Tendulkar meets PM to discuss upcoming biopic | எத்தனை சவால்கள் வந்தாலும் அதை வென்று சாதிக்க வேண்டும்: சச்சின்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எத்தனை சவால்கள் வந்தாலும் அதை வென்று சாதிக்க வேண்டும்: சச்சின்

Updated : மே 20, 2017 | Added : மே 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 எத்தனை சவால்கள் வந்தாலும் அதை வென்று சாதிக்க வேண்டும்: சச்சின்

புதுடில்லி: கிரிக்கெட் வீரராக நான் சந்தித்த சவால்களை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே என்னை பற்றிய இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் சச்சின் டெண்டுல்கர்.

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 44, தனது இளமை காலம் துவங்கி கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து சாதித்தது குறித்த சுயசரிதையை ‛‛சச்சின் பில்லியன் டிரீம்ஸ் '' என்ற பெயரில் சினிமா தயாரிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் எர்கின்ஸ் இயக்கியுள்ளார். வரும் 26-ம் தேதி ரிலீசாகிறது.

தனது சுயசரிதை சினிமா குறித்து இன்று தனது மனைவி அஞ்சலியுடன் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், வாழ்க்கை வரலாறு சச்சின்- ஏ பில்லியன் ட்ரீம்ஸ்'' என்ற பெயரில் இந்தி சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. . ஒவ்வொருவருக்கும் சவால்கள் இருக்கும் அதை வென்று சாதிக்க வேண்டும். கிரிக்கெட் வீரராக நான் சந்தித்த சவால்களை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்., என்றார்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Chennai,இந்தியா
20-மே-201700:44:43 IST Report Abuse
Karthik சாதனை மன்னனுக்கு ஒரு மரியாதை. கபில்தேவுக்கு இதே போன்று செய்து இருந்தால் சந்தோசமா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை