ரஜினி அரசியல் குறித்த பேச்சு; தலைவர்களின் நழுவல் விமர்சனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி அரசியல் குறித்த பேச்சு; தலைவர்களின் நழுவல் விமர்சனம்

Updated : மே 20, 2017 | Added : மே 19, 2017 | கருத்துகள் (66)
Advertisement
ரஜினி, அரசியல், பேச்சு, தலைவர்கள், விமர்சனம்,Tamilian, Rajini

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடம் பேசுகையில்; அரசியல் தொடர்பாக வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் போர் வரும் போது பார்த்து கொள்வோம், அது வரை பொறுமை காப்போம். நான் பச்சைத்தமிழன் என்றும் சஸ்பென்ஸ் வைத்து பேச்சை முடித்தார்.
ரஜினியின் இன்றைய பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் ;
ரஜினி என்னை சிறந்த நிர்வாகி என கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி தேர்தலுக்கு வருவதைத்தான் போர் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார். அவரது பாணியில் சொல்வதென்றால் , அவர் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினியின் அரசியல் பேச்சு: தலைவர்கள் கருத்து

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் : முதல் நாள் பேசும் போது வந்து விடுவார் என்ற தோற்றம் இருந்தது. இன்று ஒரு எதிர்பார்ப்புடன் முடிந்துள்ளது. ஆனால் அவர் , சிஸ்டம், அடிப்படை நிர்வாகம் சரி செய்யப்பட வேண்டும் என்கிறார். இதனை சரி செய்யும் மோடியை அவர் எடுத்துரைத்திருக்க வேண்டும். ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ஏன் புகழ்ந்தார் என்பது எனக்கு புரியவில்லை. நேரிடையாக போருக்கு வந்தால் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா;
அவரது போர் என்ற மறைமுக பேச்சு தேர்தலுக்கு தயாராகி விட்டார் என்றே தோன்றுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி துவங்கினாலும், எங்களுடன் இணைந்தாலும் வரவேற்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் ;
அரசியலில் எல்லாம் ஊழல் கலந்து விட்டது. தூய்மைாக இருக்க வேண்டும் என அவர் விரும்புவது வரவேற்கத்தக்கது. அரசியல் வருவது குறித்து அவர் வெளிப்படையாக அறிவிப்பாரானால் அதன் பின் எனது கருத்தை சொல்கிறேன்.

காங்., கட்சி தலைவர் திருநாவுக்கரசர்:
ரஜினி ஏறக்குறைய தான் அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பின் முன்னோட்டமாக எடுத்து கொள்ளலாம். ஜனநாயக நாட்டில் கட்சி துவங்க யாருக்கும் உரிமை உள்ளது. ரஜினி மக்கள் செல்வாக்கு பெற்றவர். அவர் மக்களிடம் நம்பிக்கை பெற்றவர். அனைவராலும் மதிக்ககூடியவர். அவர் அரசியலுக்கு வந்தால் எந்த தேசிய கட்சியிலும் சேர மாட்டார் . அவர் தனியாவே கட்சி ஆரம்பிப்பார் .

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., -
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வந்தாலும் ஏற்று கொள்வதும், தீர்ப்பளிப்பதும் மக்கள் தான். அவரது அரசியல் பிரவேசம் காரணமாக அதிமுக என்னும் ஆலமரத்திற்கு பாதிப்பு வராது.

திருமாவளவன் , விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்:
ரஜினி அரசியலுக்கு வந்தால் திருப்புமுனையாக அமையும். அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முனுசாமி-
ரஜினி அரசியலுக்கு வரட்டும், வந்தால் தான் களத்தில் இருக்கும் பிரச்னைகள் தெரியும்.

ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மா.பாண்டிய ராஜன் -
ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரியவில்லை.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்:
ரஜினி தலைமை ஏற்று சேவை செய்யட்டும். ஆனால் முதல்வராகி, தலைமையேற்று தமிழ்மக்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் விட்டு விடலாம். அரசியலில் அளப்பரிய தியாகம் செய்ய வேண்டும். இந்த ஆட்டம் அவருக்கு சரிப்படாது.

ரசிகர்கள் கருத்து:
ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்கள் நிருபர்களிடம் பேசுகையில்; எங்கள் தலைவர் மக்களுக்கு நல்ல தீர்வு காண்பார். போர் என்று துவக்கியிருக்கிறார். அவர் முதல்வர் ஆகும் வரை போர் நடக்கும் என்றனர்.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: தமிழகத்திற்கு நடிகர் வேண்டாம். டாக்டர் வேண்டும். சினிமா துறையை சார்ந்தவர்கள் 50 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்தை நாசப்படுத்தியது போதும். நடிகர்கள் மாநிலத்தை 50 ஆண்டுகள் வேறெங்கும் ஆண்டதில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharshana - chennai,இந்தியா
20-மே-201704:51:45 IST Report Abuse
sudharshana They wont give a of water . They even ban his films ..Here these ppl construct dam on our part of water source.. looks like Tamils are double destilled stupids for them and we will.welcome them.arms to rule us... what do we leave for our descants? Bitterness. Sorrow for ever.?discriminations and depression for ever? We only invite our own ruins .. pl Tamilians i put my palms to gether and request u to pl pl think think before u take any decision on this issue.. Remember it s nothing against Rajini..but to safeguard our Thamizh Thesam.. Our people become idol like worshippers that s the problem. Any way i have blown my horn that s all.
Rate this:
Share this comment
Cancel
sudharshana - chennai,இந்தியா
20-மே-201704:38:23 IST Report Abuse
sudharshana Rajini is not welcome to b The CM OF T.N He acts. Better stop with his business Ruling is not his cup of tea but his wife and daughters ll rule in his name.. Do we need that?
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
20-மே-201702:36:00 IST Report Abuse
Suman பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் கட்சில இடம் கிடையாது என்று ரஜினி சொல்லிவிட்டார். பெரிய மீசை, கலர் கலர் துண்டு, அண்ணனுக்கு பணம் ரஜினி சொன்ன மாதிரி எல்லாரும் பிள்ளைகளை நல்ல படிக்க வையுங்க இப்போவே மாற்று தொழில் மாற்று வேலைக்கு தயாராயிடுங்க இருக்கற பணத்தை விட்றாதீங்க
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
20-மே-201702:20:14 IST Report Abuse
SaiBaba ரஜினி தமிழனில்லை என்றால் இன்று ஒட்டு மொத்த தமிழகமும் ஏன் அவர் பேசும் ஒவ்வொரு வரியையும் உற்று நோக்குகிறது? ஒவ்வொரு வரியையும் ஏன் விமர்சிக்கிறார்கள்? அவருடைய ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஏன் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் பணம் பண்ணுகின்றன. பத்தோடு பதினொன்று என்று உதறித்தள்ளி விட்டுப்போக வேண்டியது தானே? மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று பொய் சொல்லி 305 சொத்துக்கள் வாங்கிய ஜெயலலிதாவை நம்பிய தமிழக மக்கள், சசிகலாவால் நான், சசிகலாவுக்காகவே நான் என்று அவர் வாழ்ந்ததையும் ஏற்றுக்கொள்ளும் தமிழக மக்கள், ஒருமனிதன் மக்களையே தெய்வங்கள் என்று குறிப்பிடுகிறான் என்றால் அதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் தமிழக மக்கள் இல்லை. ஆனால் இந்த தனுஷ், ஐஸ்வர்யா, லதா, சௌந்தர்யா, ஒய் ஜி போன்ற காசுக்காக மாரடிக்கிற கூட்டம் தொலைக்காட்சியில் தோன்றி போலியாக உதட்டை சுழித்து ரஜினிக்காக பேசுவார்கள் என்றால் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. ரஜினியை மட்டும் தான் தமிழக மக்களுக்கு பிடிக்கும். அதை ரஜினி உணர வேண்டும். திரு. சகாயம் அவர்களை கூட வைத்துக்கொண்டால் தமிழகம் அடுத்த இருபது ஆண்டுகள் நிம்மதியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஷாஜஹான் முஹமது - Jeddah,சவுதி அரேபியா
20-மே-201700:56:31 IST Report Abuse
ஷாஜஹான் முஹமது ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி எச்சரிக்கை 'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீர்க்கிறீங்களே ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்... 1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார் மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார். 2)சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு 3)அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு 4)படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு 5)பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு 6)லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குறீங்க...? தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா? இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா? அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா? போதாது ன்னா சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பைக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிர்றோம் ,அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201723:28:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அது சரி, இந்தாளு அப்படி கட்சி ஆரம்பிச்சா கட்சிக்கு என்ன பெயர் வைப்பாரு? கட்சி சின்னம் "பீடி" அல்லது "சிகரெட்" வைக்கலாம்.. பிஞ்ச டயலாக் பேசியே கட்சியை ஓட்டுறது குஷ்டம் ஆச்சே.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201723:26:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அது சரி கோடீஸ்வர ஆன்மீகவாதிக்கும் கோடீஸ்வர அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம்.. ஒண்ணுமில்லை. ரெண்டு கொள்ளைக்காரங்களுமே மக்களை ஏமாத்தி சம்பாரிச்ச கூட்டம். இப்போ இவரு கோடீஸ்வர ஆன்மீக அரசியல்வாதியாக வாராருன்னா, இந்தாளுக்கு பணத்தாசை இன்னும் போகல்லைன்னு தான் தெரியுது.. போலி ஆன்மீக பணப்பேய்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201723:22:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //ரஜினி அரசியல் குறித்த பேச்சு// ஓட்டு போடும் மக்கள் சொல்றாங்க "பேச்சு படு போர்"..
Rate this:
Share this comment
Cancel
Kongu maakkan - Tuticorin,இந்தியா
19-மே-201722:27:41 IST Report Abuse
Kongu maakkan நானும் பச்சை தமிழன்தான்.. சும்மா மொழி மத இன உணர்வுகளை தாண்டி சிந்திக்க பழகுங்கள்... கருத்து சொல்றவங்கள சொன்னேன்..
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-மே-201721:44:25 IST Report Abuse
Lion Drsekar வயதான காலத்தில் எதற்கு இந்த விபரீத விளையாட்டு ? 1976 களில் நாங்கள் பார்க்காத மனநல விளையாட்டா? இது ஒரு தனி குடும்பம், கோபாலபுரம் போல் இதுவும் ஒரு குடும்பம், கடிக்குதே குடையுதே என்று பின்னால் அழுது ஒரு பயனும் இல்லை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை