'டவுட்' தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 19, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  'டவுட்' தனபாலு

காங்., செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை அதிகரித்து வருகிறது. இந்த அச்சத்தின் வெளிப்பாடே, எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில், சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறையினரின் சோதனைகளாகும்.
டவுட் தனபாலு: நீங்க மத்திய பா.ஜ., அரசை விமர்சிக்குறீங்களா... இல்லை, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளின் கைகள் சுத்தமில்லை... அவர்கள், சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை சோதனை என்றால், தங்களது முடிவில் இருந்து பின்வாங்கும் நிலையில் இருக்காங்கன்னு சொல்ல வர்றீங்களா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்க...!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்:
அ.தி.மு.க., அமைச்சர்கள் டில்லிக்கு படையெடுப்பது, மக்கள் நலனுக்காக அல்ல. மக்கள் பிரச்னைகளை அவர்கள், மத்திய அரசிடம் பேசுவதில்லை.
டவுட் தனபாலு: 'அவங்க தான், சொந்த விஷயத்துக்காக டில்லிக்குப் படையெடுக்குறாங்க... கடந்த காலங்களில், முதல்வரா இருந்த கருணாநிதி, எத்தனை முறை டில்லி போனாரு... அது எதற்காக என்ற விஷயங்களை நீங்க பட்டியலிடுங்களேன், கேட்போம்'னு, மக்கள் எழுப்புற, 'டவுட்' எதுவும் உங்க காதுல விழலையோ...!பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி:
ரஜினி அரசியலுக்கு வருவதாக, 20 ஆண்டுகளாக பேசி வருகிறார். இனிமேல் திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்களே அரசியலுக்கு வர வேண்டும்.

டவுட் தனபாலு: இவ்வளவு சொல்ற நீங்க, வாரிசு அரசியல் குறித்த மக்களின் மனநிலையைப் பத்தி மூச்சே விடுறது இல்லையே ஏன்... ஆமா, நீங்க சொல்ற கல்வித் தகுதி, கவுன்சிலர் துவங்கி, முதல்வர் வேட்பாளர் வரை அனைவருக்கும் பொருந்தும் தானே... இனி, பா.ம.க., சார்பில், பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மட்டுமே தேர்தலில் நிறுத்தப்படுவர்னு, உங்களால அறிவிக்க முடியுமா என்பது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - chennai  ( Posted via: Dinamalar BlackBerry OS 10 App )
20-மே-201710:02:51 IST Report Abuse
Balaji தி்முகவில் ஏகப்பட்ட அதி்ருப்தி்கள் இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளது, நிறையபேர் வெளியேற தயாராகிவிட்டனர், பாமகவில் பனிப்போர் அதி்கரித்து முக்கிய மூத்தவர்கள் அன்புமணிக்கு எதி்ராக கொடிதூக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரு தொலைக்காட்சி செய்தி் ஒளிபரப்பியதை, ஆகா தமிழகத்தி்ல் கட்டுக்கோப்புடன் இருப்பது தேமுதி்க மட்டுமே.
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
20-மே-201719:29:18 IST Report Abuse
தலைவா அப்படி ஒரு கட்சி கேள்வி பட்டதா நியாபகம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை