தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? அதிர்ச்சி வைத்தியத்திற்கு ஸ்டாலின் திட்டம்| Dinamalar

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? அதிர்ச்சி வைத்தியத்திற்கு ஸ்டாலின் திட்டம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா, அதிர்ச்சி வைத்தியம், ஸ்டாலின் திட்டம்
Share this video :
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், லஞ்சம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட தி.மு.க., தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Powered by Sathya

சென்னை: தமிழக சட்டசபையைக் கூட கூட்ட மறுக்கும் அ.தி.மு.க., அரசை எதிர்த்து, தி.மு.க.,வின் 89 எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைக்கும் திட்டம் குறித்து, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தீவிரமாக யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், லஞ்சம், ஊழல் பெருத்து விட்டது, விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று, தி.மு.க., தரப்பில் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்த பின், கட்சியின் கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ., தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தமிழக சட்டசபையைக் கூட்ட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
இது தொடர்பாக, சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன முதல்வர் பழனிச்சாமி, அடுத்த சில மணி நேரத்தில், தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின், கட்சி தலைமை அலுவலகத்தில், அமைச்சர்களை கூட்டி, இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, தி.மு.க., வலியுறுத்தியெல்லாம், தமிழக சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இந்த நேரத்தில் தமிழக சட்டசபையைக் கூட்டினால், பன்னீர்செல்வம் அணியினரோடு சேர்ந்து, தி.மு.க.,வினர் அரசுக்கு நெருக்கடி கொடுப்பர் என்று, நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை அடுத்து, சட்டசபையை கூட்டுவதில்லை என்ற முடிவுக்கு பழனிச்சாமி வந்தார். ஆனால், அரசின் முடிவை ஜெயக்குமாரே அறிவிக்கட்டும் என, அவரிடமே பொறுப்பை ஒப்படைத்தார் பழனிச்சாமி.


ஜெயக்குமார் மறுப்பு:

இதையடுத்து, சட்டசபையைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த ஜெயக்குமார், தி.மு.க., ஆட்சி காலத்திலும் இப்படி சட்டசபை கூட்டத் தொடரை கூட்டாமல் இருந்துள்ளனர் எனவும் கூறினார். இதையடுத்து, ஜெயக்குமார் மீது கோபம் அடைந்த ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் டூப்பர் முதல்வராக செயல்படுகிறார் என கோபமாக கூறினார்.இதையடுத்து, தமிழக அரசுக்கு அதிர்ச்சியும்; கடும் நெருக்கடியும் தி.மு.க., தரப்பில் கொடுக்க வேண்டும் என்று, ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் சொல்லப்பட்டு வருகிறது. இதையடுத்து, தி.மு.க.,வின் 89 எம்.எல்.ஏ.,க்களையும், கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு நடக்கவிருக்கும் சட்டசபை செயல்பாடுகள் தொடர்பான வைர விழா நிகழ்ச்சிக்குப் பின், ராஜினாமா செய்ய வைக்கலாமா என்பது குறித்து, ஸ்டாலின் தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:12:24 IST Report Abuse
Srinivasan Kannaiya அய்யா ஒன்று நினைவில் கொள்ளுங்கள்... ... எது செயதாலும் மக்களின் வரிப்பணம் வீணாவது பார்த்து கொள்ளுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
20-மே-201707:56:02 IST Report Abuse
S Rama(samy)murthy ஸ்டாலின் முதலில் ராஜினாமா செய்யவும் . கோடி புண்ணியம் கிடைக்கும் .சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-201707:30:13 IST Report Abuse
மனிதன் சுடாலின் சொல்வது இருக்கட்டும் இந்த கேடுகெட்ட அரசாங்கமும் கொஞ்சமாவது சூடு சொரணை இருந்தால் அவரை பேசவிடாமல் அரசாங்கமே முன்னின்று முக்கிய பிரச்சனைகளை தீர்க்க வேண்டியது தானே அதற்க்கு நாதியற்ற அரசு இருந்தால் இதுபோன்ற நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் கருமம்
Rate this:
Share this comment
Cancel
S.Pandiarajan - tirupur,இந்தியா
20-மே-201707:14:15 IST Report Abuse
S.Pandiarajan வெளி நாட்டில் இருந்து கமெண்ட் பண்ணுபவர்களே இங்கு வந்து பாருங்கடா என்ன நடக்குது என்று சும்மா ac ரூமில் உட்க்கார்ந்து எதையாவது கமெண்ட் பண்ணக்கூடாது
Rate this:
Share this comment
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
20-மே-201712:56:10 IST Report Abuse
Mahendran TCஇங்கிருந்தே பார்த்துக்கிட்டு இருக்கோம்டா தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று....
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
20-மே-201705:44:11 IST Report Abuse
Paranthaman திமுகவில் இருந்து ஒன்றும் சம்பாதிக்க முடியவில்லை. ராஜினாமா செய்வதே மேல். எதிர் கட்சி என்ற விலாசம் அத்துடன் மறைந்து போகும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-மே-201705:37:27 IST Report Abuse
மலரின் மகள் இதனால் கிடைக்கும் பயன்கள் என்ன. இப்படி ஒரு அழுத்தம் தருவதால் எதை சாதிக்க முடியும். சட்ட சிக்கல்கள் அரசிற்கு வருமா? எதிர்க்கட்சி எம் எல் ஏ கள் மொத்தமாக ராஜினாமா செய்வதால், அதற்கு பிறகு சபையை நடத்த அல்லது கூட்டவே முடியும் போய்விட வழி உண்டா? காரணத்தை எழுதி இருக்கலாம். அரசியல் அரசியலமைப்பு பற்றி என் போன்றோருக்கு தெரியாது, தெரிந்து கொள்ள வழி கிடைத்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Anoop - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-மே-201723:46:52 IST Report Abuse
Anoop பாதி பிரச்சனைக்கு இவங்களும்தான் காரணம். எல்லா பிரச்சனையும் 2014ல ஆரம்பிச்சித ?
Rate this:
Share this comment
ravi - ,
20-மே-201706:44:24 IST Report Abuse
raviஎத்தனை தடவை சொல்லிச் சொல்லிப் பார்த்தாலும் Fevicol govt அசைய மாட்டேங்குது. ஸ்டாலின் என்ன தான் செய்ய முடியும். மக்களைக் கவனிக்காத அரசு, இனி 123 பேரும் தேறவே போறதில்லை. உறுதி...
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
19-மே-201722:27:52 IST Report Abuse
Mahendran TC சீக்கிரமா உங்க திமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்லிடுங்க , அதோடு நீ்ங்களும் ராஜினாமா பண்ணிடுங்க, நீங்கள் தினம் தினம் ஆடும் கபட நாடகம் ஒழியட்டும். தமிழ்நாடு தப்பிச்சி போகட்டும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - ஈரோடு,இந்தியா
19-மே-201722:02:52 IST Report Abuse
தமிழ் எப்படியாவது நாற்காலியைப் பிடிக்கலாம்னு பார்க்கிறார், ஒரு பருப்பும் வேகலையே.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-மே-201721:48:49 IST Report Abuse
Lion Drsekar எப்படியாவது முதல்வர் பதவி கிடைக்கவேண்டும், அதற்க்காக எது வேண்டுமானாலும் நடக்கலாம், மாநில பேருந்து மக்கள் கடும் எதிர்ப்பு தோல்வி, தற்போது இந்த வழி, சூப்பர் , வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.