குளிப்பதற்கு பாதுகாப்பற்றது கங்கை நீர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் | குளிப்பதற்கு பாதுகாப்பற்றது கங்கை நீர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
குளிப்பதற்கு பாதுகாப்பற்றது கங்கை நீர்
மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

டேராடூன்:'ஹரித்துவாரில் ஓடும் கங்கை நதி, குளிப்பதற்கு கூட லாயக்கில்லாத அளவு மாசடைந்து உள்ளது' என, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குளிப்பதற்கு, பாதுகாப்பற்றது, கங்கை ,நீர் , மாசு, கட்டுப்பாட்டு வாரியம் ,தகவல்

உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந் திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தேவப்பிரயாகையில் உற்பத் தியாகும் கங்கை நதி, ஹரித்துவார் உள்ளிட்ட

முக்கிய நகரங்கள் வழியாக ஓடுகிறது.கங்கையில் குளித்தால்பாவங்கள் அகலும் என்பதால், லட்சக் கணக்கானோர், கங்கையில்புனித நீராடுகின்றனர்.

ஹரித்துவார் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித் துள்ளது. முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் அமைக்கப்படாததால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு, கங்கையில் கலக்கி றது. இதனால், கங்கைநதி மாசடைந்துஉள்ளது.

இந்நிலையில், தகவல்அறியும் உரிமைசட்டத்தின் கீழ், கங்கை நதி நீரின் மாசு தன்மை குறித்து கேட் கப்பட்டகேள்விக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம்அளித்துள்ள பதில்:

உத்தரகண்டில், கங்கோத்ரி முதல், ஹரித்துவார் வரை, 11 இடங்களில் கங்கை நதிநீர் மாதிரிகள் ஆய் வுக்காக எடுக்கப்பட்டன. தண்ணீரின் வெப்ப நிலை,

Advertisement

ஆக்சிஜனின் அளவு மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றை வைத்து, சோதனை நடத்தப் பட்டது.

இதில், கங்கை நதிநீர், குடிப்பதற்கும், குளிப்ப தற்கும் பாதுகாப் பற்றது என்பது தெரிய வந்துள் ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் - ஈரோடு,இந்தியா
19-மே-201722:18:09 IST Report Abuse

தமிழ்மிகப் பெரிய பாவம் செய்துட்டீங்களேடா... இனி எங்கு போய் உங்கள் பாவத்தைப் போக்குவீங்க?

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-மே-201721:48:01 IST Report Abuse

தமிழ்வேல் நீங்க காச கொட்டி சுத்தம் பண்ணவே வேண்டாம். அதை அசுத்தம் பண்ணாம இருந்தாலே போதும்.

Rate this:
Kaunakaran Narayanasamy - chennai,இந்தியா
19-மே-201720:51:35 IST Report Abuse

Kaunakaran Narayanasamyநம்ம நாட்டில் எந்த நதி சுத்தமாக ஓடிகிக்கொண்டிருக்கிறது, மனிதனின் சுயநலத்தினாலும், அறிவிண்மியானாலும் எல்லா இயற்கையும் அழித்து கொண்டிருக்கிறான், கடைசியில் அனைவரும் அழியப்போகிறோம்

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
19-மே-201716:03:06 IST Report Abuse

Visu Iyerகங்கையில் குளிக்க தடை என்று சட்டம் போட போறாங்க.. அதற்கான முன் மாதிரி செய்தி தான் இது... இதற்கு தானே ஆசை பட்டாய் ராசகுமாரா

Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
19-மே-201715:53:31 IST Report Abuse

Dol Tappi Maaஇதெல்லாம் தமிழனுக்கு பெரிய விஷயமே இல்லை . எப்போ தலைவன் படம் வரும் உழைத்து சேர்த்த பணத்தை குடும்பத்துக்கு கொடுக்காமல் அவனிடம் கொட்டி இன்னும் எப்படி அம்பானி அளவிற்கு பணக்காரன் ஆக்கலாம் . எப்படி அவனை தமிழ நாட்டையே கொடுத்து பில் கேட்ஸ் அளவுக்கு ஆகலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்கள்.

Rate this:
Kalyani S - Ranipet,இந்தியா
19-மே-201715:02:46 IST Report Abuse

Kalyani Sநல்லவேளை புனித கங்கை நதி தமிழகத்தில் ஓடவில்லை இல்லை என்றால் தமிழிசைகளும், ராஜாக்களும் 50 ஆண்டுகால திராவிட ஆட்சி தான் ஊழல் மிகுந்த நிர்வாகத்தால் கங்கையை மாசு படுத்தி விட்டது என்று ஒப்பாரி வைத்திருப்பார்கள்.

Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-201717:37:44 IST Report Abuse

Sivramkrishnan Gkதிராவிட ஆட்சியாளர்கள் கங்கையை சுரண்டி அந்த மண்ணையும் வித்திருப்பார்கள்...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201719:46:03 IST Report Abuse

K.Sugavanamகங்கையில் மட்டும் மண்ணே அள்ள படுவதில்லை போல...கங்கையையே இப்போது விற்றுவிடுவார்கள் போல..அதற்காகத்தான் இப்படி ஒரு அறிக்கை...ஸ்வச்ச cess வசூல் எங்கே கொட்டப்பட்டதோ?...

Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
19-மே-201722:16:09 IST Report Abuse

Dol Tappi Maaசினிமா காரர்கள் ஆட்சி என்று சொல்லுங்கள்....

Rate this:
sankar - trichy,இந்தியா
19-மே-201723:24:49 IST Report Abuse

sankarதமிழ் நாட்டில் கங்கை இருந்திருந்தால் மங்கை சோதகமானால் கங்கையில் குளிக்கலாம் கங்கை சூதகமானால் எங்கு செல்வது (என்று மணல் கொள்ளைக்கு எதிராக )என்று எதிர் கட்சியா இருக்கும்போது வாழும் வள்ளுவர் என்று தனக்கு தானே பட்டம் சூடியவர் ஒப்பரி வைத்திருப்பார் . ஆளும் கட்சியா இருந்தால் மங்கை சூத்தகம்போது கங்கையுதாம் சூதகமாகும் ஏன் என்றால் கங்கை மங்கை தானே (என்று மணல் கொள்ளைக்கு ) அத்ரவாகா மடக்கி பேசி இருப்பார் . தமிழசைகளும் ராஜாக்களும் எதிர்காதால் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்ட திராவிட திருடர்கள் இனியாவது திருந்தட்டும்...

Rate this:
krishna - cbe,இந்தியா
19-மே-201714:44:10 IST Report Abuse

krishnaமாசுபடுதல் என்பது மக்களின் செயல்களால் மட்டுமே. மக்கள் வசிக்காத பகுதிகளில் மாசடைவது இல்லையே.

Rate this:
Rahim - Jubail,சவுதி அரேபியா
19-மே-201711:43:24 IST Report Abuse

Rahimசுத்தப்படுத்த முடியாது என்று தெரிந்தும் கங்கையை சுத்தமாக்க 3000 கோடி ரூபாய் ஒதுக்கி ஊழலில் திளைக்கிறது மத்திய அரசு அதோடு சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 2500 கோடி , ஆனால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 1700 கோடி அதுவும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பாதி தொகையும் மீதி கொஞ்சம் கொசுறுகள் மாநில கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு, ஆகா பேஷ் பேஷ்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
19-மே-201715:39:46 IST Report Abuse

தேச நேசன் விவசாயம் மாநில அரசுபட்டியலில் வருவது மத்திய வருவாய் பங்கீட்டிலிருந்து மாநில அரசுகள் செய்யவேண்டிய கடமையது, அக்கடமையை மறந்து இலவச டிவி சைக்கிள் லேப்டாப் மிக்சி கிரைண்டர் மத்திய அரசா கொடுக்கச்சொன்னது ? இதனைத்தவிர உரமானியம் பூச்சிமருந்து மானியம் வேளாண் ஆராய்ச்சி நூறு நாள் வேலைத்திட்டம் போன்றவைக்கு பல்லாயிரம் கோடி கொடுப்பது யாருக்குப் போய்ச்சேருகிறது ? ஸம்ஸ்க்ருத வளர்ச்சிக்கு கொடுத்தனர் சரி ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மதரஸாக்களுக்கு 1000 கோடி கொடுத்தபோது ஏன் மவுனமாக இருந்தீர்கள்? பதோ பரதேஷ் திட்டம் மூலம் நூற்றுக்கணக்கான மைனாரிட்டி மாணவர்கள் வெளிநாட்டுக்கு கல்வி கற்க கோடிக்கணக்கில் ஸ்காலர்ஷிப் கொடுத்தபோது நன்றியா சொன்னீர்கள்?...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201719:48:11 IST Report Abuse

K.Sugavanamஅதென்ன "பதோ பரதேஷ்" பரோட்டா வகையா?புரியற மாதிரி பெரு கூட வைக்க மாட்டாங்க போல.....

Rate this:
rammeshbabu - bangalore,இந்தியா
19-மே-201711:20:50 IST Report Abuse

rammeshbabu15 வருடங்களுக்கு முன்பு ஓர் பிளாஸ்டிக் கேனில் ஹ்ரித்வாரில் இருந்து எடுத்து வந்த கங்கை நீர் இன்னுமும் துர்நாற்றம் வராமல் இருக்கிறது. இயற்கை அதனை பாதுகாத்து கொள்ளும் நம்மால் முடிந்த வரியில் நதிகளை மாசு படுத்தாமல் இருக்க வேண்டும். அது தான் நாம் இயற்கைக்கு செய்யும் பரிகாரம்

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201719:50:25 IST Report Abuse

K.Sugavanamபிளாஸ்டிக் கேன் அபாயகரமானது..எனவே அதை உடன் ஒரு தாமிர பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்..பிளாஸ்டிக் கேன் இல் தண்ணீரை ஆறு மாதங்களுக்குமேல் சேமிக்காதீர்கள்....

Rate this:
19-மே-201710:03:13 IST Report Abuse

ரினேக்ஷ்நம்மவர்கள் கூவத்தை சுத்தம் செய்கிறோம் என்று சொல்வதைப் போல், BJP கங்கையை சுத்தம் செய்வதாக சொல்லியது என்ன ஆனது.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201719:51:26 IST Report Abuse

K.Sugavanamவாசனை திரவியத்துக்கு மேலை நாடுகளில் ஆர்டர் கொடுத்துள்ளனர் போல....

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement