Will Enter Politics Tomorrow If... Rajinikanth Lays Out Plans With Fans | அரசியல் பிரவேசம்: அடியெடுத்து வைக்கிறார் ரஜினி! 'சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்' ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசியல் பிரவேசம்: அடியெடுத்து வைக்கிறார் ரஜினி!
‛சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்'
ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டம்

சென்னை: கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை, நடிகர் ரஜினி, நேற்று துவங்கினார். ஐந்து நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், நேற்று கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட ரசிகர்களை, ரஜினி சந்தித்தார். அதில், சினிமா இயக்குனர், எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றார்.

அரசியல் பிரவேசம்: அடியெடுத்து வைக்கிறார் ரஜினி! 'சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்'  ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டம்

ரசிகர்கள் மத்தியில், ரஜினி பேசியதாவது:

எஸ்.பி.முத்துராமனிடமிருந்து நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில், எனக்கிருந்த குடிப் பழக்கத்தால், படப்பிடிப்புக்கு தாமதமாக போவேன்; அதை, முத்துராமன் கண்டித்தார். அதன்பின், நான் தான் முதல் ஆளாக செல்வேன். அதையே வழக்கமாக்கிக் கொண்டேன். புகை மற்றும் மது பழக்கத்தை, ரசிகர்கள் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

நான், ரசிகர்களை முன்பே சந்தித்திருக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு பின், இப்போது சந்திக்கிறேன். 'ரஜினி நிலையான முடிவு எடுக்க மாட்டார்; பின்வாங்குவார்; தயங்குகிறார்' என, சிலர் கூறுகின்றனர்.எந்த முடிவு எடுத்தாலும், நான் கொஞ்சம் யோசிப்பேன்.
சிலவற்றில் முடிவு எடுத்த பின் தான், பிரச்னைகள் இருப்பது தெரிகிறது. தண்ணீரில் கால் வைத்த பின் தானே, உள்ளே முதலைகள் இருப்பது தெரிகிறது. அதற்காக, முன்வைத்த காலை, பின்வைக்க மாட்டேன் என்றால் எப்படி? முரட்டு தைரியம் இருக்கக் கூடாது. பேசுபவர்கள் பேசியபடியே தான் இருப்பர்.

ஏமாற்றி விட முடியாது.


நல்ல படங்களை தருவது தான், என் வேலை; அதில், ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். படம் ஓடுவதற்காக, ரஜினி ஏதாவது சொல்வார் என, சிலர் கூறுகின்றனர்.

இறைவனின் ஆசியால், உங்களின் அன்பால், அப்படி செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. தமிழக மக்களையும், என் ரசிகர்களையும் ஏமாற்றி விட முடியாது. அவர்கள் ஏமாறுவது, ஒரு விஷயத்தில் மட்டுமே; அதுபற்றி, இப்போது பேச விரும்பவில்லை.
கடந்த, 21 ஆண்டுகளுக்கு முன், ஒரு அரசியல் விபத்து எனச் சொல்லலாம். அப்போது, ஒரு அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தருவது போன்ற சூழ்நிலைஉருவானது. அந்த கூட்டணி, தேர்தலிலும் வெற்றி பெற்றது. ரசிகர்களும், அரசியலில் ஆர்வம் காட்டினர்.

ரசிகர்கள் சிலர் எனக்கு கடிதம்


அன்று முதல், தேர்தல் சமயங்களில், சிலர் ஆதாயத்திற்காக, என் ரசிகர்களை தவறாக பயன்படுத்த துவங்கினர். ரசிகர்கள், தவறான வழியில் செல்வதை தடுக்க, ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், 'நான் எந்த கட்சிக்கும் ஆதரவு தரவில்லை' என, பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.
அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து, ரசிகர்கள் சிலர் எனக்கு கடிதம் எழுதினர். 'நமக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம், காரில் பறக்கின்றனர்' எனக் கூறுவர். எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதை வைத்து, பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை, என்ன சொல்வது?
என் வாழ்க்கை, அந்த ஆண்டவன் கையில் உள்ளது. இப்போது, நடிகனாக இருக்க வேண்டும் என்பது, கடவுளின் ஆணை. நாளை, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த பொறுப்பானாலும், நேர்மையாக, உண்மையாக செய்வேன்.
ஒரு வேளை, நான் அரசியலுக்கு வரும் சூழல் உருவானால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை, என் அருகே கூட சேர்க்க மாட்டேன். அவ்வாறான தவறான எண்ணம் உடையவர்கள், இப்போதே என்னை விட்டு சென்று விடுங்கள். இல்லையென்றால், நானே ஒதுக்கி விடுவேன்.இவ்வாறு ரஜினி பேசினார்.

முன்னதாக, எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ''முதல் சந்திப்பில், ரஜினியை எப்படி பார்த்தேனோ, அப்படியே இப்போதும் உள்ளார். புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர். ரஜினி புகைப்படத்தை, வீட்டில் வைத்திருப்பவர்கள், அவரைப் போலவே ஒழுக்கமாக இருக்க, எண்ண வேண்டும்,'' என்றார்.

Advertisement


ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு


சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை, நடிகர் ரஜினி, நேற்று துவங்கினார். ஐந்து நாள் நடக்கும் நிகழ்ச்சியில் நேற்று கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அதில், சினிமா இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றார்.
ரஜினி பேசியதாவது: எஸ்.பி.முத்துராமனிடமிருந்து நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில், எனக்கிருந்த குடிப் பழக்கத்தால், படப்பிடிப்புக்கு தாமதமாக போவேன்; அதை, முத்துராமன் கண்டித்தார். அதன்பின், நான் தான் முதல் ஆளாக செல்வேன். அதையே வழக்கமாக்கிக் கொண்டேன். புகை மற்றும் மது பழக்கத்தை, ரசிகர்கள் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
நான், ரசிகர்களை முன்பே சந்தித்திருக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு பின், இப்போது சந்திக்கிறேன். 'ரஜினி நிலையான முடிவு எடுக்க மாட்டார்; பின்வாங்குவார்; தயங்குகிறார்' என, சிலர் கூறுகின்றனர்.
எந்த முடிவு எடுத்தாலும், நான் கொஞ்சம் யோசிப்பேன். சிலவற்றில் முடிவு எடுத்த பின் தான், பிரச்னைகள் இருப்பது தெரிகிறது. 'படம் ஓடுவதற்காக, ரஜினி ஏதாவது சொல்வார்' என, கூறுகின்றனர்.
தமிழக மக்களையும், என் ரசிகர்களையும் ஏமாற்றி விட முடியாது. அவர்கள் ஏமாறுவது, ஒரு விஷயத்தில் மட்டுமே; அதுபற்றி, இப்போது பேச விரும்பவில்லை. இவ்வாறு ரஜினி பேசினார்.
- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
19-மே-201709:07:50 IST Report Abuse

Barathanஇந்த கூத்தாடி இப்பவே உண்மையாக பேசுகிறார். அதாவது இவருடன் அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணம் படைத்தவர்கள் ஓடிவிடுங்கள். இதன் உட்கருத்து இவர் ஒருவர் மட்டும் அரசியலில் வந்து சம்பாதிக்க வேண்டும் என்பதே. தமிழ்நாட்டை பற்றி ஒன்னும் தெரியாத கூத்தாடிக்கெல்லாம் எல்லாம் தமிழ் நாட்டுக்கு CM ஆகிவிடலாம் என்ற ஆசையே தவறு.

Rate this:
Royapuram Chandru - Dallas,யூ.எஸ்.ஏ
17-மே-201720:29:44 IST Report Abuse

Royapuram Chandruஅரசியலில் இவரால் தாக்கு பிடிக்க முடியாது. அரசியலுக்கு வந்து விட்டால் நிம்மதி போய் விடும். இவர் நிம்மதியை விரும்பும் மனிதர். மேலும் இவர் ஒரு தெளிவான சிந்தனை, மனதிடம் இல்லாதவர். இந்த குணங்கள் எல்லாம் அரசியலுக்கு சரி பட்டு வராது . இவையெல்லாம் இவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் இவர் நடிக்கும் படங்களின் லாப நோக்கத்துக்காகவே இப்படி பேசி காலத்தை ஓட்டுகிறார். எல்லாத்துக்கும் ஆண்டவன் மேல் பழியை போட்டு தப்பிக்கிறார் . நாளையே "ஆண்டவன் அரசியலுக்கு வர வேண்டாம்" என்று சொன்னார் என்றும் சொல்லுவார்.

Rate this:
C Suresh - Charlotte,இந்தியா
17-மே-201718:42:25 IST Report Abuse

C Sureshஅரசியலுக்கு வருவதை விட்டு.. முதலில் பேசிய நதி நீர் இணைப்பில் முழு கவனம் செலுத்தினார் என்றால்.., அவர் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும்... இல்லையேல் பத்தோடு பதினொன்று...

Rate this:
Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா
17-மே-201703:06:04 IST Report Abuse

Richie Rich SYDபுலி வருது புலி வருது .. சொல்லி சொல்லி Ella படம் ரிலீஸ் ஆனது. இப்ப்போ புலி வந்தால் enna நரி வந்தால் என்னவாம் ? தமிழ் மக்களுக்கு இதுவும் வேணும்.

Rate this:
Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா
17-மே-201702:44:50 IST Report Abuse

Richie Rich SYD

Rate this:
Abbas M - Doha,கத்தார்
17-மே-201702:16:33 IST Report Abuse

Abbas  Mசம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்' ரஜனி நீயும் உன் குடும்பமும் நல்லா இருங்க

Rate this:
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
17-மே-201700:58:53 IST Report Abuse

CHANDRA GUPTHANதூ ........... உருப்படவே மாட்டோம்

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
16-மே-201723:52:14 IST Report Abuse

Kuppuswamykesavan" மாயா மாயா எல்லாம் மாயா, .........". (சினிமா பாடல்).

Rate this:
pazhaniappan - chennai,இந்தியா
16-மே-201719:43:30 IST Report Abuse

pazhaniappanரஜினி மட்டுமல்ல ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ,ஆனால் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னோடு வரவேண்டாம் என்பதெல்லாம் அவரது அரசியல் சார்ந்த பேச்சே அன்றி வேறெதுவும் இருக்க முடியாது , அவர் மனச்சாட்சியை தொட்டு சொல்லட்டும் அவர் நடிப்பின் மூலமும் பிற தொழில்கள் மூலமும் சம்பாதித்த வருமானத்திற்கு ஒழுங்காக வரி காட்டியிருக்கிறார் என்று கண்டிப்பாக இல்லை . ஒருவேளை சமீப காலமாக அவருடைய திரை படங்கள் சரிவர ஓடவில்லை ஆகவே அரசியலுக்கு வர முடிவெடுத்து இருக்கலாம் ,அதை தைவிர்த்து அவர் புனிதர் புத்தர் என்பதெல்லாம் வேடிக்கையான விஷயம் , அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து முன்னேறியவர் அவரை குறை சொல்ல வேண்டுமென்பதில்லை ,ஆனால் அவருடைய பேச்சுக்களை பார்த்தால் எவ்வளவோ பேருக்கு உதவியிருக்க வேண்டும்,இல்லையே முடியாத காலத்திலும் நடிப்பது என்ன காலை சேவை செய்வதற்கா ,இன்று பல்வேறு நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருக்கிறார் இவையெல்லாம் என்ன மக்களுக்கு சேவை செய்வதற்காகவா

Rate this:
Ramesh Jagan - trichy,இந்தியா
16-மே-201719:03:36 IST Report Abuse

Ramesh Jaganரஜினி தமிழக அரசியலுக்கு தேவையில்லை. அவர் வேறு எங்யேயாவது முயற்சி செய்யட்டும். சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களை சேர்த்து கொள்ள மாட்டாராம் இவர் மட்டும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட பல மடங்கு வாங்க சில பல பலன்களை பெற்றுகொண்டு அனுமதிப்பாறாம் இத யாரும் கண்டுக்காம இருக்கணுமா இவர் நடத்தும் பள்ளிகளின் கட்டணககொள்ளை மற்றும் ஊழியரகளுக்கு முறையான சம்பளம் இல்லை இவரு வந்து பேசராரு இது நியாயமா நீங்களே சொல்லுங்க

Rate this:
மேலும் 141 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement