சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைப்பு பின்னணி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைப்பு பின்னணி

அவசர சட்டங்கள் கொண்டு வருவதற்காகவே, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் முன், சட்டசபை கூட்டத் தொடரை, கவர்னர் முடித்து வைத்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை, கூட்டத்தொடர், முடித்து வைப்பு, பின்னணி

தமிழக சட்டசபையில், மார்ச், 16ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம், மார்ச், 24 வரை நடந்தது. பின், தேதி குறிப்பிடப்படாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்த பின், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த, சட்டசபை கூடும் என, தகவல் வெளியானது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தால், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது; அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது;

பெண் அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு, அமைச்சர் சரோஜா மிரட்டியது என, அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

அரசு தயாராகஇல்லாததால்


மேலும், 'டாஸ்மாக்'கிற்கு எதிராக மக்கள் போராட்டம்; போக்குவரத்து தொழிலாளர்கள், 'ஸ்டிரைக்' என, பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், சட்டசபையை கூட்ட, அரசு தயாராக இல்லாததால், ஜூன் மாதம், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் முன், மே, 11ல், சட்டசபை கூட்டத்தொடரை இறுதி செய்து, கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அரசின் பரிந்துரையை ஏற்று, இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டத் தொடரை, கவர்னர் முடித்து வைத்துள்ளதால், சட்டசபையை, அவரது ஒப்புதல் இன்றி,சபாநாயகரால் கூட்ட முடியாது. சில, அவசரசட்டம் கொண்டு வரவே, சட்டசபை கூட்டத்தொடர், முன்னரே முடித்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவசர சட்டம் கொண்டு வர முடியும்


இது குறித்து, உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி

Advertisement

சட்டம், அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்கும், ஜூன், 30ல் முடியும், உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீடிக்கவும், அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.
சட்டசபை கூட்டத் தொடரை முடிக்காமல் இருந்தால், சட்டசபையில், மசோதாவை அறிமுகம் செய்து, சபை ஒப்புதல் பெற்றே, சட்டத்தை நிறைவேற்ற முடியும். சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டால், சபையை கூட்டாமலேயே, அவசர சட்டம் கொண்டு வர முடியும்.
அவ்வாறு, அவசர சட்டம் கொண்டு வரவே, சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IBRAHAM - RIYADH,சவுதி அரேபியா
16-மே-201718:42:10 IST Report Abuse

IBRAHAMஅடப்பாவிகளா இது தாண்ட ஜனநாயகம்..தமிழக மக்களே இவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு இதுவும் வேண்டும். இன்னும் வேண்டும்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
16-மே-201714:27:46 IST Report Abuse

Balajiகுறுக்கு வழியிலேயே ஆட்சியை நடத்தி மீதமுள்ள ஆட்சிக்காலத்தையும் நடத்தி முடிக்க சட்டத்தில் ஏதாவது வலியிருந்தால் அதையும் செய்வார்கள். ஆட்சி என்பதே இப்போது அதுவாக ஏதோ செல்கிறதே தவிர இவர்கள் ஆளவில்லை........

Rate this:
gmk1959 - chennai,இந்தியா
16-மே-201714:04:36 IST Report Abuse

gmk1959ஸ்டாலின் அவசர சதி திட்டம் ரெடி சட்டசபையை கூட்டினால் திட்டம் நிறைவேற்றப்படும் அதற்காகத்தான் இந்த கவுண்டர் ஆக்ஷன்

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X