என் வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடாதீங்க: மலிவு விலை உணவகத்தில் மனைவி புகார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

என் வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடாதீங்க: மலிவு விலை உணவகத்தில் மனைவி புகார்

Added : மே 16, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 என் வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடாதீங்க: மலிவு விலை உணவகத்தில் மனைவி புகார்

பிண்டி: 'ஏழை மக்களுக்காக துவக்கப்பட்ட, அரசின் மலிவு விலை உணவகத்தில், அரசு ஊழியரான என் கணவருக்கு உணவு அளிக்க வேண்டாம்' என, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், புகார் அளித்துள்ளார்.

ம.பி., மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழை மக்கள் வயிறார உணவருந்தும் வகையில், தீன்தயாள் உணவகம் திறக்கப்பட்டது. இங்கு, முழு சாப்பாடு, ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அதில், சப்பாத்தி, பருப்பு, சாதம், காய்கறி கூட்டு, சாம்பார் போன்றவையும் உண்டு.

தனியார் நிறுவனம் இந்த உணவகத்தை நிர்வகித்து வருகிறது. பிண்டி மாவட்டம், நிராலா ரங் விஹாரில் துவக்கப்பட்ட மலிவு விலை உணவகத்துக்கு வந்த ஒரு பெண், ஒரு கடிதத்தை, அதன் நிர்வாகியிடம் கொடுத்தார்.

அதில், அவர் எழுதியிருந்ததாவது: என் கணவர் மின்சார வாரியத்தில் பணியாற்றுகிறார்; மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாய். சமீபகாலமாக, நான் கொடுத்து அனுப்பும் மதிய உணவு, அப்படியே திரும்பி வருகிறது. விசாரித்தபோது, என் கணவர், இந்த மலிவு விலை உணவகத்தில், மதிய உணவு சாப்பிடுவது தெரியவந்தது.

ஏழை மக்களுக்காக துவக்கப்பட்ட இந்த உணவகத்தில், என் கணவர் போன்ற அதிக வருமானம் உள்ளவர்களுக்கு, தயவு செய்து உணவு அளிக்க வேண்டாம். அதிக வருமானம் உள்ளவர்கள் சாப்பிடுவதால், ஏழைகளுக்கு உணவு கிடைக்காமல் போய் விடும்.இவ்வாறு அந்த கடிதத்தில், அவர் எழுதியிருந்தார். இந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asokan Kuppusamy - Mettupalayam, Coimbatore District,இந்தியா
17-மே-201721:46:41 IST Report Abuse
Asokan Kuppusamy பெண்மணி பாராட்டப்பட வேண்டியவர்தான். விட்டு விட்டால் குடும்பத்தை நடு ரோட்டில் அல்லவா நிறுத்தி விடுவார்
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
17-மே-201712:41:26 IST Report Abuse
s.rajagopalan பெண்ணுரிமை இயக்கத்தினர் இவரை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
17-மே-201709:28:49 IST Report Abuse
pollachipodiyan கேட்க நல்லாத்தான் இருக்குது. ஆனா இங்கே, எங்கெங்கு இலவசமோ அது வீட்டிலிருக்கும் அத்தனை பேருக்கும் வேண்டும். அது இட-ஒதிக்கீட்டு மூலம் அரசு வேலைன்னாலும் வீட்டிலிருக்கிற அத்தனை பேருக்கும் வேணும், அதும் ஒரே ஊரில் என்றால் சந்தோஷம், ஒரே ஆபிசில் என்றால் மிக சந்தோஷம், கிம்பளம் கிடைக்கும் ஒவ்வொரு ஆபிசில் அனைவருக்கும் வேலை என்றால் மிக மிக சந்தோஷம். இப்படி இருந்தாலும், அம்மா உணவகத்தில் சாப்பாட்டுக்கு முதலில் வந்து நின்னு சமூக இலக்கியம் பேசுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-மே-201708:58:05 IST Report Abuse
Srinivasan Kannaiya மலிவு விலை உணவகத்தில் ஏதாவது அவர் விரும்பும் ஒரு வஸ்த்து ( பெண்மணி ) இருக்க போகிறது...
Rate this:
Share this comment
Cancel
Sriman - Chennai,இந்தியா
16-மே-201715:40:11 IST Report Abuse
Sriman சூப்பர், அரசு ஊழியர் என்றால் பிடுங்கி தின்பவன் என்ற இமேஜை அடித்து நொறுக்கிவிட்டார் இந்த பெண்மணி.
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
16-மே-201715:28:41 IST Report Abuse
Ramaswamy Sundaram மிக தைரியமும் நேர்மையான மனசும் கொண்ட இந்த சகோதரிக்கு முதலில் வாழ்த்து தெரிவிப்போம்.. அற்றார் அழி பசி தீர்த்த அன்ன பூரணி அம்மாவின் மனதில் உருவான இந்த மகத்தான திட்டம் உ பி வரைக்கும் பரவியதை நினைத்து பெருமைப்படுவோம். கால காலத்துக்கும் அம்மாவின் புகழ் பாடும் திட்டம் இது.. ஏழைகளுக்கு கிடைக்கவேண்டியதை அரசாங்க ஊழியர் தட்டிப்பறிக்க நினைத்தது கொடுமையே. இருந்தாலும் அவரையும் தன் வசம் இந்த உணவகம் இழுக்க காரணம் சுத்தம் சுகாதாரம். குறைந்த விலை இவை எல்லாமாக இருக்கலாமே?
Rate this:
Share this comment
Cancel
CHANDRAN - Chennai,இந்தியா
16-மே-201713:30:33 IST Report Abuse
CHANDRAN சபாஷ் சகோதரி
Rate this:
Share this comment
Cancel
Nagai Nagarajan Swaminathan - Chennai,இந்தியா
16-மே-201709:39:38 IST Report Abuse
Nagai Nagarajan Swaminathan நல்ல மனம்கொண்ட மிகவும் தைரியமான பெண்ணாக இருக்கிறார் சபாஷ் இப்படி தமிழக பெண்களுக்கும் தைரியம் வந்து அம்மா உணவகத்தில் ஐ டி. தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் பஸ் தொழிலாளர்கள் சாப்பிடுவதை பற்றி அவர்களிடம் கூறி அங்கு சாப்பிடுவதை நிறுத்தினால் தமிழக அரசுக்கும் செலவு மிச்சமாகுமே
Rate this:
Share this comment
Cancel
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-மே-201709:38:50 IST Report Abuse
Shiva Good marketing strategy to enter politics. Soon she will become a top leader in MP.
Rate this:
Share this comment
Cancel
16-மே-201709:36:23 IST Report Abuse
தேசநேசன் உன்னையே நீயறிவாய். உன் புருஷனாவது உருப்படியான சாப்பாட்டை சாப்பிடட்டும். வாழு வாழவிடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை