வரும் 29ம் தேதி வரை தினகரன் 'உள்ளே' தான்! Dinamalar
பதிவு செய்த நாள் :
வரும் 29ம் தேதி வரை தினகரன் 'உள்ளே' தான்!

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தினகரனின் காவல், 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

29ம் தேதி, தினகரன், உள்ளே, dinakaran

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதை மீட்பதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றது அம்பலமானது.


இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன், டில்லி திகார் சிறையில், இம்மாதம், 1ல் அடைக்கப்பட்டார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, ஹவாலா ஏஜன்ட் நரேஷ் ஜெயின் எனப்படும் நாது சிங் ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

'வீடியோ கான்பரன்ஸ்'


இவர்களது காவல், நேற்றுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, இவர்களுக்கான காவலை, வரும், 29ம் தேதி வரை நீட்டித்து,லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பூனம் சவுத்ரி நேற்று
உத்தரவிட்டார்.
சுகேஷ் சந்திரா மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். தினகரன் உள்ளிட்ட மற்றவர்களுக்கான காவல், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நீட்டிக்கப்பட்டது.

Advertisement

இதற்கிடையில், வழக்கு விசாரணை தொடர்பாக, தினகரன் மற்றும் சுகேஷ் சந்தரின் குரல் மாதிரி எடுக்க அனுமதி கோரி, டில்லி போலீஸ் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை, வரும், 18க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-மே-201723:13:16 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இவ்வளவு நாள் வச்சி தேங்காயை துருவுற மாதிரி துருவுறாங்க, ஆனாலும், அந்த பணத்தை தேர்தல் கமிஷனில் யாருக்கு கொடுக்க டீல் பேசினார்கள், அந்த அதிகாரி பேரு என்ன, அவரை ஏன் இந்த குற்ற வழக்கில் சேர்க்கவில்லைன்னு புரியல.. தேர்தல் ஆணையத்தில் ஊழல் இருக்கான்னு தெரிஞ்சிக்க டிவி சானல்காரங்க மாதிரி சும்மா ஒரு நாடகம் போட்டோம்ன்னு சொல்லி தப்பிக்க வாழை செய்து தருகிறார்களா? எல்லாமே அரசியல் ஆதாயம் தேட ஒரு நாடகம் தானா?

Rate this:
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
16-மே-201722:37:46 IST Report Abuse

Mahendran TCநிரந்தரமாக உள்ளேயே வச்சிட்டுங்க .

Rate this:
rama - johor,மலேஷியா
16-மே-201719:29:01 IST Report Abuse

ramaஉலக மகா ஊழல் பெருச்சாளிங்கல்லாம் சுதந்திரமா சுற்றிகிட்டுயிருக்காங்க இவரை ஒன்றுமே இல்லாம கொடுமைபடுத்தறாங்க எல்லாம் அரசியல்

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X