India-Singapore Naval Drill Shouldn't Hurt Others, Says China | இந்தியா-சிங்கப்பூர் கடற்படை போர் ஒத்திகை: சீனா எரிச்சல்| Dinamalar

இந்தியா-சிங்கப்பூர் கடற்படை போர் ஒத்திகை: சீனா எரிச்சல்

Updated : மே 19, 2017 | Added : மே 19, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்தியா-சிங்கப்பூர் கடற்படை போர் ஒத்திகை: சீனா எரிச்சல்

பீய்ஜிங்: இந்தியா- சிங்கப்பூர் இடையேயான கடற்படை போர் ஒத்திகை மற்ற நாடுகளின் உறவை பாதிக்கும் விதமாக இருக்க கூடாது என சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா- சிங்கப்பூர் நாடுகள் இடையே தென்சீன கடல் பகுதியில் 7 நாள் போர் ஒத்திகை நேற்று (மே 18)துவங்கியது. இது சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யீங்க் கூறியது, தென் சீன கடல் பகுதியில் பெருமளவு இயற்கை வளங்கள் சீனாவுக்கே சொந்தம் .இப்பகுதியில் இந்தியா சிங்கப்பூர் போர் ஒத்திகை நடத்துவது மற்ற நாடுகளின் மனதை புண்படுத்தும் விதமாக இருக்க கூடாது. இதுபோன்ற செயல் நட்பு நாடுகளின் பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்., சீனாவை பொறுத்தவரை எந்த நாடாக இருந்தாலும் நட்புறவு கொள்வதையே விரும்புகிறது. ஆனால் இந்தியா-சிங்கப்பூர் நாடுகளின் இந்த செயல் சரியல்ல என்றார்.

இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகள் ஒத்திகை

இரு நாடுகள் தரப்பில் கூறுகையில், கடந்த 1994-ம் ஆண்டே இந்தியா- சிங்கப்பூர் இடையே ராணுவ ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று 24-வது கடற்படை போர் ஒத்திகை நிகழ்ச்சி துவங்கியது என கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
20-மே-201710:08:22 IST Report Abuse
Ramamoorthy P இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளுக்கு மோடியின் ஆப்பு இது.
Rate this:
Share this comment
Cancel
B.Indira - thane,இந்தியா
20-மே-201709:48:53 IST Report Abuse
B.Indira சீனாவிற்கு இந்தியா எது செய்தாலும் எரியும்.எல்லையில் அத்துமீறும் பழக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்தியா டாங்குகளையும் போர்விமானங்களையும் நிறுத்தி உள்ளது.அவர்கள் எல்லை சுவற்றை தள்ளி விடுவதும் இந்திய வீரர்கள் திருப்பி வைப்பதுமாக தகராறு நடந்து கொண்டே இருக்கும்,தலாய் லாமா அருணாச்சல சென்றால் எரியும் சீனாவிற்கு. அவர்கள் பி ஓ கெயில் ரோட் போடலாமா?காஷ்மீரில் ஒரு பகுதியை கபளீகரம் செய்து விட்டது.ஆக்ரமிப்பு ஆசை விடாது .இதில் கொக்கரிப்பு வேறு.இந்தியா எங்கள் பொருட்களை வாங்காமலிருக்க முடியாது, சமையலறை வரை ஊடுருவி விட்டோம் என்று.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:09:49 IST Report Abuse
Srinivasan Kannaiya அண்டவூட்டுக்காரன் பொண்டாட்டி பூ முடிஞ்சா இவருக்கு என்ன....
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
20-மே-201708:00:37 IST Report Abuse
S Rama(samy)murthy இந்தியா சீனாவுக்கு தொடர்ந்து எரிச்சசலை கொடுக்கவும் , மேலும் சிங்கப்பூரில் கணினி உதிரி .பாகம் உற்பத்தியை பெருக்க சொல்லவும் சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
20-மே-201707:09:19 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அகங்காரம் மிக அதிகம் தென் படுகிறது , உறவாடி கெடுக்க ஒரு நாட்டை அனுப்பி வைத்துள்ளனர், பாப்போம் எப்போது கெடுக்க போகிறார்கள் என்று , ஆனானப்பட்ட ரஷியாவிற்க்கே பாகிஸ்தானை வைத்து ஆப்படித்தனர் (USSR ), இன்று சீனாவை?
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai,இந்தியா
20-மே-201701:20:02 IST Report Abuse
Karthik இவர்கள் தான் அருணாச்சல பிரதேசம்த்தில் மற்றும் காஷ்மீரிலும் எல்லை மீறி தொல்லை தருகிறார்கள். அப்போது எங்களுக்கு மனதை புண்படுத்தும் விதமாக இருந்தது.
Rate this:
Share this comment
Cancel
sasikumar -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-201722:08:21 IST Report Abuse
sasikumar China nammakku onnumma ealla
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201721:04:20 IST Report Abuse
மலரின் மகள் இதே போன்று பிலிப்பைன்ஸ் ஜப்பான் வியட்நாம் பகுதியிலும் அந்த தேசத்தாருடன் இணைந்து ஒத்திகை பார்க்க வேண்டும். அடுத்து அவர்களின் சீனாவை ஒட்டிய துறை முகத்தில் நாம் முதலீடு செய்ய வேண்டும். அவற்றின் நிர்வாகத்தை நாம் பங்கேற்க வேண்டும். நிறைய இளைஞர்களுக்கு நிர்வாகப்பயிற்சி அதன் முக்கியத்துவம், உலகளாவிய வகையில் இந்தியாவை முயற்றும் வகையில் மூவண்ண கோடியை உயர்த்தும் வகையில் முன்னேறுவதற்கு சிறந்த பயிற்சி போதனைகள் அளிக்க படவேண்டும். நம் நாட்டில் திறமையானவர்களை பள்ளியிலேயே இநம் கண்டு கொண்டு அவைகளை ஊக்கு விக்க வேண்டும். தினமலர் பள்ளி படிப்பை முடிக்காமல் பல்கலையில் பி டேக் படிக்கும் ஒரு மாணவியை இனம் கண்டு எழுதி இருந்தது. அது போன்றவர்களை கண்டறிந்து ஊக்கு வைக்கவும் சிறைந்த பயிற்சி தரவும் செய்யவேண்டும். உலகை நாம் ஆழ வேண்டும். அனைத்து துறைகளிலும்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
19-மே-201720:33:59 IST Report Abuse
Kuppuswamykesavan சிங்கப்பூர் அரசு செய்யும் தற்காப்பு போர் பயிற்ச்சியை சீனா ஏன் இப்படி கூப்பாடு போட்டு அங்கலாய்கிறது?. சீனாவை சுற்றி உள்ள நாடுகள் நவீன போர் முறையை தெரிந்து கொள்கிறார்களே என்ற பயம்தான்.
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
19-மே-201720:30:37 IST Report Abuse
வெற்றி வேந்தன் தான் என்கிற மமதை சீனாவை ஒழித்து விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை