வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டு இந்திய நதிகளை இணைத்து விடலாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டு இந்திய நதிகளை இணைத்து விடலாம்

Added : மே 19, 2017 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கறுப்பு பணம், வெளிநாட்டில் பதுக்கிய பணம், நதிகள் இணைப்பு

புதுடில்லி : 2007 ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் சட்ட விரோதமாக பதுக்கப்பட்ட தொகை ரூ.5.3 லட்சம் கோடி (தோராய மதிப்பு). இவற்றைக் கொண்டு இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்து விடலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கழகம் சமீபத்தில் கறுப்பு பணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1200 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், வறண்ட மற்றும் வெள்ளம் பாயும் நதிகளை இணைப்பதற்காக நீர்வளத்துறை கணக்கிட்டுள்ள தொகை ரூ.5.6 லட்சம் கோடி. 2007 ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.5.3 லட்சம் கோடி. இந்த தொகையை மீட்டாலே இந்திய நதிகளை இணைத்து விடலாம்.
2009-10 ம் ஆண்டுகளில் பதுக்கப்பட்ட ரூ.46,200 கோடியை மீட்டால் மருந்து துறையை முன்னேற்றலாம். 2010 ம் ஆண்டில் பதுக்கப்பட்ட ரூ.2.3 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்டால் சாலை, ரயில்வே, கப்பல் உள்ளிட்ட போக்குவரத்துகளை நவீன மயமாக்குவதற்கான பட்ஜெட் தொகை கிடைத்து விடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓராண்டு கறுப்புப்பணத்தில் நதிகளை இணைக்கலாம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
20-மே-201704:51:25 IST Report Abuse
Amirthalingam Sinniah புண்ணியவாளர்களின் பெயர்பட்டியலை முதலில் அறிவிக்கலாமே. எத்தனை அரசியல்வாதிகள், பணமுதலைகள் யார்யார் என்று அறியலாம்.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
20-மே-201701:26:49 IST Report Abuse
Mohamed Ibrahim Engappa kasimani, desa nesadai kanoom
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-மே-201700:46:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ம்ம்.... "ஒவ்வொருத்தர் பேங்க் அக்கவுண்டில் பத்து லட்சம் போட்டாச்சு", ம்ம்ம் ... "நதி நீரை இணைச்சாச்சு".. ம்ம்ம்.. அப்புறம்.. '"டேய் இன்னுமா தூங்கல்லை "? இன்னும் தூக்கம் வரலை.. இன்னும் கதை சொல்லுங்கஜீ.. கறுப்புப்பணம் ஒழிஞ்சிடும், விவசாயி வருமானம் டபுள் ஆகும்ன்னு காமெடி கதை சொல்லுவாங்களே, அதை சொல்லுங்க.. அப்பியே ம்ம்ம் கொட்டிக்கிட்டே நான் தூங்கிடுறேன்..
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
20-மே-201700:25:30 IST Report Abuse
sankar நதிகளை இணைக்க தேவை இல்லை . நதிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் சேரும் கழிவுகளை தடுத்தாலே போதும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-மே-201700:13:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த ரீல் அந்து போயி, வயர் பிஞ்சு போயி ரொம்ப நாளாகுது..
Rate this:
Share this comment
Cancel
Raju - jersi,யூ.எஸ்.ஏ
20-மே-201700:08:20 IST Report Abuse
Raju ஆக இப்போது சாத்தியம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-மே-201723:07:49 IST Report Abuse
g.s,rajan Whether Black money is with the middle class ??? G.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
19-மே-201723:05:09 IST Report Abuse
adalarasan அப்பொழுது பல ஊழல்கள், ஏர்ஸல் மேக்சிஸ்,2g...COMMONWEALTH, KEICOPTER, போன்ற பல ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடதக்கது? விசாரணையில் உண்மைகள் வெளி வரும் என்று நம்புவோம்? ஆனால் எப்பொழுது முடிவு பெரும் என்பது தான் பெரிய கேவிக்குறி???
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - ஈரோடு,இந்தியா
19-மே-201721:32:51 IST Report Abuse
தமிழ் இப்படிப் பேசிப் பேசியே மூன்று வருடங்களை ஓட்டிட்டீங்க. வீரவசனம் பேசியபடி முடிஞ்சா பதுங்கியுள்ள பணத்தைக் கொண்டு வாங்க. முடியவில்லை எனில் இருக்கிறதை வைத்து நாட்டிற்கு என்ன நல்லது செய்யலாம் என முடிவெடுங்கள். நீங்களாவது இந்த நாட்டிற்கு ஒரு விடிவெள்ளியாக இருப்பீர்கள் என மக்கள் நம்பி தேர்ந்தெடுத்து உள்ளார்கள். உருப்படியாக எதுவும் செய்யாமல், திரும்பத் திரும்ப இதையே பேசிகிட்டு அரசியல் செய்து கொண்டிருந்தால் என்ன பிரயோசனம்?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201721:31:29 IST Report Abuse
மலரின் மகள் அப்படி அந்த பணத்தை மீது கொண்டு வந்தால், அதனுடன் உள்நாட்டு பணத்தையும் சேர்த்து ஒரு இருநூறு லட்சம் கோடிக்கு திட்டத்த்தை ஆரம்பித்து, வெளிநாட்டு பணம் மற்றும் உள்நாட்டு பணம் அனைத்தையும் பாதுகாப்பாக வெளி நாட்டிற்கே கொண்டு சென்று வேறு ஒருவர் பதுக்கிவிடுவார். நமக்கு நதிகள் இணைப்பு பேப்பரில் ஜோராக நடக்கும், இறுதியில் நதிகள் இணைப்பு சாத்திய படவில்லை சில ஒப்பந்தங்களை எதிராக இருக்கிறது, சுற்றுசூழல் பிரச்சினை, கடல் வளம் அழிந்து விடும், பாரம்பரியம் சீர்குலைந்து விடும் என்று மூடி விடுவார்கள். இப்போதெல்லாம் அரசின் கவனம் வேறு வகையில் தான் இருக்கிறியாது. இருக்கும் சொர்ப்ப பணமும் வெளியேறிவிடாமல் தடுப்பதற்கே மூச்சு திணறும் அளவிற்க்கு உழைக்க வேண்டியதிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை