இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 19, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  இதே நாளில் அன்று

1894 மே 20

காஞ்சி காமகோடி பீடத்தின், 68வது பீடாதிபதியாக இருந்த, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், விழுப்புரத்தில், 1894, மே 20 ல், சுப்ரமணிய சாஸ்திரிகள் - மகாலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். தன், 13வது வயதில், காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.பின், 1919 முதல், 1940 வரை, 21 ஆண்டுகள், நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு புனிதத் தலங்களை தரிசித்து, பக்தர்களுக்கும் அருளாசி வழங்கினார்.பழமையான கோவில்களை புனரமைக்கவும், வேதக் கல்வியை ஊக்குவிக்கவும், சுவாமிகள் செய்த தொண்டு அளப்பரியது. தமிழ் மட்டுமின்றி, சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரான்ஸ் உள்ளிட்ட பல மொழிகளில், வல்லமை பெற்றிருந்தார்.
சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் உள்ள பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த சுவாமிகள், அதில் சொல்லப்பட்ட வாழ்க்கை தத்துவத்தை, பக்தர்களுக்கு போதித்து, அவர்களை நல்வழிப்படுத்தினார். மக்கள் மத்தியில், அவதார புருஷராக வாழ்ந்த, ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1994, ஜனவரி 8ல், சித்தியடைந்தார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
20-மே-201711:47:58 IST Report Abuse
CHANDRA GUPTHAN ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர . ஸ்ரீ குருதேவ பாதாரவிந்தங்களுக்கு சஹஸ்ர கோடி அனந்த கோடி நமஸ்காரங்கள் .
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
20-மே-201710:54:25 IST Report Abuse
A shanmugam உங்களை "பெரியவர்" என்று சொல்லி காலில் விழுந்து கும்பிட்டாலும் புண்ணியம் கிடைக்கும். ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களை "ஆன்மீக மஹான்" என்று சொன்னால் மிகையாகாது.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
20-மே-201709:20:22 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஜெயா ஜெயா சங்கரா ஹரஹர சங்கரா என்று ஜபித்து பெரியவாளுக்கு மரியாதை செய்வோம் இன்று நாம் எல்லோருமே ஓரளவாவது கடவுளை நம்பியே இருக்கோம்னா அதுக்கு முக்கிய காரணமே பெரியவாளின் அருள்தான் அவா அருள் உரைகளை என்றும் நம்பினால் நரகதியே தான் கிட்டும் என்னும் நம்பிக்கையேதான்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-மே-201706:24:34 IST Report Abuse
மலரின் மகள் சித்தி அடைந்தார் என்பதை மனம் ஏற்கவில்லை. முக்தி அடைந்தார் என்றுதான் காஞ்சியில் வாழும் பெரும்பாலானோர் அனைவரும் என்று கூட சொல்லலாம். கூறுவோம். அவர் அடைந்தது முக்திதான். அமைதி தழுவும் முகம். யாத்திரை முடிந்து காஞ்சியில் இருக்கும் பொது மங்கரே சந்தோசம் கொள்வதை காஞ்சியில் பார்க்கலாம். நிறய செய்திருக்கிறார். காஞ்சியை அரசாளும் காமாட்சியை காலியாக கொடூரமானவளாகத்தான் அறிந்திருந்தார். அவளை சாந்த ஸ்வரூபியாகவே அனந்த ளகரியில் சொல்லப்பட்டவளாகவே திருவிழாக்களில் கோவில் அம்மன் திரு அலங்காரத்தில் மாற்றி பசுவை கர்ப்பக்கிருகத்தில் கொண்டு வைத்து தாயாக பூஜை செய்ய வைத்தவர். காஞ்சி ஏகாம்பரேச்வரர் திருமண சடங்குகளின் பொது காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் உற்சவ காமாட்சி அம்மனை ஏகாம்பரநாதர் கோவிலுக்கு கொண்டு சென்று திருமணம் சடங்குகள் செய்த வழக்கம் இருந்ததாகவும், பெரியவர் தான் அதை நெறிப்படுத்தி, காஞ்சி காமாட்சி அம்மன் வேறு, அவளின் அவதார நோக்கம் வேறு என்றும், ஆகையால் அங்கிருந்து உற்சவ அம்மனை கொண்டுசெல்வதை நிறுத்தி, ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக உற்சவ காமாட்சி பிரதிஷ்டை செய்யப் பட்டாள் என்றும் காஞ்சியில் கேள்வி பட்டிருக்கிறேன். காஞ்சி கோவில் கோபுரத்தை அம்மாள் சன்னதி தங்கமாக தகடு வேய்ந்தார். கோவிலுக்கு மிக அருகில் எங்கள் வீடு. குழந்தை பருவத்திலும், சிறிய வயதிலும் என்னை காஞ்சி மஹா பெரியவர் ஆசிர்வதித்திருக்கிறார். இன்னமும் எங்கள் வீட்டில் சொல்வார்கள் நீ இறைவனின் அனுகிரஹணம் பெற்றவள் ஆகையால் தான் பெரியவரின் ஆசிர்வாதம் உனக்கு பல முறை கிட்டி இருக்கிறது. காஞ்சி கோவிலை பெரியவர் சுற்றி வரும்போதும், காம கோடி பீடத்திலும் நீ பலமுறை அவரால் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறாய் என்று. எனக்கும் பெரியவர் கற்கண்டு கொடுத்தது நினைவில் இருக்கிறது. கல்கி பத்திரிகையில் மஹா பெரியவாளின் அருள்வாக்கு வரும். சில முறை படித்திருக்கிறேன். மனம் அமைதியுறும். தெளிவாக விளக்கம் இருக்கும். யாருக்கும் எதிர்ப்போ உயர்ச்சி தாழ்ச்சி சொல்வதொ இருக்காது. மஹான்கள் உண்மையிலேயே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு காஞ்சி மகா பெரியவாள் வாழ்ந்த சாட்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை