30 ஆண்டுகளுக்கு பின் பீரங்கி மத்திய அரசு நடவடிக்கை | 30 ஆண்டுகளுக்கு பின் பீரங்கி மத்திய அரசு நடவடிக்கை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
30 ஆண்டுகளுக்கு பின்
பீரங்கி மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி:இந்திய அரசியலை உலுக்கிய போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புகார் வெளிவந்து, 30 ஆண்டுகளுக்கு பின், நவீன பீரங்கிகளை, மத்திய அரசு வாங்கிஉள்ளது.

காங்கிரசை சேர்ந்த மறைந்த பிரதமர் ராஜிவ் பதவி காலத்தில், சுவீடனில் இருந்து பீரங்கிகள் வாங்கியதில், காங்கிரஸ் பிரமுகர்கள் கமிஷன் பெற்றதாக, புகார் எழுந்தது. இதனால், இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு, 1989 லோக்சபா தேர்த லில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

இந்நிலை யில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லை பகுதியில் அடிக்கடி பதற்றமான சூழல் உருவாகி வருவதால், பீரங்கி படையை பலப்படுத்த, நம் ராணுவம் முடிவு செய்துள்ளது.

உள்நாட்டு தயாரிப்பு பீரங்கிகள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்து, பீரங்கிகளை வாங்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக, போபர்ஸ் ஊழல் புகார் வெளி வந்து,30 ஆண்டு களுக்கு பின், தற்போது, வெளிநாடுகளில் இருந்து பீரங்கி வாங்கப்பட்டுள்ளது;அமெரிக்காவிடம் இருந்து, இரண்டு அதிநவீன பீரங்கிகளை மத்திய

Advertisement

30, ஆண்டுகளுக்கு, பின், பீரங்கி, மத்திய, அரசு,  நடவடிக்கை

அரசு வாங்கியுள்ளது. இலக்கை நோக்கி துல்லி யமாக சுடக்கூடிய இந்த வகை பீரங்கிகள், நேற்று இந்தியா வந்து சேர்ந்தன. இலகு ரக, நவீன பீரங்கிகளான இவை, சீனா எல்லையில் நிறுத்தப்பட உள்ளன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201714:49:32 IST Report Abuse

மலரின் மகள்இந்தியாவின் எல்லை பகுதிகள் இரண்டு விதமானவை. இரண்டுமே மிகவும் சிக்கலானவை. ஒன்று பறந்து விரிந்த கடல் பகுதி. கண்காணிப்பில் தான் அதிக அக்கறை வேண்டும். நீர்மூழ்கிகளும், கப்பல்படையும் மிகவும் நவீரனா படுத்த படவேண்டும். ஹெலிகாப்டர் மற்றும் சோனார் ரேடார் கண்காணிப்புகள் உயர்த்தப் படவேண்டும். சுற்றி இருக்கும் தேசங்கள் மிகவும் சிறியவை ஆபத்துகள் பெரிதாக இல்லை. அடுத்தது கடுமையான பணியும், மழைகள் கொட்டி தீர்க்கும் நதி வெள்ளைப் பெருக்கெடுத்து ஓடும் காலநிலை தாறுமாறாக மாறும் இமையமலை. மிகவும் சிக்கலான எல்லை. பாதுகாப்பு மிகவும் பிரச்சினைக்குரியது. சிறிது சிறு தீவிரவாத குழுக்கள் தனி தனியாக நுழையும் வாய்ப்புகள் அதிகம். அவர்கள் உள்ளே நுளைந்தாள் வரும் உள்நாட்டு ஆபத்து பெரிது. சில வழிகள் மூலம் மட்டுமே ராணுவத்தின் சில பட்டாணியங்கள் நுழைய முடியும். அதை கருத்தில் கொண்டு நவீன ரக பீரங்கிகள், சிறு ஏவுகணைகள் நிறைய தேவை. இவர்கள் போபார்ஸ் பீரங்கிகள் வாங்கிய போதே கூடவே சோப்மா வகை பீரங்கிகளை வாங்கி இருக்கலாம். பேரத்தில் சாதாக விலை கிடைத்திருக்கும். நாம் ஆப்பிள் போன் வைத்திருந்தாலும் சாம்சங் போனும் சாதரண நோக்கியாவும் வாங்கி வைத்திருப்பதில்லையா. அதை எப்போது எவ்வாறு பயன்படுத்துவது என்று அறிந்து அதன் பொருட்டு வாங்கி வைப்பது போல. வேறு சில நிறுவங்களிடமிருந்தும் வாங்கும் நடைமுறையை அமல் செய்திருக்கவேண்டும் அதை செய்ய வில்லை. யார் அதிகம் லஞ்சம் கொடுத்தார்களையோ அவர்களிடமிருந்து மட்டுமே பீரங்கிகளை வாங்கினார்கள். எல்லாம் இருக்கட்டும். நாம் அமெரிக்க ரஷியா விடமிருந்தும் இஸ்ரேலிடமிருந்தும் ராணுவ கவச உடைகளையும் வாங்க வேண்டும் அதிக அளவில் அதில் கோட்டை விட்டு விட கூடாது. எதிரியிடம் மாற்றுகின்ற நமது ராணுவ வீரர்கள் தப்பிக்கவோ அல்லது அவர்களை கொன்று விட்டு உயிர் தியாகம் செய்யவோ வழியில்லாமல் போய் விடுகிறது நமது கவச உடைகளின் தன்மை. எதோ பெயரளவிற்கு ஹெல்மெட்டாய் வண்டியில் மாட்டி வைத்து விட்டு தடையாய் வீலெர் ஒட்டி செல்வது போலத்தான் ராணுவ வீரர்களுக்கு கவச உடைகள் தரப்பு பட்டிருக்கிறது. கவச உடையை முதன் முதலில் பயன் படுத்தியதே இந்தியர்கள் தான். துரியோதனனின் கவச உடை நமது ஒவ்வொரு ராணுவ சகோதர சகோதஹ்ரிகளுக்கு கட்டாயம் தரபடவேண்டும்.

Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
19-மே-201719:21:41 IST Report Abuse

Renga Naayagiஎழுதறத பாத்தா பாகுபலி படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி இருக்கு ......

Rate this:
19-மே-201723:49:30 IST Report Abuse

SarathiriderSarathiridersalute...

Rate this:
Amaladas - coimbatore,இந்தியா
19-மே-201712:12:32 IST Report Abuse

Amaladasஅப்பே இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் சண்டை வராதா ? சும்மா தான் பீரங்கி வாங்கி இருக்கோமா ?

Rate this:
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
19-மே-201710:26:53 IST Report Abuse

Jaya Prakashஎல்லாம் நேரம்டா சாமி.... நாம ஏற்றுமதி செய்த மூளைதான் இந்த பீரங்கியை வடிவமைத்திருக்கும்.. முதலில் IIT போன்ற தரமான கல்விக்கூடங்களில் படிக்கும் மாணவர் குறைந்தது 5 வருடம் இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்ற கண்டிப்பு வேணும். சும்மா சூப்பர் பவர் ... சூப்பர் பவ்ர் என்று வாயால் சொன்னால் பத்தாது... நாம் இன்னும் ஐஸ் குச்சியை சூப்புற பவராதான் இருக்கோம்.....

Rate this:
19-மே-201723:49:06 IST Report Abuse

SarathiriderSarathiridergreat...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மே-201708:46:31 IST Report Abuse

Srinivasan Kannaiyaவாங்கி என்ன புண்ணியம்... அனைத்து படைக்கலன்களும் உபயோகிக்காமல் துருப்பிடித்து அல்லவா கிடக்கிறது....

Rate this:
Indian - Bangalore,இந்தியா
19-மே-201712:23:10 IST Report Abuse

Indianஇந்த பீரங்கியெல்லாம் உபயோகப்படுத்தவேண்டுமென்றால் போர் தான் வரவேண்டும். போர் வராமலிருக்கவே எள்ளலோரும் நினைப்பார்கள். நீங்கள் வித்தியாசம் தான்....

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
19-மே-201708:26:42 IST Report Abuse

தேச நேசன் எல்லா டிப்ளமேடிக் ராஜீய உறவு ஒப்பந்தங்களிலும் அவற்றுக்கு விலையாக ஆயுதங்களை அதிக விலைக்கு வாங்குதல் மரபுதான் பாஜகவும் அம்மரபுப்படி (??) பீரங்கி வாங்கியுள்ளது ஏனெனில் அந்நாடு சொந்தமாக விலைகுறைவாக தரமாக செய்யும் தொழில்கள் ஆயுதம் மது மற்றும் விபச்சாரமும்தான்

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
19-மே-201707:59:32 IST Report Abuse

தங்கை ராஜாபீரங்கியை பற்றி இப்பவே பெருமை பட்டுக்கொண்டால் தான் உண்டு. அடுத்து ஆள வருபவர்களுக்கும் இந்த சி பி ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் அடி பணியுமே............

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-மே-201706:39:48 IST Report Abuse

Sanny ஆமா இந்த ஊழல் விடயத்தை நம்ம துப்பறிவாளர், சு.சாமி இந்த 30 வருடமாக என்னசெய்தார், இதை பற்றி போட்டுக்கொடுக்க அவருக்கு இத்தாலி மச்சான்ஸ் கிடைக்கவில்லையா? அல்லது ராஜிவ் கொலை கேசில் மாட்டிவிடுவாங்க என்று பயமா?

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மே-201705:23:00 IST Report Abuse

Kasimani Baskaranபிரச்சினை செய்யும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஈடுகொடுக்க ஆயுதம் வாங்கித்தான் ஆகவேண்டும்...

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-மே-201706:30:08 IST Report Abuse

Sanny காசிமணி ஐயா, நல்லவேளை இதை சிங்கப்பூரில் இருந்து தமிழில் எழுதினீர்கள். சைனிஸில் எழுதியிருந்தால், யாதவ் மாதிரி உங்க மேல கேஸ்போடுவாங்க, சீனர்கள், ஒரு பேச்சுக்கு சொன்னேன்....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201708:44:31 IST Report Abuse

K.Sugavanamமஹிந்திரா கம்பெனிக்கு லக்கி ப்ரைஸ்..அதை இங்கு தயாரிக்க DRDO வுக்கு திறமை இல்லையா?...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201708:46:29 IST Report Abuse

K.Sugavanamஆயுதம் வாங்கியே "போண்டி" ஆயிடுவோம் போல Sanny ஜி..போண்டி நல்ல பீச்சு....

Rate this:
Indian - Bangalore,இந்தியா
19-மே-201712:27:03 IST Report Abuse

IndianDRDO க்கு உண்மையில் இதற்கான திறமையில்லை. DRDO கீழ் எத்தனை அமைப்புகளுள்ளன தெரியுமா? DRDO தயாரிக்கலாம். என்ன 2020 இல் கேட்டால் 2035 இல் தான் வரும். மிகப்பெரிய சீர்திருத்தங்கள் தேவை. சுகவனம் நீங்கள் தயவுசெய்து அக்னி சிறகுகள் படியுங்கள்....

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-மே-201714:29:37 IST Report Abuse

Sanny சுகவனம் அடுத்த இராணுவ, விமான படை எக்ஸிபிஷன் இல் பார்வைக்கு வைக்கப்படும் பார்க்கலாம், ஆனால் பணம் கொடுக்கணும் டிக்கெட்டுக்கு....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மே-201720:27:23 IST Report Abuse

Kasimani Baskaranபீரங்கி என்றால் மிக எளிதாக தீப்பெட்டி தயாரிப்பது போல தயாரிக்கலாம் என்று நினைக்கிறார்கள்......

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201721:55:51 IST Report Abuse

மலரின் மகள்அது ஆராய்ச்சி நிறுவனம் உற்பத்தி சாலை இல்லை. நம்மிடம் ஆராய்ச்சிகளின் நோக்கம் சரியாக கொண்டுவரப்படவில்லை. அகடெமிக் இண்டேறேச்ட் ஆகத்தான் இருக்கிறது. தொழிற்கூடங்களை உருவாக்கவோ, தயாரிப்புகளுக்காகவோ ஆராய்ச்சிகள் இல்லை. சி எஸ் ஐ ஆர் சிறப்பாக செயல் படுகிறது அனால் அனைத்து பொருட்களையும் வெளியிலிருந்து வாங்கி நமது மூளையை மட்டும் பயன்படுத்தி இணைக்கிறோம். அத்துடன் விட்டு விடுகிறவம் வெற்றி பெற்று சந்தோசம் கொள்கிறோம். ஒவ்வொருவரிடமும் அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை யாரவது வாங்கி உற்பத்தி செய்யுங்கள் என்று அழைக்கிறார்கள். கடந்த ஏப்ரலில் பெங்களூரில் நனடந்தது. இனி அடுத்த ஆண்டு தான். KNOWLEDGE LICENSING என்று மாறி இருக்கிறார்கள் அவர்கள்....

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
19-மே-201702:10:51 IST Report Abuse

Kuppuswamykesavanஅமெரிக்காவின் பீரங்கிகளுக்கு, இன்றைய காலகட்டத்தில், மிகவும் அனுபவம் அதிகம் எனலாம். அந்த நம்பிக்கையில் அந்த பீரங்கிகளை இந்திய அரசு வாங்குதோ? .

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201708:47:57 IST Report Abuse

K.Sugavanamஇராக்,ஆப்கானில தரப்பரிசோதனை செய்யப்பட்டது போலும்.....

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201722:04:27 IST Report Abuse

மலரின் மகள்நீங்கள் கூறும் தேசங்களில் செயலாற்றியா பீரங்கிகள் நமக்கு துளியும் பயன் படாது. வெப்ப பகுதியில் பாலைவனத்தில் செய்யவது இமயமலை பகுதிக்கு பயன்படாது. மைனஸ் இருபதுக்கு கீழே பீரங்கிகளின் கட்டுப்பாடுகள் மிகத்துல்லியமாக செயல் படவேண்டும். திரவ திட எரிபொருட்கள் பயன் பட வேண்டும். வெடிக்க வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக. மலைப்பகுதியில் இருட்டில் பனி பொழுவில் திடீர் திடிரென்று மாறும் குளிர் மாறுதலைகளை சமாளிக்கும் வண்ணம் எலெக்ட்ரானிக் பொருட்கள் MATERIALS வேண்டும். சென்சார் சரியாக அந்த குளிர் மாறுதல்களில் அவளெஞ்சே எதிரித்து செயலாற்ற வேண்டும். எனது எலெக்ட்ரானிக் மாணவர்களும் உற்பத்தி மற்றும் அதன் மூலப் பொருட்கள் போன்ற இயற்பியலை படிப்பதில்லை. தினமலரின் மழை தெய்வம் திரு ரமணன் வானிலை அறிவிப்பாளர் படித்த படிப்பு தான் அதற்கு தேவை. எ து நிறைய எலெக்ட்ரானிக் மாணவர்களுக்கு அலர்ஜி - ஆசிரியர்களுக்கும் தான். செராமிக்ஸ் படித்தவர்கள் சிறப்பாக எய்கிறார்கள். இவர்கள் எல்லாரையும் ஐ டி கம்பனிகள் வேறு வற்றிற்கு பயன் படுத்தி கொள்வதால். நமக்கு அவர்களின் அறிவு பயன் படவில்லை. மருத்துவம் மட்டும் அல்ல எந்த அறிவியல் என்றாலும் ஆழ்ந்து படிப்பேன். மிகச் சிறந்த நூல்களை மட்டுமே தேஇடப்பிடித்து படிப்பேன். விளைப்பற்றி கவலை படமாட்டேன். உயர்ந்தவற்றை மட்டுமே தொடர்ந்து தொடரவேண்டும். வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதும் புத்தகங்கள் எளிமையாக புரியும்படி இருப்பதில்லை என்கிறார்கள் அதற்கு காரணம் ஆங்கில அறிவு சரிவர கியோடைக்காததே. அதை சரி செய்தால். நாம் வேகமாக முன்னேறலாம்....

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
19-மே-201701:47:24 IST Report Abuse

Kuppuswamykesavanமலை பிரதேசங்களுக்கு இப்படிப்பட்ட பீரங்கிகள்தான், யூசர் பிரென்ட்லி-யாக இருக்கும் (இராணுவத்துக்கு).

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201708:49:03 IST Report Abuse

K.Sugavanamசோதனை பண்ணிட்டாங்களா? இல்லை வாங்கிட்டுதான் சோதனையா? ஜீப்பு வாங்கின கதையா போகாம இருக்கோணும்.....

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201722:07:32 IST Report Abuse

மலரின் மகள்தானியங்கிகளாக இருப்பது கூடுதல் பலம். எதிரியின் இலக்கை கணித்து தாக்கவல்லது என்னது சிறப்பு. நீங்கள் முயற்சி செய்தால் வருடத்தில் ஒரே ஒரு குறிப்பிட்ட நாளில், அதன் பயன்பாட்டை நாம் நேரில் பார்க்கமுடியும். தக்க அனுமதி பெற்று. சென்று பாருங்கள் பயிற்சியின்போது உங்களுக்கும் சிறப்பு உடைகள் அளித்து மரியாதையுடன் பெருமையாக பார்க்கலாம். குற்றாலத்திற்கு அழைத்து போனது போல இலவச சுற்றுலா திட்டம் இருக்கிறதா. இருந்தால் சொல்லுங்கள் நானும் கூப்பனை கத்தரித்து அனுப்புகிறேன். நீண்ட நாட்கள் ஆகிறது. அதுமாதிரியான அனுபவங்களை தினமலர் தந்து....

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement