மாசு ஏற்படுத்தாத சோலார் ஆட்டோ இன்ஜி., மாணவர்கள் கண்டுபிடிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாசு ஏற்படுத்தாத சோலார் ஆட்டோ இன்ஜி., மாணவர்கள் கண்டுபிடிப்பு

Updated : மே 18, 2017 | Added : மே 18, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மாசு,ஏற்படுத்தாத,சோலார்,ஆட்டோ,இன்ஜி.,மாணவர்கள் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை யில், மாசு ஏற்படுத்தாத சோலார் ஆட்டோவை, இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திருவண்ணாமலை, தனியார் பொறியியல் கல்லுாரி, இயந்திரவியல் துறை சார்பில், மாணவர்களின் கண்டுபிடிப்பு செயல் விளக்க கண்காட்சி, நேற்று நடந்தது. இதில், மாசு ஏற்படுத்தாத சோலார் ஆட்டோ, காஸ் மூலம் இயங்கும் பைக் இன்ஜின், சாலைகளில் குப்பையை அகற்றி துாய்மை செய்யும் சோலார் இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரம், மணிலா விதை விதைக்கும் இயந்திரம் உட்பட, 20க்கும் மேற்பட்ட பல்வேறு இயந்திரங்களின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில், சோலாரில் இயங்கும் ஆட்டோ அனைவரையும் கவர்ந்தது. ஆட்டோவின் மேற்கூரையில் பொருத்தப்பட்ட சோலார் தகடுகளால், சூரிய ஒளி கவரப்பட்டு, மின்னாற்றலாக பேட்டரி மூலம் சேமித்து, அதை பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மாசு கட்டுபாடு ஏற்படாத சோலார் ஆட்டோவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு முறை ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை, சோலார் மூலம் ரீசார்ஜ் செய்தால், 220கி.மீ. துாரம் வரை இயக்க முடியும். இதன் தயாரிப்பு செலவு, 75 ஆயிரம் ரூபாய்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
19-மே-201722:41:45 IST Report Abuse
Manian நாலு பக்கமும் கூடாரம் போல் சோழர் தகடுகள் படியினால், எந்த திசையில் வண்டி போனாலும் பேட்டிரி சார்ஜ் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
Raman - Lemuria,இந்தியா
19-மே-201706:27:51 IST Report Abuse
Raman 220 கிலோ மீட்டாரா? 70000 ரூபாய்க்கு ? சும்மா கதை விடுறதுக்கு ஒரு அளவு வேணும்
Rate this:
Share this comment
Cancel
mpvijaykhanna - dindigul,இந்தியா
19-மே-201701:03:03 IST Report Abuse
mpvijaykhanna god bless you guys
Rate this:
Share this comment
Cancel
B.Indira - thane,இந்தியா
18-மே-201718:28:16 IST Report Abuse
B.Indira இதை அரசு செய்யாவிட்டாலும் பணம் படைத்தவர்கள் ஊக்குவித்தால் ஆட்டோ காரர்கள் மகிழ்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
18-மே-201717:31:36 IST Report Abuse
மஸ்தான் கனி அருமை அருமை., அசத்திட்டாங்க பயன்பாட்டுக்கு வந்தால் புகை தொல்லை கொஞ்சம் குறையும் அதோடு காது கிழியும் சத்தமும் இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Emperor SR - Ooty,இந்தியா
18-மே-201716:37:40 IST Report Abuse
Emperor SR மனம் நிறைந்த பாராட்டுக்கள் இயந்திரவியல் துறை மாணவர்களுக்கு... இதற்கு Patent ரைட்ஸ் வாங்க மறக்க வேண்டாம்.... கல்லூரியின் பெயரையும் செய்தியில் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-201715:21:39 IST Report Abuse
Ramesh never come to practical use.what is the use.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201715:01:38 IST Report Abuse
பிரபு ராமர் பிள்ளை முளிகை பெட்ரோல் மாதிரி இதையும் பணம் வாங்கி கொண்டு வராமல் செய்து விடுவார்கள் நம் அரசியல் வியாதிகள். சிறைக்குகூட அனுப்பு விடுவார்கள் கண்டு பிடித்தவர்களை
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
18-மே-201708:20:14 IST Report Abuse
spr மாணவர்களுக்கும் அவர்களை ஊக்குவித்த கல்லூரிக்கும் பாராட்டுகள் ஆனால், ஒரு நல்ல செயலை அறிமுகப்படுத்துகையில் அம்மாணவர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி சார்ந்தவர்களையும் ஊக்குவிக்க அந்த கல்லூரியின் பெயரைச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக, "திருவண்ணாமலை, தனியார் பொறியியல் கல்லுாரி, " என்று சொல்லி இருட்டடிப்பு செய்வது சரியா செய்தி உண்மையானதுதானே இல்லை செய்தி சேகரிப்பாளர் ஒரு தமிழரோ?
Rate this:
Share this comment
Cancel
Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா
18-மே-201702:59:33 IST Report Abuse
Richie Rich SYD Well done Engg students.. this is what our country needs.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை