எனக்கு எதிராக சி.பி.ஐ., ஏவப்படுகிறது: ப.சிதம்பரம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எனக்கு எதிராக சி.பி.ஐ., ஏவப்படுகிறது: ப.சிதம்பரம்

Added : மே 16, 2017 | கருத்துகள் (80)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சி.பி.ஐ., ப.சிதம்பரம், PChidambaram

சென்னை: தனக்கு எதிராக சி.பி.ஐ., ஏவி விடப்படுகிறது என இன்று நடந்த ரெய்டு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அன்னிய முதலீடு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் இன்று சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., சோதனை நடத்தி வருகிறது.


குரல் கொடுப்பேன்:

இது தொடர்பாக சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: நேரடி அன்னிய முதலீடு அலுவலக அமைப்பு மூலம் தான் அனுமதி வழங்கப்படுகிறது. இது போன்ற 100 க்கும் மேற்பட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சம்பந்தப்பட்ட 5 செயலர் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? சட்ட விதிகள் படி தான் கோப்புகள் ஒப்புதல் வழங்கப்படும். என் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. சிபிஐ மூலம் என்னை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. எதிர்கட்சியினர், பத்திரிகைகள், சமூக ஆர்வலரை மத்திய அரசு அடக்க நினைக்கிறது. ஆனாலும் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். தனக்கும், தனது மகனுக்கும், அவரது நண்பர்களுக்கும் எதிராக மத்திய அரசு சி.பி.ஐ., அமைப்பை ஏவி விடுகிறது. இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.எனக்கு எதிராக சி.பி.ஐ., ஏவப்படுகிறது: ப.சிதம்பரம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
20-மே-201720:51:18 IST Report Abuse
ezhumalaiyaan பச்சப்புள்ள.பாவம்.தேசத்துரோகிகள்.சட்டத்தை.வளைத்து.சலுகைகளை.இவளுக்கு.வழங்கிய.வள்ளலே.
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
17-மே-201717:56:20 IST Report Abuse
kowsik Rishi ஏன் செல்வி ஜெ ஜெ வை பற்றி சொன்னால் தினமலருக்கு பிடிக்கவில்லையோ செல்வி ஜெ ஜெ விற்கு அரசியல் என்ற ஒரே சொல்லின் இவ்வள்வு பெரிய வன்கொடுமை செய்து விட்டு ஒன்றும் யாரும் சொல்ல கூடாது என்றால் எப்படி இனி எல்லாவனுகளும் ஒரு ரூபாய் சொத்து அடிப்படையில் தான் வழக்கு விசாரணை கைது சிறை என்று போக வேண்டும் செல்வி ஜெ ஜெ விரற்கு செய்தது மட்டும் என்னவாம் அரசியல் சதி அல்லவா - மு.கருணாநிதிக்கு வைர விழா ஒரு காமராஜ், அண்ணாதுரை, செல்வி ஜெ ஜெ எம்.ஜி.ஆர் இவர்களுக்கு தான் விழா நடத்தவேண்டும் இந்த மு.கருணாநிதிக்கு தான் அவர் மகனே சொன்னாரே எல்லாம் மறந்து போய் விட்டது என்று இப்போ என்ன விழா வேண்டிக்கிடக்கு தென் தமிழ் நாட்டில் சொல்வதைப்போல வைர விழா தான் நடத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
17-மே-201714:39:05 IST Report Abuse
kowsik Rishi ஒரு தேர்தலில் கூட மக்கள் ஆதரவு பெற முடியா நீங்கள் எல்லாம் சேர்ந்து எங்கள் தமிழ் நாட்டின் சொத்தை - சேர்ந்து அழித்து விடீர்களே பாவிகளே ரைடு கைது வழக்கு சிறை என்று நீங்கள் போவதை பார்த்தால் தான் தமிழ் நாட்டின் மண்ணும் மக்களின் மனமும் ஆறும்
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
17-மே-201712:38:02 IST Report Abuse
kowsik Rishi பி.சிதம்பரம், மாறன், ராஜ பிரணாப் முகேர்ஜீ என்ன நாடகம் இங்கே இந்த துறையில் ராஜினாமா உடனே அங்கே அந்த துறையில் பதவி இப்படி இவர்கள் மாற்றி மாற்றி நாடகம் கோப்புகள் காணவில்லை துண்டு சீட்டில் ஆர்டர் எழுதினீர் என்னவெல்லாம் செய்தீர்கள் எது சார் அரசியல்
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-மே-201718:25:38 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இனிமேல் தொடரும் அய்யா நடவடிக்கை. சந்தேகம் வேண்டாம். யார் செய்யினும் தவறுதவறே குற்றம் குற்றமே. தண்டனை பெறுவதுதான் நியதி>>>>>>
Rate this:
Share this comment
Cancel
Prakash JP - Chennai,இந்தியா
16-மே-201718:05:47 IST Report Abuse
Prakash JP பிஜேபியின் சிபிஐ ரெய்ட் அரசியல்.. & பிஜேபியின் ஊழல் பட்டியல்... ஆட்சி அதிகார திமிரில், எதிர்கட்சியினர் மீது பிஜேபி செய்யும் சிபிஐ & வருமானவரி ரெய்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க அரசியல் ஆதாய பழிவாங்கும் நடவடிக்கைகள்தான்... அரவிந்த் கேஜரிவால் & ஆம்ஆத்மி கட்சியினர், மம்தாவின் திரினாமூல் கட்சியினர், லாலு யாதவ் & குடும்பத்தினர், சிதம்பரம், பிரியங்கா காந்தி குடும்பத்தினர் போன்ற பல காங்கிரஸ் கட்சியினர் மீது ஏவப்படும் சிபிஐ ரெய்டுகள் எல்லாம், எதிர்வரும் 2019 தேர்தலை மனதில்கொண்டு, எதிர்கட்சியினர் ஒன்றுபடகூடாது என்ற நோக்கத்திலும், எதிர்கட்சியினர் மீது "ஊழல்" முத்திரையை பதிக்கும் நோக்கத்திலும் செய்யப்படும் ரெய்டுகளாகும்.. சரி, நூற்றுக்கணக்கான கோடிகளோடு, நூறுக்கும் அதிகமானோர் "கொலை" செய்யப்பட்ட பிஜேபி ஆளும் மத்திய பிரதேச மாநில வியாபம் ஊழல் குறித்து எந்த மூச்சையும் இந்த மோடி பிஜேபி அரசு விடவில்லையே..
Rate this:
Share this comment
Cancel
Prakash JP - Chennai,இந்தியா
16-மே-201718:05:28 IST Report Abuse
Prakash JP கீழே உள்ளது பிஜேபியினரின் ஊழல் பட்டியல்.. பிஜேபியின் எடியூரப்பா, பங்காரு லட்சுமணன், ஸ்ரீராமுலு, ரெட்டி சகோதரர்கள் எல்லாம் யாரு ??? ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட சவப்பெட்டியிலேயே பிஜேபியினர் ஊழல் செய்தது மறந்துவிட்டதா??? பாஜக பல ஆண்டுகளாக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் வெளிவந்துள்ள மிகப்பெரிய ஊழலான, பல நூறு மக்கள் "மர்மமான" முறையில் மரணமடைய வைத்த, "அரசு வேலைக்கு லஞ்சம்" "வியாப்பம் ஊழல்" குறித்து தெரியாதா?? மோடிக்கு நெருக்கமான "அதானி" சம்பந்தப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள்....இப்போது வெளிவந்துள்ள மோடியின் மெகா 20,000 கோடி இயற்கை எரிவாயு ஊழல்.. மோடியின் மெகா இயற்கை எரிவாயு கிருஷ்ணா-கோதாவரி வடிநில ஊழல் என்பது, இல்லாத நிலவாயுவை கிடைத்துவிட்டது என்ற மோடியின் போலியான அறிவிப்பு மூலம், குஜராத் மாநில அரசுத் துறை நிறுவனத்தைப் பயன்படுத்தி, 20,000 கோடிக்கணக்கான ரூபாயை அரசு வங்கிகளிடமிருந்து சுருட்டியதுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநில எரிவாயு மோசடியின் சுருக்கம். 1. தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு ஆதரவாக ரகசிய ஆவணம் அளித்த பிஜேபி முதல்வர் வசுந்தரா... 2. மகராஷ்டிரா பிஜேபி அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு 200 கோடி ஊழலில் தொடர்பு.... 3. பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் மிக பெரிய ஊழலான VYAPAM (The MP recruitment scam or Vyapam scam)... பிஜேபி முதல்வர் சவுகான் முதல் RSS தலைமைகள் வரை இந்த அரசு வேலைக்கு ஊழல், மதிப்பெண் ஊழல், தேர்வு ஊழலில் சம்பந்தப்பட்டு இருகிறார்கள்... அதிர்சிகரமாக, இந்த ஊழலில் குற்றம்சாட்டபட்டுள்ளவர்களும், சாட்சிகளும் தொடர்ச்சியாக மர்மான முறையில் மரணமடைந்து வருகிறார்கள்... இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் மரணம்.. 4. போலியான, தவறான கல்வி தகுதியளித்த பிஜேபி அமைச்சர் ஸ்மிரிதி இராணி.... (மத்திய கல்வி துறை அமைச்சர்) 5. ராஜஸ்தான் மாநில பிஜேபி அரசின் முதலமைச்சர் வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங்கின் நிறுவனத்தின், (PAR VALUE) ரூபாய் 10/- மதிப்புள்ள பங்குககளை, லலித்மோடி எனும் தேடப்படும் குற்றவாளிக்கு ஒரு பங்கை ரூபாய் 96200/- விற்றுள்ளார்... அதாவது லலித் மோடி முதலீடு செய்துள்ளார்.. 6. சுமார் ஆயிரம் கோடி அபராதம் விதிகப்படகூடிய பொருளாதார குற்றவாளியான, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, இந்தியாவின் சட்டத்துக்கும், நீதிதுறைக்கும் சவால்விட்டு, வெளிநாட்டில் பதுங்கியுள்ள, லலித் மோடிக்கு "உதவி" செய்த பிஜேபி மத்திய அமைச்சர் சுஷ்மா.... 7. அரசு பொறுப்பில் இருக்கும் சுஷ்மாவின் கணவரும், மகளும் அரசு வக்கீல் பதவி...... 8. சட்டிஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அரிசி வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல், பிஜேபி முதல்வர் ராமன் சிங் மற்றும் அவரின் மனைவி வீணா சிங்கிற்கும் தொடர்பு... 9. பிஜேபி ஆளும் குஜராத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் ஊழல்.. 10. பிஜேபி ஆளும் ஹரியானாவில் பென்ஷன் ஊழல்..
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-மே-201721:04:10 IST Report Abuse
Cheran Perumalஐயா, இதில் பல விஷயங்கள் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தவை, மற்றவை உங்கள் கற்பனை. உம்மை போன்றவர்கள் தான் இத்தனை வருடங்களாக சமூக நீதி மற்றும் மதசார்பின்மை என்ற பெயர்களில் இந்தியா சுரண்டப்பட காரணம். திமுக ஆதரவை விலக்கிக் கொண்டவுடன் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தினாரே பசி, அதுபோல் அல்ல இவை. இவை எல்லாமே நீதிமன்றத்தில் வைக்கப்படும், குற்றமற்றவர்கள் என்றால் நிரூபித்து வெளியே வரட்டும். அப்போது சொல்லுங்கள் இந்த குற்றச்சாட்டுக்களை....
Rate this:
Share this comment
Cancel
Manithan - Tirupur,இந்தியா
16-மே-201716:17:48 IST Report Abuse
Manithan சில திருடனுங்க சட்டத்துல உள்ள ஓட்டைய கண்டுபுடுச்சு தப்பிச்சிருவானுக..ஆனா இந்த சிதம்பரம் சட்டத்துல ஓட்டைய உருவாக்குற கேடி..
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
16-மே-201715:45:35 IST Report Abuse
S ANBUSELVAN தற்போதைய நடவடிக்கை எல்லாம் பிஜேபி அல்லாத கட்சிகள் மீது தான்... ஜெயலலிதா போன்று எதிர்க்கட்சிகள் இல்லாத நாட்டையும், அதன் பின்னர் எதிர்த்து போராட்டம் செய்ய இயலாத மக்களையும் உருவாக்குவது தான் மோடியின் முடிவு.... மத்திய அரசு உண்மையான, நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்த திமுக மீதும். ஜெயாவின் ஆட்சியில் இருந்து இதுவரை ஊழலில் திளைத்த OPS , ரெட்டியின் டைரியில் உள்ள 18 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது? இப்போது OPS பின்னால் இருப்பவர்கள் எல்லாம் தியாகிகளா? அவர்களும் திருடர்கள் தானே? ராம் மோகன் ராவ் பகிரங்கமாக அதுவும் திமிராக பேட்டி கொடுத்தாரே அவருக்கு பதவி கொடுத்தீர்கள்.. அவர் மீது நடவடிக்கை எப்போது? அதிமுகவை மிரட்டத்தான் நடவடிக்கை இல்லை என்றால் நடவடிக்கை இல்லை என்பது தான் நேர்மையா ?
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
16-மே-201715:36:43 IST Report Abuse
S ANBUSELVAN இதைத்தான் நீங்களும் ஆட்சியில் இருக்கும் போது மாயாவதி முலாயம் போன்றோர் மீது சிபிஐ யை ஏவி விட்டு மிரட்டி ஆட்சியை தக்க வைத்தீர்கள்.... தன் வினை தன்னை சுடும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை