ஜெத்மலானிக்கு கோர்ட் கண்டனம் | ஜெத்மலானிக்கு கோர்ட் கண்டனம்| Dinamalar

ஜெத்மலானிக்கு கோர்ட் கண்டனம்

Added : மே 19, 2017 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Court,கோர்ட்,நீதிமன்றம், ஜெத்மலானிக்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி: 'மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்து மோசமான வார்த்தையை பயன்படுத்திய மூத்த வழக்கறிஞர், ராம் ஜெத்மலானியின் செயல் இழிவானது' என, டில்லி ஐகோர்ட், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அவதுாறு வழக்கு : டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், தன் தரப்பு அறிக்கையை பதிவு செய்வதற்கு, டில்லி ஐகோர்ட் இணைப் பதிவாளர்முன், நேற்று முன்தினம் அருண் ஜெட்லி ஆஜரானார்.

அப்போது, கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, அமைச்சர் அருண் ஜெட்லி குறித்து, சில வார்த்தைகளை பயன்படுத்தினார். அதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜெத்மலானியின் செயல் இழிவானது: கோர்ட் கண்டனம்


மோசமான வார்த்தை :இந்நிலையில், நீதிபதி, மன்மோகன் முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம் ஜெத்மலானி கூறிய வார்த்தைகள் குறித்து, ஜெட்லியின் வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.

அதைத் தொடர்ந்து, நீதிபதி மன்மோகன் கூறியதாவது: மூத்த வழக்கறிஞராக உள்ள ராம் ஜெத்மலானி, இவ்வளவு மோசமான வார்த்தையை பயன்படுத்தியது, மிகவும் இழிவான செயல்; இதை அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லி, அவர் பயன்படுத்தி இருந்தால், கெஜ்ரிவால் இந்த கோர்ட்டில் ஆஜராகி, அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201714:36:28 IST Report Abuse
மலரின் மகள் வயதானாலும் புகழ் பதவி வந்தாலும் மனம் பக்குவ படவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-மே-201711:34:39 IST Report Abuse
Pasupathi Subbian அரசியலில் இதெல்லாம் சகஜம். திரு ராம்ஜெத்மலானி அவர்கள் அரசியலிலும் இருந்துள்ளார்.
Rate this:
Share this comment
Natarajan - Hyderabad,இந்தியா
19-மே-201715:32:49 IST Report Abuse
Natarajanபசுபதி சார் பேசியது பாராளுமன்றத்தில் இல்லை . கோர்ட் இல்...
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-மே-201710:47:26 IST Report Abuse
Nalam Virumbi ஜெத்மலானி ஒரு அதிகப் பிரசங்கி . பணம் பணம் பணம் இதுதான் இவருக்கு முக்கியம். கிரிமினல் என்று மனப் பூர்வமாகத் தெரிந்தும் அவர்களை விடுவிக்க வாதாடுபவர்.
Rate this:
Share this comment
Nancy - London,யுனைடெட் கிங்டம்
19-மே-201711:45:30 IST Report Abuse
Nancyஇவனுக்கு சுக்கிரன் தலைல ஏறி தாரு மாற ஆடுறான் , நீ எங்கே அந்த ஹரிஷ் சால்வே எங்கே...
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
19-மே-201710:13:22 IST Report Abuse
spr அப்படி என்னதான் சொன்னார்? இது தெரியாமல் அது மோசமான ஒன்றா இல்லையா என்று எப்படி கருத்து தெரிவிக்கிறது. ஒருத்தருக்கு மோசமாகத் தெரிவது மற்றோருவருக்கு வழக்குச் சொல்லாக இருக்கலாமே அது அவரவர் பண்பாட்டைப் பொறுத்தது அல்லவா
Rate this:
Share this comment
Gopalakrishnan Balasubramanian - Bangalore,இந்தியா
19-மே-201714:06:14 IST Report Abuse
Gopalakrishnan Balasubramanianஎன்ன வேணுமானால் சொல்ல இது உங்கள் சமையலறை பேச்சு அல்ல...
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
19-மே-201715:26:01 IST Report Abuse
தேச நேசன் ஜெத்மலானி வழக்கு தோற்றுவிடுமோ என்ற அச்சத்தில் ஜெட்லீ ஒரு பெரிய திருடன் வஞ்சகன் Crook ஏமாற்றும் 420என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி சொந்த ஆத்திரத்தில் பேசினார் இதை ஆட்சேபித்த ஜெட்லீ நீங்கள் இவ்வார்த்தைகளை கெஜ்ரிவாலின் ஒப்புதலோடுதான் பேசுகிறீர்களா எனக் கேட்டார் ஆமாம் என்றால் ஜெத்மலானி அப்படிஎன்றால் நான் இந்த மான நட்ட வழக்கை இன்னும் தீவீரப்படுத்தப்போகிறேன் அதற்கு உங்கள் வாதமே முக்கிய முகாந்திரம் என்று சொன்னார் பயந்துபோன கெஜ்ரியின் மற்ற வக்கீல் அனுபம் ஸ்ரீவாத்சவ் அரவிந்த் கெஜ்ரிவால் அப்படியெல்லாம் கடுமையாகப் பேச சொல்லவேயில்லை என்கிறார் ஆகமொத்தம் இதனை சீனியரான ஜெத்மலானி சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக நாகரீகமின்றி ஜெட்லீயைத் திட்டிவிட்டு கெஜ்ரியை வம்பில் மாட்டிவிட்டுவிட்டார்...
Rate this:
Share this comment
Cancel
19-மே-201709:51:18 IST Report Abuse
எப்போதும் வென்றான் சிங்கம் என்னிக்கும் சிங்கம் தான்.. இந்த சிங்கம் பிஜேபி யில் இருந்தபோது அவர்களுக்கு இனித்தது
Rate this:
Share this comment
RP Iyer - Bengaluru,இந்தியா
19-மே-201710:15:51 IST Report Abuse
RP Iyerஇது நீதி மன்ற விஷயம். இதில் ஏது அரசியல்....
Rate this:
Share this comment
ganesha - tamilnadu,இந்தியா
19-மே-201712:06:28 IST Report Abuse
ganeshaஅதியமான் அவர்களே, உங்களை தவிர அனைவரும் உங்கள் கருத்துக்கு இதுவரை 16 பேர் மோசம் என்று கூறி இருக்கிறார்கள். இனிமேலாவது எதையும் புரிந்து கொண்டு இங்கு கருத்து தெரிவிக்கவும்....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
19-மே-201715:27:06 IST Report Abuse
தேச நேசன் இந்தமாதிரி நடவடிக்கைகள் மற்றும் பொறுப்பற்ற பேச்சுக்களால்தான் பாஜகவை விட்டு வெளியேற்றினர் என்பதே உண்மை...
Rate this:
Share this comment
Cancel
19-மே-201709:20:33 IST Report Abuse
ரினேக்ஷ் கெஜ்ரிவால் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்பது நடப்பு காலங்களில் நிதர்சனமான உண்மையாகி வருகிறது.
Rate this:
Share this comment
ஹிந்து தேசியவாதி - Bangalore,இந்தியா
19-மே-201713:13:42 IST Report Abuse
ஹிந்து தேசியவாதிநீங்க தான் பாராட்டிக்கணும் அவன் நல்லவன்னு....
Rate this:
Share this comment
19-மே-201713:57:37 IST Report Abuse
JayachandranNarainஇத அந்த கேஜ்ரிவாலே நம்ப மாட்டார்.அதனால அவர மாதிரி ரொம்ப நல்லவங்க நமக்கு தேவை இல்லை....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
19-மே-201715:27:50 IST Report Abuse
தேச நேசன் கெஜ்ரி திருந்திட்டாரு இத அவரே சொன்னாரு...
Rate this:
Share this comment
Cancel
SundaramTl -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-201709:16:53 IST Report Abuse
SundaramTl govt should propose not to practice for the lawyer those who are above 60
Rate this:
Share this comment
19-மே-201709:44:46 IST Report Abuse
VishwanathanSrnGovernment should not allow above 60 in politics.New law should be amend...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மே-201709:01:57 IST Report Abuse
Kasimani Baskaran ஜெத்மலானி காசு கொடுத்தால் யாருக்காக வேண்டுமானாலும் குறைப்பார்...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - ஈரோடு,இந்தியா
19-மே-201708:41:34 IST Report Abuse
தமிழ் என்ன பெரிசா சொல்லிலிட்டாரு, உண்மையத் தானே சொல்லி இருக்கார்.
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
19-மே-201711:28:09 IST Report Abuse
vadiveluஅது என்ன உண்மை, கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்க....
Rate this:
Share this comment
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-மே-201712:31:26 IST Report Abuse
Nalam Virumbiவடிவேலு அவர்களே.. பெரியார் ஊர்காரர்களுக்கும், அமைதி மார்கத்தினர்க்கும் பி ஜெ பி யைப் பிடிக்காது,...
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
19-மே-201708:39:43 IST Report Abuse
வெற்றி வேந்தன் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி தீயாய் இதயத்தில் கொழுந்து விட்டு எரியும்போது அநாகரீக வார்த்தைகள் அனலாக வெளிப்படுவது சகஜம் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை