கார்த்தி சிதம்பரம் திடீரென லண்டன் சென்றது ஏன்? | கார்த்தி சிதம்பரம் திடீரென லண்டன் சென்றது ஏன்? | Dinamalar

கார்த்தி சிதம்பரம் திடீரென லண்டன் சென்றது ஏன்?

Added : மே 19, 2017 | கருத்துகள் (74)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கார்த்தி சிதம்பரம், திடீரென, லண்டன், சென்றது ஏன்?

தன் வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, நேற்று காலை, திடீரென லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

மும்பையைச் சேர்ந்த, 'ஐ.என்.எஸ்., மீடியா' என்ற, 'டிவி' நிறுவனத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது. இதை, 4.62 கோடி ரூபாயாக குறைத்துக் காட்ட, 2007ல், உதவி செய்ததாகவும், அதற்காக ஆதாயம் பெற்றதாகவும், ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுந்தது. இது குறித்து, கார்த்தி சிதம்பரம் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

அதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன், சென்னையில் உள்ள அவரது வீடு உட்பட, நாடு முழுவதும், 16 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையில், 2015 டிசம்பரில், கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

தப்பி சென்றாரா கார்த்தி சிதம்பரம்?

இது தொடர்பாக, அவர் மீது மேலும், நான்கு வழக்குகள் பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக, அவரையும், அவரது நண்பர்களையும், டில்லிக்கு அழைத்து விசாரிக்க, சி.பி.ஐ., முடிவெடுத்தது.
இந்நிலையில், நேற்று காலை, 5:30 மணிக்கு, பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தில், கார்த்தி சிதம்பரம், தன் நண்பர்கள் மூன்று பேருடன், பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். அவர் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுவது, சி.பி.ஐ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Royapuram Chandru - Dallas,யூ.எஸ்.ஏ
20-மே-201703:15:41 IST Report Abuse
Royapuram Chandru கார்த்தி லண்டனிலிருந்து எப்போ வருவார் எப்படி வருவார் என்று தெரியாது , ஆனால் வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவார். ஆண்டவன் சொல்லுவான் , அப்போ கார்த்தி திரும்பி வருவார்
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
20-மே-201709:23:46 IST Report Abuse
Ramamoorthy Pஆண்டவன் சொல்லமாட்டார். அவர் அப்பா சொல்வார்....
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
19-மே-201722:20:34 IST Report Abuse
Ramamoorthy P இவரது தந்தை ஒரு கிரிமினல் லாயர்.மல்லையாவை போன்றவர்களை எப்படி காங்கிரஸ் தப்பிக்க வைத்தது என்று இவருக்கு தெரியும்.ஒன்று தற்காலிகமாக விசாரணையிலிருந்து தப்பித்து வெளிநாடுகளில் இருந்து தங்களுக்கு பாதகமான சாட்ச்சியங்களை கலைப்பது அல்லது சாதகமான சாட்சியங்களை உருவாக்குவது என்கின்ற திட்டமாக இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201721:09:04 IST Report Abuse
மலரின் மகள் ஓடி போயிருச்சா? உடனே சொத்துக்களையாவது முடக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-மே-201720:13:32 IST Report Abuse
ezhumalaiyaan சில.காலமாகவே.கார்த்தி.மீது.ஒரு.பார்வை.அரசுக்கு.உள்ளபோது.அவருடைய.பாஸ்ப்போர்ட்டை.முடக்கியிருக்கலாமே.இவரும்.மல்லையா.போபட.செய்தால்.அரசு.ஏது.செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
19-மே-201717:42:06 IST Report Abuse
Shanu அளவுக்கு அதிகமாக பணம் சேர்த்து வைத்து என்ன தான் செய்ய போகிறார்களோ??
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-மே-201716:31:42 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கோவிந்தா கோவிந்தா நாமமே போடுவோம் கோவிந்தா பெருமாளுக்கும் நாமம் ஆளுவோருக்கும் நாமம் எங்காப்பிக்கும் நாமம் எல்லோருக்கும் பட்டை நாமம்
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
19-மே-201714:53:37 IST Report Abuse
Sivagiri அங்க ஒரு சோடா கடைக்காரனை தெரியும் . . . அடுத்து யார் யார் லண்டனுக்கு எஸ்கேப் ? ? ? . . .
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
19-மே-201714:49:22 IST Report Abuse
krishna மல்லையாவிற்கு துணையாக சென்று விட்டார்
Rate this:
Share this comment
Cancel
Venkii - Chennai,இந்தியா
19-மே-201714:40:52 IST Report Abuse
Venkii இந்த பய தப்பி சுருவான்னு ரைட் விட்ட அன்னிக்கே தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
19-மே-201714:29:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவன் லண்டனில் தங்கியிருக்க வாய்ப்பில்லை. லண்டன் வழியாக வேறு நாட்டிற்கு சென்றிருக்க கூடும். தனியாக போகாமல் தன் நண்பர்களுடன் அதிகாலையில் ஓடிய உடனேயே தெரிந்துவிட்டது இவன் கைதுக்கு பயந்துதான் ஓடியிருக்கிறான். ஏனென்றால் இவன் போனாலும் இவன் நண்பர்களை விசாரித்து வழக்கு பதிந்திருக்கும். ஆனாலும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, இப்போது இவன் தலைமறைவு குற்றவாளியாவான். மக்களுக்கு தீர்ப்பு வராமலேயே உண்மையும் தெரிந்துவிட்டது.
Rate this:
Share this comment
Rahim - Jubail,சவுதி அரேபியா
19-மே-201717:01:34 IST Report Abuse
Rahimஏண்டா ஏன்டா நீ ஏன் இப்டி புலம்பி சாகுற ? என்னமோ அவர் திரும்பி வரமாட்டார் னு அடிச்சு சொல்ற அப்படினா உங்க ஆளுங்க துட்டு வாங்கிட்டு இவரையும் தப்பிக்க விட்டுட்டாங்களா ? அத நீ ஒத்துக்குறியா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை