பழநி கோயிலில் ரூ.150 கோடியில் நவீன 'வின்ச்' அமைக்கத் திட்டம்| Dinamalar

பழநி கோயிலில் ரூ.150 கோடியில் நவீன 'வின்ச்' அமைக்கத் திட்டம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பழநி: பழநி மலைக்கோயிலுக்கு ஒன்றரை நிமிடத்தில் செல்ல, ரூ.150கோடியில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் புதிய 'வின்ச்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.பழநி மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் செல்லவும், அதேநேரத்தில் கீழே வரவும் 'ரோப்கார்' இயங்குகிறது.
8 நிமிடத்தில் மலைக்கு செல்லவும், அதேநேரத்தில் கீழேவரும் வகையில் மூன்று வின்ச்-கள்(மின்இழுவை ரயில்கள்) இயக்கப்படுகின்றன. பழநிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் பக்தர்கள் 2 மணிநேரம் முதல் 3 மணிநேரம் வரை காத்திருந்து சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் எலக்ட்ரிக் ரயில்போல வேகமாகசெல்லும் 'வின்ச்' வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரூ.150 கோடி செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில்அதிகாரி ஒருவர் கூறுகையில், “நவீன வின்ச் மாதிரிகள் வடிவமைக்கப்படஉள்ளது. தற்போது ஒருவின்ச்-சில் 32பேர் பயணம்செய்ய லாம், புதிய வின்ச்சில் 75பேர் வரை, ஒன்றரை நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லமுடியும். இதற்காக ஜெர்மன் நாட்டு தொழிநுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம் அவர்கள் ஓரிரு மாதங்களில் வரஉள்ளனர்,” என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Rajan - chennai,மாலத்தீவு
15-மே-201708:03:43 IST Report Abuse
Sundar Rajan வீண் செலவு யாரோ கொள்ளை அடிக்க திட்டம் ... சக்கரை நோயாளிகளாக தமிழக மக்களை மாற்றும் திட்டம் ... மலை ஏறி இறங்கினால் அவ்வளவும் உடலுக்கு நல்லது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.