங்களுக்கும் வந்தது, பலருக்கு வேலையும் கிடைத்தது...பஸ் கம்பெனி தனியார் மயமானால் இது நடக்கும்....பயணிகளிடம் கெட்ட வார்த்தைகள் பேசும், பாக்கி சில்லறை தராத அரசு தொழிலாளர் தேவையில்லை...
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
15-மே-201719:26:25 IST Report Abuse
Balaji தனியாரை இந்த விஷயத்தை வைத்து திணிக்க நினைப்பது தவறு...... இப்போது இயக்கப்படும் தனியார் பேருந்துகள் பல போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி பல பேருந்துகளை இயக்கிவருகிறார்......... அதாவது ஒரு நம்பர் பிளேட்டுக்கு வழங்கப்படும் வழித்தடத்தை பயன்படுத்தி பல பேருந்துகளை இயக்குகிறார்கள்....... இது போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே தான் நடைபெறுகிறது......... இதுபோன்ற மோசடிகள் பெருகிவிடும்....... அதுமட்டுமல்லாது பேருந்து கட்டணம் சீசனுக்கு தகுந்தபடி தனியார்கள் ஏற்றுக்கொள்வதும் காலம் காலமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது.......... அதனால் தனியாரை அனுமதித்தாலும் அவர்கள் கொள்ளை லாபம் பெறுவார்கள் ஒழிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்காது......... வேண்டுமானால் சுகமான பயணம் கிடைக்கலாம், ஆனால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டிவரும்............ அரசு போக்குவரத்தில் உள்ள சில ஊழியர்களை களைந்தாலே கட்டுக்குள் இருக்கும்...... அரசும் ஊழலையும் குறைத்துக்கொள்ள என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதையும் செய்யவேண்டும்........ தேவையற்ற தொழிற்சங்கங்களை களைந்து ஒருமித்த ஒரே ஒரு தொழிற்சங்கமாக நிறுவ முயற்சிக்க வேண்டும்.......... இதை செய்தாலே பெரும்பாலான முறைகேடான தவிர்க்கலாம்...............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை