Sweden drops Julian Assange rape probe, UK police says he still faces arrest | ஜூலியன் அசாஞ்சே மீதான பலாத்கார வழக்கு: கைவிட்டது சுவீடன்- தீவிரம் காட்டுது பிரிட்டன்| Dinamalar

ஜூலியன் அசாஞ்சே மீதான பலாத்கார வழக்கு: கைவிட்டது சுவீடன்- தீவிரம் காட்டுது பிரிட்டன்

Updated : மே 19, 2017 | Added : மே 19, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அசேஞ். கைது .பிரிட்டன். தீவிரம்

லண்டன்: பாலியல் பலாத்கார வழக்கில் விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ் மீதான வழக்கை கைவிடுவதாக, சுவீடனம் தெரிவித்துள்ளது. ஆனால் பிரிட்டன் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை,48, அமெரிக்கா, பாக். தென்கொரியா, சவூதி அரேபியா, ஆப்கான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் குறித்த ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தார். 2012-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இந்த வழக்கில் அவர் கைதாகும் சூழ்நிலையில் லண்டன் தப்பியோடினார். அவரை நாடு கடத்தி கொண்டு வர சுவீடன் அரசு முயற்சி எடுத்தது. எனினும் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்ததால், பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தும், அவரை போலீசார் கைது செய்து சுவீடனுக்கு நாடு கடத்த முடியாமல் இன்று வரை திணறி வருகின்றனர்.


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, பலநாடுகள் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பெரும்பாலான நாடுகளின் பகையை தேடி கொண்டார்.

சுவீடன் கை விரிப்பு


இந்த சூழ்நிலையில் சுவீடன் போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் அசாஞ்சே மீதான பலாத்கார வழக்கை கைவிடுவதாக தெரிவித்தனர். இது குறித்து பிரிட்டன் போலீசார் கூறுகையில், அசாஞ்சே, ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறினால் அவரை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளோம் என்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anna - Chennai,இந்தியா
19-மே-201719:37:33 IST Report Abuse
Anna RKC, Chennai. England போலீஸ்காரர்களிலே திண்டாடுங்கள். மல்லையாவை கொடுங்கள் . கார்த்திக்கை கொடுங்க. அவஸ்தைப்படுங்க .
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201719:29:11 IST Report Abuse
K.Sugavanam பிரிட்டன் அமெரிக்காவின் அடிவருடி.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-மே-201704:35:59 IST Report Abuse
Sanny அது ஒண்ணுமில்ல, அங்க அமெரிக்காவில் அடித்தால் இங்க பிரிட்டனில் வந்து அழுவான், இங்க பிரிட்டனில் அடித்தால், அங்க அமெரிக்காவில் போய் அழுவான், இதுதான் அவங்க ஒப்பந்தம், அவங்க Understanding. கடைசியில் இருவருமே சேர்ந்து கழுத்தை அறுத்துடுவான், இதை புரிந்தவன் ஆஸ்திரேலியாவுக்கு வந்துடுறான். ஜூலியன் அசேஞ் இங்க வருமுன் பிடித்துடுவாங்க என்று தெரிந்து ஈகுவாட்டர் இல் தஞ்சம் அடைந்துவிட்டார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை