நடிகர் ரஜினிக்கு எதிராக வரிந்து கட்டும் நீதிபதி கட்ஜு | நடிகர் ரஜினிக்கு எதிராக வரிந்து கட்டும் நீதிபதி கட்ஜு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நடிகர் ரஜினிக்கு எதிராக
வரிந்து கட்டும் நீதிபதி கட்ஜு

புதுடில்லி:''அரசியல் பற்றியோ, மக்கள் பிரச்னை பற்றியோ, நடிகர் ரஜினிக்கு என்ன தெரியும்; அவர் அரசியலுக்கு வர வேண்டும் என, ஏன் விரும்புகின்றனர்,'' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி, கடந்த சில நாட்களாக, தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் அரசிய லுக்கு வர வேண்டும் என, அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சமூகதளத்தில்வெளியிட்டுள்ள பதிவு:
தென் மாநில மக்கள் மீது, எனக்கு மிகுந்தமதிப்பு

உண்டு. ஆனால், திரைப்பட நடிகர்கள் மீது, அவர் களுக்கு உள்ள அபிமானம் மற்றும் முட்டாள்தன மான பக்தியை புரிந்து கொள்ள முடியவில்லை. நான், 1967 - 68ல், அண்ணாமலை பல்கலையில் படித்த போது, சில தமிழ் நண்பர்களுடன் படம் பார்க்க சென்றேன். படத்தின் துவக்கத்தில், நடிகர் சிவாஜி கணேசனின் காலை காண்பித்த போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தற்போது, நடிகர் ரஜினி மீதுபைத்தியமாக உள்ளனர். அதில் சிலர், அவர் அரசியலுக்கு வர வேண்டும்; தமி ழக முதல்வராக வேண்டும் என்கின்றனர். ஆனால், ரஜினியிடம் என்ன உள்ளது; வறுமை, வேலை யில்லா திண்டாட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார வசதியின்மை, விவசாயிகளின்

Advertisement

பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்ப்ப தற்கு, அவரி டம் திட்டம் எதுவும் உள்ளதா; அப் படி ஏதும் அவரிடம் இருப்பதாக நான் நினைக்க

நடிகர் ,ரஜினிக்கு, எதிராக ,வரிந்து, கட்டும், நீதிபதி, கட்ஜு

வில்லை. அப்படியிருக்கும் போது, அவர் அரசி யலுக்கு வர வேண்டும் என, ஏன் அழைக்கின் றனர்; அமிதாப் பச்சனை போலவே, நடிகர் ரஜினிக்கும் தலை யில் ஏதுமில்லை.இவ்வாறு கூறி உள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kongu maakkan - Tuticorin,இந்தியா
19-மே-201722:54:48 IST Report Abuse

Kongu maakkanகொள்ளையடிக்க வரவனுங்கதாங்கய்யா பிளான் போட்டுட்டு வரணும்... நல்லவங்களா ஆண்டவன் நடத்திடுவாங்கய்யா.. ஜுட்ஜையா...

Rate this:
Kongu maakkan - Tuticorin,இந்தியா
19-மே-201722:49:29 IST Report Abuse

Kongu maakkanஅது என்னய்யா தலைவரை தப்பா சொல்றவங்க எல்லாருமே தமிழன் இல்ல டேக்ஸ் கட்டலன்னு சொல்றிங்க.. இன்றைய அரசியலுkku அறிவாளிகள் விட நல்லவர்கள்தான் தேவை.. தலைவரை மிஸ் பண்ணிடாதிங்கப்பா..

Rate this:
Kongu maakkan - Tuticorin,இந்தியா
19-மே-201722:39:25 IST Report Abuse

Kongu maakkanநானும் பச்சை தமிழன்தான்.. சும்மா மொழி மத இன உணர்வுகளை தாண்டி சிந்திக்க பழகுங்கள்... கருத்து சொல்றவங்கள சொன்னேன்..

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
19-மே-201717:43:08 IST Report Abuse

தமிழர்நீதி பழனிசாமி , பன்னீர் , தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜு , மோடி இவர்களை பார்த்து ,ரஜினிக்கும் ஆசை வந்துவிட்டது . இது தேசத்தின் அவலம் . இனி இந்தியாவை யாரும் காப்பாத்த முடியாது .

Rate this:
Guna - Chennai,இந்தியா
19-மே-201717:35:52 IST Report Abuse

Gunaஅட வரட்டுமே யார் யார் அரசியலுக்கு வரவேண்டும் என ஏதாவது நியதி உண்டா ? இதுவரை வந்த அரசியல்வாதிகள் முன் அனுபவம் பெற்றா வந்தார்கள் ? எல்லாரும் வந்த பிறகு கற்றுக்கொண்டவர்கள் தான். மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்கள் தான் இப்படி எல்லாம் பட்ச பாதம் பார்ப்பார்கள். இது ஜனநாயக நாடு. எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள். உண்டாகும் அதிகாரங்கள் எல்லாம் இறைவனால் தான் உண்டாகிறது.

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
19-மே-201716:53:06 IST Report Abuse

Mohamed Ilyasகட்ஜு குதர்க்கமான பல பதிவுகளை இட்டாலும் மக்கள் நலன் சார்ந்த கருத்தாக தான் உள்ளது ஆதலால் வெறுப்பு விருப்பின்றி வரவேற்க தான் வேண்டும்

Rate this:
Rajinikanth - Chennai,இந்தியா
19-மே-201716:51:19 IST Report Abuse

Rajinikanthகட்ஜு கருத்து சொல்லிட்டாப்புல ..நெட்டிசன்களே.. ஸ்டார்ட் மியூசிக் .... ஏன்னா.. மனசுல பட்டதைத்தான் இந்த ஊருல பட்டுன்னு சொல்லமுடியாதே

Rate this:
V.Ravichandran - chennai .,இந்தியா
19-மே-201716:25:59 IST Report Abuse

V.Ravichandranவயசு , கெளரவம் இதையெல்லாம் விட்டு கட்ஜூ பேசுகிறார் .

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19-மே-201716:20:55 IST Report Abuse

Endrum Indianடாஸ்மாக் நாட்டை தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் ஒரு நடிகன், நடிகை அந்த மாநிலத்தின் முதன் மந்திரி ஆகவே இல்லை? அப்படியென்றால் டாஸ்மாக் நாடு அவ்வளுவு கூமூட்டைகள் சேர்ந்த நாடா? கேவலம்???? தமிழன் தலை குனிந்து நிலம் பார்க்கின்றான் கூனிக்குறுகி அவமானத்தில் இந்த நடத்தையினால்? இது எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் "குடி" தான், டாஸ்மாக் நாட்டில் 72 % குடிகாரர்கள் என்கின்றது ஸ்டாட்டிஸ்டிக்ஸ்.

Rate this:
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
19-மே-201715:23:22 IST Report Abuse

தறுதலைஜி நீர் உன் வயதிற்கும் இருந்த பதவியின் கௌரவத்திற்கும் உகந்தமாதிரி பேசாம விளம்பர வெறி பிடிச்சு அலைகிறீரே இது நல்லவா இருக்கு?

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement