தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்

Updated : மே 19, 2017 | Added : மே 19, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வானிலை மையம், தமிழகம், வெப்பம், chennai metrological

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: ஆந்திராவில் தொடர்ந்து இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால், அங்கிருந்து தமிழகத்தை நோக்கி வீசும் வெப்பக் காற்றினால், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 45 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும், பரவலாக இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது. வேலூர், நாமக்கல், சேலம் திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தாளவாடி, தக்கலை பகுதிகளில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுததவரை, கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும். உள்மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் மே 1 முதல் 19 ம் தேதி வரை கோடை மழை பெய்துள்ளது.கடந்த ஆண்டை விட குறைவாக பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
19-மே-201721:11:05 IST Report Abuse
rmr ஏறி குளங்களை தூர் வாராமல் தண்ணீரை சேமிக்காமல் கடலுக்கு திறாந்து விட்ட இரண்டு ஊழல் கழகங்கள் தான் இதெற்கு பொறுப்பு ஒரு தடுப்பணை நீர் மேலாண்மை ஒன்னுமே கிடையாதே, இவங்களுக்கு வாக்களித்ததின் பரிசு தான் இது .
Rate this:
Share this comment
Cancel
19-மே-201716:34:41 IST Report Abuse
MuraliRangachari where is Ramanan Sir, join back job sir
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை