குடிநீருக்காக ஊரணியை சுத்தம் செய்த கிராமம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீருக்காக ஊரணியை சுத்தம் செய்த கிராமம்

Added : மே 19, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குடிநீருக்காக ஊரணியை  சுத்தம் செய்த கிராமம்

மேலுார், மேலுார் அருகே குடிநீர் பஞ்சத்தை போக்க ஊரணியை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முன்வராததால் கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து சுத்தம் செய்தனர். புலிப்பட்டியில் 2500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். காவிரி கூட்டு குடிநீர் சரிவர வராததால் புலிப்பாறை ஊரணி மற்றும் பெரிய புலிய அய்யனார் ஊரணி தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் புலிப்பாறையை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆனதால், சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

முத்துக்குமார்:
3 ஏக்கர் பரப்பளவு உள்ள புலிப்பாறையில் பெய்யும் மழை நீர் பாறையின் நடுவில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய பள்ளத்தில் தேங்கும். தண்ணீர் சுத்தமாகவும், சுவையாகவும் உள்ளதால் கிராம மக்கள் அனைவரும் புலிப்பாறை ஊரணியில் தண்ணீர் துாக்குவது வழக்கம். சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் செய்யாததால், 200 க்கும் மேற்பட்டோர் பாறையில் தேங்கி கிடந்த சேறு, சகதிகளை வெளியேற்றி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தனர்.

இப்பாறையில் தண்ணீர் வற்றியதே கிடையாது. தண்ணீர் வற்றும் போது தானாகவே மழை விழுந்து மீண்டும் தண்ணீர் பெருகுவது இதன் சிறப்பு. இதே போல் பெரிய புலிய அய்யனார் ஊரணியை ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்தால் தண்ணீர் பஞ்சமே கிராமத்திற்கு வராது, என்றார்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponmuthu - chicago,யூ.எஸ்.ஏ
20-மே-201700:23:44 IST Report Abuse
ponmuthu மதிமிக்க தமிழ் சொந்தங்களே. தன்னார்வலர்கள் செய்வது சரி. அத்துடன் அதற்கான செலவுகள், கூலி உட்பட நீங்கள் செலுத்தும் வரிப்பணத்தில் பிடித்துக்கொண்டு மீதம் மட்டும் அரசுக்கு செலுத்துங்கள். உங்கள் வரிகள் வேலை செய்வதில்லை, செய்யவையுங்கள். பொன்முத்து, chicago
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
19-மே-201722:39:19 IST Report Abuse
Manian நல்ல ஆரம்பம்தான். மாற்றங்கள் அடிபட்டே மிக மிக மெதுவாக வரும்.
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
19-மே-201721:25:42 IST Report Abuse
rmr மக்கள் இந்த திராவிட காட்சிகளை தவிர்க்க வேண்டும் அப்போ தான் தமிழகத்துக்கு விடிவு காலம் வரும்
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-மே-201717:42:57 IST Report Abuse
ezhumalaiyaan தேர்தலை எதிர்பார்த்து வோட்டு கேட்க வருவோரை விரட்டி அடிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Bala -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-201705:19:04 IST Report Abuse
Bala இப்படியே எலா ஏரிகளும் கண்மாய்களும் குளங்களும் தூர்வாரி இதற்கு போகின்ற நீர்வாய்க்கால்களையு சுத்தம் செய்தால் மழைநீரை ஓரளவு சேமித்து விடலாம் ஆனால் எப்பொழுதுமே தன்னார்வ அமைப்புகளு பொதுமக்களுமே தான் செய்யறாங்கனு தான் செய்தி வருதே ஒழிய அரசாங்கம் செய்தது செய்கிறதுனு ஆட்சியில் உள்ள ஒரு எம்எல்ஏவோ எம்பியோ அவர்களுடைய தொகுதியில இல்ல அவுக பிறந்த சொந்த ஊர்ல செய்தாகனு ஒரு செய்தியையு காணோம் கொள்ளையடிக்குறது மட்டும் தான் அவுக வேல போலருக்கு மத்தபடி நாட்டுக்கோ தன்ஊருக்கோ எந்த நல்லது செய்யமாட்டாய்ங்க போல கெட்டதுக்குனா மட்டும் முன்னாடிநிக்குறானுக தெர்மோகோல் திட்டம் மாதிரி
Rate this:
Share this comment
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-மே-201717:49:59 IST Report Abuse
ezhumalaiyaanமக்கள் வரும் தேர்தலில் பதிலடி கொடுப்பர்....
Rate this:
Share this comment
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
19-மே-201719:12:34 IST Report Abuse
Mohan Sundarrajaraoஎல்லாம் நீங்களே செய்து கொள்ளுங்கள். எந்த வரியையும் அரசுக்கு செலுத்தாதீர்கள் .செலவு அதை விட அதிகமாக ஆகி இருந்தால், அரசுக்கு பில் அனுப்பவும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை