அக்கம் பக்கம் | Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Added : மே 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  அக்கம் பக்கம்

சபாஷ் சுஷ்மா!

மூன்று ஆண்டுகளுக்கு முன், மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்த போது, மிக முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவு அமைச்சர் பதவி, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, சுஷ்மா சுவராஜுக்கு கிடைத்தது. இதை பார்த்து, அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பலர், மறைமுகமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 'ஆக்டிவான ஒரு தலைவருக்கு, இந்த பொறுப்பை கொடுத்திருக்க வேண்டும்' என்றனர். தன் வேகமான செயல்பாடுகளால், அந்த அதிருப்தியை முறியடித்தார், சுஷ்மா.
சமீபத்தில், திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'அவர் குணமடையும் வரை, வெளியுறவுத் துறையை, வேறு யாருக்காவது கொடுக்கலாம்' என, சிலர், பிரதமர் மோடிக்கு யோசனை தெரிவித்தனர்.சுஷ்மா மீது இருந்த நம்பிக்கை காரணமாக, மோடி, திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குணமடைந்து வந்ததும், வழக்கம் போல், வேகமாக செயல்பட்டார் சுஷ்மா. பாகிஸ்தானால் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட, நம் நாட்டைச் சேர்ந்த, குல்பூஷண் ஜாதவுக்காக, சர்வதேச கோர்ட்டில் வாதங்களை முன்வைக்க, நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளை நியமித்தார்.
இதற்கு, கைமேல் பலன் கிடைத்தது. ஜாதவுக்கான மரண தண்டனைக்கு தடை விதித்துவிட்டது, சர்வதேச கோர்ட். இதனால், சுஷ்மாவுக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டு குவிகிறது.பிரதமர் மோடியே, சுஷ்மாவை, மனம் திறந்து பாராட்டுகிறார். அவரை விமர்சித்தவர்கள் எல்லாம், இப்போது, வாயடைத்து போயுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை