நீதிபதி கர்ணன் கோரிக்கை நிராகரிப்பு| Dinamalar

நீதிபதி கர்ணன் கோரிக்கை நிராகரிப்பு

Added : மே 19, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 நீதிபதி, கர்ணன், கோரிக்கை,நிராகரிப்பு

புதுடில்லி: தன் மீதான 6மாத சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி நீதிபதி கர்ணன் அளித்த மனுவை சுப்ரீம் கோர்ட் பதிவாளர் நிராகரித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உடன் மோதல் போக்கை தொடர்ந்து கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

பணியில் இருந்து ஒய்வுபெற சில நாட்களே உள்ளதால் தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். கர்ணனின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது. மேலும் இறுதி உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளதால் வழக்கில் மேல் முறையீட்டுக்கு வாய்ப்பில்லை என கூறிய பதிவாளர் கோரிக்கை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதமின்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனையை தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விதித்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
20-மே-201711:03:33 IST Report Abuse
நெல்லை மணி, சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தான் ஆண்டி கதையாகிவிட்டது. கிடைத்த பதவியை பயன்படுத்தி நீதிக்காக காத்திருக்கும் நிறைய பேர்களுக்கு நன்மை செய்திருக்கலாம். இல்லாவிடில் நீதிபதி குமாரசாமிபோல் ஓய்வு பெறுகிற இந்த நேரத்தில் எதாவது அரசியல்வாதிக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி லம்பா பெரும் கோடி பணத்தை சேர்த்துட்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்று இருக்கலாம். ஒரு பைசாவுக்கு உதவாத காரியம்களில் நேரத்தை செலவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தண்டனை கொடுக்கிறேன் என்று தனக்கு தானே இப்போ தண்டனை கொடுத்துவிட்டு கைதுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டும், தனது வக்கீல் மூலமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டும் அலைகிறார். நீதிபதியே வக்கீலுக்கு பணம் கொடுக்கவேண்டிய சூழல். இது தேவையா ? நல்ல முறையில் ஓய்வு பெற்று ராஜமரியாதையுடன் கொல்கொத்தாவிலிருந்து விடை பெற்று வந்தால் தமிழர்களுக்கே ஒரு மதிப்பு கூடும்.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
20-மே-201710:04:22 IST Report Abuse
Ramamoorthy P சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளுக்கே எதிர் தீர்ப்பு வழங்கிய இந்த கர்ண கடூரனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
20-மே-201710:04:13 IST Report Abuse
Natarajan Ramanathan நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்......
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
20-மே-201710:01:31 IST Report Abuse
Rangarajan Pg சட்டத்தின் பார்வையில் இவர் ஒரு குற்றவாளி. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. என்னத்துக்கு இவர் கோரிக்கை வைக்கிறார். தகுதி இல்லாத மனிதர்களை மாண்புமிக்க பதவிகளில் இட ஒதுக்கீடு மூலம் உட்கார வைத்தால் இப்படி தான் நடக்கும். இவர்களை போன்ற ஆட்கள் தான் அந்த பதவியின் மாண்பை கெடுத்து வருகிறார்கள். பாவம் எந்த ஜாதி காட்சியாவது துணைக்கு வராதா என்று இத்தனை நாள் காத்து கொண்டிருந்தார். எதுவும் வரவில்லை. ஆகவே தான் தற்போது கோரிக்கை வைக்கிறார் போல இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
20-மே-201708:22:35 IST Report Abuse
தேச நேசன் பலர் கருதுவதுபோல ஹைகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை கொலீஜியம் யார் உத்தமர் யார் சத்திய சந்தன் யார் திறமையானவர் என தானே முடிவு செய்து நியமிக்கிறது அவர்களில் யாராவது ஆபத்தானவர் என அரசு நினைத்தால் கொஞ்ச நாள் நிறுத்தலாம் ஆனால் அதற்குஒப்புக்கொல்லாமல் கொலீஜியம் கோபப்படுகிறது அதே நேரம் தவறானவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு தவறு வெளிவந்தாலும் கொலீஜியம் விளக்கமளிப்பதுமில்லை மன்னிப்போ கேட்பதில்லை ஆகமொத்தம் எல்லையில்லா அதிகாரம் வேண்டும் பொறுப்பு மட்டும் வேண்டாம் என்பது எதில் கொண்டு போய்விடும்?
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
20-மே-201708:18:43 IST Report Abuse
வெற்றி வேந்தன் கிடைத்த பதவியை வைத்து தன் இனத்திற்கு பெருமை சேர்க்காமல்,மேலும் மேலும் இழுக்கு சேர்த்த நபர். என்று திருந்தும் இந்த நாடு?
Rate this:
Share this comment
Cancel
20-மே-201708:11:30 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) இதனால் தெரிவிப்பது என்னவென்றால், நீதித்துறையில் ஊழல் செய்யலாம், ஆனால் யாரும் சுட்டிக்காட்ட கூடாது.. கர்ணன் சொன்ன குற்றசாட்டுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஆசை, தினமலர் வெளியிடுமா. நீதித்துறையில் பாதிக்கும் மேல் பெங்களூரு குமாரசாமியை போன்றவர்கள், அதனால்தான் கர்ணன் மீது இத்தனை வேகம் (எங்கே ஊழல் வெளியே வந்துவொடுமோ என்று)..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:02:37 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏற்கனவே தமிழன் என்றாலே இந்தி காரர்களுக்கு பிடிக்காது... இதில் வேற நீங்கள் உளறி கொட்டி உள்ளீர்கள்... என்ன நடக்குதோ... பொறுமையை கடை பிடியுங்கள்... ஆண்டவன் கை கொடுப்பான்...
Rate this:
Share this comment
Bala Subramanian - Bangalore,இந்தியா
20-மே-201709:51:10 IST Report Abuse
Bala Subramanianபிடிக்காதா? எப்படி ஐயா பிடிக்கும் தன்னை மிக புத்திசாலியாக நினைத்து கொண்டு அனைத்து பைத்தியக்காரத்தனமும் செய்கிறார்கள் போராட்டம் என்ற பெயரில் அம்மணமாக ஓடுவது சிறுநீர் குடிப்பது என்று செய்வது இல்லை என்றால் தன்னை தானே சர்வாதிகாரியாக நினைத்து கொண்டு உச்ச நீதி மன்ற நீதி பதிகளுக்கே உத்தர விடுவது செய்யறவங்க பயித்திகாரங்களா இல்லை மத்தவங்க பயித்திய காரங்களா இவர்களை எல்லாம் தண்டிக்காமல் விட்டால் பிறகு இதுவே தவறான முன் உதாரணம் ஆகிவிடும் இதில் தயவு தாட்க்ஷண்யமே பார்க்க கூடாது...
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
20-மே-201703:53:32 IST Report Abuse
Renga Naayagi இன்னமும் சஸ்பெண்ட் பண்ணலியா ...சம்பளம் தராளா ...
Rate this:
Share this comment
Selvam Chennai - Chennai28,இந்தியா
20-மே-201709:10:58 IST Report Abuse
Selvam Chennaiநீங்கள் எப்படி தமிழ்காரனை மேலும் ஆதி திராவிடனை ஆதரிப்பீர்கள்?...
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
20-மே-201701:45:43 IST Report Abuse
Manian கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே -கைமா பிளான் - 3 வது நியூட்டன் பவுதீக விதி- ஒவ்வொரு செயலுக்கும், அதே சக்தி உள்ள எதிர் மறை சக்தி இருக்கும் - இனி கர்ணனே உதாரணமாக சரித்திரத்தில் இருப்பர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை