10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

Updated : மே 20, 2017 | Added : மே 19, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பத்தாம் வகுப்பு, ரிசல்ட், SSLC

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர்.
பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை இன்று (மே 19) காலை 10 மணிக்கு தேர்வுத்துறை வெளியிட்டது. பிளஸ் 2 வை போன்று பத்தாம் வகுப்பு தேர்விலும் மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களுக்கான பட்டியல் வெளியாகவில்லை. கிரேடு முறையில் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.
தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், அவர்கள் குறிப்பிட்டு கொடுத்துள்ள மொபைல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு உடனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-201714:49:35 IST Report Abuse
Senthilnathan congratulate to all students
Rate this:
Share this comment
Cancel
panneerselvam - tamilnadu,இந்தியா
19-மே-201713:56:15 IST Report Abuse
panneerselvam வருங்கால இந்தியாவின் தூண்களுக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Mohanbabu - MARGARITA ,இந்தியா
19-மே-201712:45:45 IST Report Abuse
Mohanbabu Nandri. Ethe pol arasu pallikalin aasiriyarkalin pillaikalum arasu pallikalile serndu padithu nalla mathipen edukka vazthuvom.
Rate this:
Share this comment
Cancel
Sastha Subramanian - Chennai,இந்தியா
19-மே-201711:12:00 IST Report Abuse
Sastha Subramanian நமது அரசு பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர்கள் 91.9 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை, வாழ்த்துகள் ... இன்னும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனம் செலுத்தினால், தனியார் பள்ளிகளின் கொள்ளையை தடுக்க முடியும் ...
Rate this:
Share this comment
Cancel
aravind - chennai,இந்தியா
19-மே-201710:15:04 IST Report Abuse
aravind அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை