சுட்டெரிக்கும் வெயிலால் திருத்தணியில் நேற்று செல்ஷியஸ்...46 டிகிரி! | சுட்டெரிக்கும் வெயிலால் திருத்தணியில் நேற்று 46 டிகிரி செல்ஷியஸ் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சுட்டெரிக்கும், வெயிலால், திருத்தணியில், நேற்று ,46,டிகிரி! செல்ஷியஸ்...,

தமிழகத்தின் வட மாவட்டங்களை, ஒரு வார மாக கோடை வெயில், சுட்டெரிக்கும் நிலை யில், திருத்தணியில், நேற்று, 46 டிகிரி செல்ஷி யஸ், அதாவது, 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநிலத்தின் பெரும் பாலான பகுதி களில், அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

சுட்டெரிக்கும், வெயிலால், திருத்தணியில், நேற்று ,46,டிகிரி! செல்ஷியஸ்...,

தமிழகத்தில், மார்ச், 1ல் கோடைக்காலம் துவங்கியது; மூன்று மாதமாக, வெயில் சுட்டெ ரித்த வண்ணம் உள்ளது. இது வரை, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள மக்களை, வாட்டி வதைத்த வெயில், ஒரு வாரமாக, வட மாவட்டங்களில் உள்ளவர்களை யும், அனலில் தவிக்க வைத்து உள்ளது.

அதிகபட்சம்


காலை, 5:30 மணி முதல் சூரியனின் சுட்டெரிப்பு துவங்கி, மாலையில், சூரியன் மறைந்த பிறகும்,

வெப்பம் தகிக்கிறது.நேற்றைய நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், மாநிலத்திலேயே அதிக பட்சமாக, 46 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக, தனியார் வானிலை இணையதளமான, 'அக்குவெதர்' தெரிவித் துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையமோ, 45 டிகிரி செல்ஷியஸ் பதிவானதாக கூறியுள்ளது. திருத் தணிக்கு அடுத்ததாக, சென்னை விமான நிலைய பகுதியில், 43.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. வேலுாரில், 43.2; சென்னை நுங்கம்பாக்கம், 42.6; புதுச்சேரி, 42.4; கடலுார், 41.9; திருச்சி, 41.7; மதுரை, 41.1; நாகை, 40.1; சேலம், 37.8; காரைக் கால், 40.1; கோவை, 35.2 டிகிரி செல்ஷி யஸ் அளவில், வெயில் இருந் தது. கொடைக் கானல், 21.8; குன்னுார், 26.9; வால்பாறை, 28 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில், வெப்பம் குறைவாக இருந்தது.

முடங்கினர்


தமிழகம் எங்கும், அனல் காற்றால் பொது மக் கள் கடும் அவதிப்பட்டனர்.மாலை, 6 மணிக்கு பிறகும், தகித்த வெப்பத்தால், பொது மக்கள் பகலில் வெளியே வர முடியாமல் தவித் தனர். பெண்களும், குழந்தைகளும் மாலை வரை,

Advertisement

வீட்டிலேயே முடங்கினர். வெயிலை சமாளிக்க, குளிர்ச்சி தரும் பழச்சாறு, சைவ உணவு வகைகள், அதிக அளவுக்கு குடிநீர் எடுத்துக் கொள்ள, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அனல் கக்கும்


அடுத்து வரும், இரண்டு நாட்களுக்கும், இதே அளவுக்கு வெயில் இருக்கும் என, வானிலை ஆய்வு மைய இயக்குனர்,பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், ''இன்னும் இரு தினங்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 24 மாவட்டங் களில், அனல் காற்று வீசும். சில இடங்களில் சுழல் காற்றும், இடியுடன் கூடிய வெப்பச்சலன மழையும் இருக்கும்.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், இயல்பான அளவை விட, 3 டிகிரி வரை கூடுதல் வெயில் இருக்கும்,'' என்றார்.

இடியுடன் மழை


நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி, தாளவாடி, 4; மாயனுார், அரவக்குறிச்சி, வாணியம்பாடி, 3; மேலாலத்துார், ஓசூர், வாழப்பாடி, திண்டிவனம், கொடுமுடி, செஞ்சி, ஆலங்காயம், சேலம், நாமக்கல், பரமத்தியில், 2; தொழுதுார், பொள் ளாச்சி, ஓமலுார், சேந்தமங்கலம், பரமத்தி வேலுார், முசிறியில், 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி, சேலம், திருப்பத்துார், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில், பலத்த மழையும், தர்மபுரி, திண்டுக்கல்லிலும் லேசான மழையும் நேற்று பெய்தது.

அந்தமானில் மையம் கொண்டுள்ள, தென் மேற்கு பருவ மழையின் தாக்கத்தால், துாத்துக் குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், கடல் அலை சீற்றத்துடன் காணப்படும்; குளச்சல் பகுதியில் ராட்சத அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-மே-201717:38:31 IST Report Abuse

ezhumalaiyaanஆட்சியாளர்களோ.பொது.மக்களோ.அறியவில்லையே.டெல்லியிலே.பொய்.எதிர்க்கிறோம்..என-சொல்லும்.விவசாயக்கூட்டம்.ஆக்கபூர்வமாக.உள்ளோரின்.மழை.காலத்திற்குள்.சிறு.சிறு.குளங்கள்.கிணறுகளை.ஆழப்படுத்தலாமே.

Rate this:
ramesh -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-201716:51:15 IST Report Abuse

rameshஅடிக்குது குளிரு ஆஆஆ ....

Rate this:
Krishna - villupuram,இந்தியா
19-மே-201714:38:03 IST Report Abuse

Krishnaமனித இனம் தங்கள் பாரம்பரியம், உண்மை நிலை, பொறுப்பு ஆகிய அனைத்தையும் மறந்து நவீனத்தின் உச்சிக்கு செல்ல விரும்புவதால் இந்த அழகிய பூமி பந்து தன்னுடைய இயல்பான பண்புகளிலிருந்து விலகி எங்கோ போய் கொண்டு இருக்கிறது. இயற்கையை அழிக்க அல்லது ஒழிக்க நினைத்தால் அது அதனுடைய பலத்தை கட்டாயம் மனிதர்களுக்கு உணர்த்தும். மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் ஒரு மரத்தையாவது தன வாழ் நாளில் இந்த பூமியில் நட்டு உயிர்கள் வாழ நல்ல சுழலை உருவாக்குவோம்.

Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-மே-201712:31:49 IST Report Abuse

A.George AlphonseKali Kalam started the world end is nearing day by day.The sinners are increasing day by day like the hot temperature.

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
19-மே-201712:17:53 IST Report Abuse

R Sanjayவீடுகள் தோறும் மரம் நடுங்கள், அப்படிப்பட்ட நில வசதி அமைப்பு இல்லையெனில் உங்கள் வீட்டு மாடியில்/பால்கனியில் செடி கொடிகள் மற்றும் பயனுள்ள தாவரங்களை வளருங்கள், விவசாயநிலங்களை பணத்திற்காக விற்காதீர்கள், காடுகளை சுயலாபத்திற்காக அழிக்காதீர்கள், இயற்கையை இயற்கையாக விட்டு வையுங்கள், ஒரு கிராமத்தை அழித்து ஒரே வருடத்தில் ஒரு நகரமாக்கிவிட முடியும் ஆனால் ஒரு நகரத்தை அழித்து 10 வருடமானாலும் ஒரு கிராமத்தை உருவாக்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்க. வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறதா இளநீர் பதநீர் அருந்துங்கள், தர்பூசணி கிர்ணி பழ சாறுகளை பருகுங்கள், மாறாகா விஷமுள்ள கோக் பெப்சி போன்ற குளிர்பானங்களை நாடாதீர்கள், வெப்பத்தை தணிக்க வீட்டில் உள்ள மின்விசிறியை பயன்படுத்துங்கள் மாறாக ACயை உபயோகப்படுத்தாதீர்கள் AC மூலம் வீட்டை விட்டு வெளியே வரு வாயு இயற்க்கைக்கு உகந்தது அல்ல. இயற்கையாக வாழ பழகுவோம் இயற்க்கைக்கு துணை நிற்போம்

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
19-மே-201709:29:08 IST Report Abuse

Kuppuswamykesavanகடும் உச்சி வெய்யிலின் அனல் அடிக்கும் நேரத்தில், எனது வயிரில் கூட எதோ பாதிப்புக்கள் நிகழ்வதை, நான் உணர்ந்திருக்கிறேன். ஆகவே இயற்கையான பானங்களை கடும் வெய்யில் நேரத்தில் அருந்துங்கள் மக்களே.

Rate this:
பிரேமானந்தா சாமியார் - perth,ஆஸ்திரேலியா
19-மே-201708:47:23 IST Report Abuse

பிரேமானந்தா சாமியார் ரஜினிகாந்தை வெளியே வரவேண்டாம் என்று சொல்லுங்கப்பா ....வெயில் ஜாஸ்தி ....

Rate this:
தமிழ் - ஈரோடு,இந்தியா
19-மே-201708:47:00 IST Report Abuse

தமிழ்வட மாநிலங்களில் தான் இந்த அளவு வெயில் இருக்கும். இப்பொழுது நம்ம ஊரிலும் வெயில் வாட்டுது. அனைவரும் முடிந்த அளவு மரம் நடுவோம், பராமரிப்போம், வருங்கால சந்ததிகளுக்கு ஒரு சொர்க்க பூமியைப் பரிசளிப்போம்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மே-201708:39:15 IST Report Abuse

Srinivasan Kannaiyaகொடுங்கோலர்கள்... நீதி தவறியவர்கள்.... நேர்மை இல்லாதவர்கள் வாழும் காலம் முடிவுக்கு கண்டு வரப்படுகிறதோ என்னவோ..

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201708:34:58 IST Report Abuse

K.Sugavanamதன வினை தன்னை "சுடும்"..

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement