பாட வாரியாகவும் பள்ளிகளிலும் 'சென்டம்' அதிகரிப்பு 'ஷொட்டும் குட்டும்':10ம் வகுப்பு தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி சரிவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை மாநகராட்சி பள்ளிகள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 93.1 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. இது கடந் தாண்டை விட, 1.8 சதவீதம் குறைவாகும். மாணவர்கள் சொதப்பலால் தேர்ச்சி விகிதம் குறைந்தாலும், கடந்தாண்டை காட்டிலும் பாட வாரியாக மற்றும் பள்ளிகளின், 'சென்டம்' அதிகரித்து உள்ளது.

சென்னை மாநகராட்சி, 70 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை நடத்துகிறது. இதில், 3,028 மாணவர்கள், 3,274 மாணவியர் உட்பட, 6,302 பேர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். அதில், 2,697 மாணவர்கள், 3,168 மாணவியர் உட்பட, 5,865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம், 93.1 ஆகும்.


20 பள்ளிகள்


கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளிகள், 94.9 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. கடந்த ஆண்டை விட தற்போது, 1.8 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. கடந்தாண்டு மாணவர்கள், 92.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு, 88.97 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதுவே ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு காரணம்.
இந்தாண்டு மொத்தம், 20 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. கடந்தாண்டு, 19 பள்ளிகள் மட்டுமே இந்த சாதனையை செய்தன.


மாணவி சாதனை


இந்தாண்டு, 189 மாணவ, மாணவியர் பாட வாரியாக முழு மதிப்பெண் பெற்றனர். இதில், கணிதத்தில் எட்டு பேர்; அறிவியலில், 29; சமூக அறிவியலில், 152 பேர் அடக்கம். கடந்தாண்டு, 73 பேர் மட்டுமே பாட வாரியாக முழு மதிப்பெண் பெற்றிருந்தனர்.மொத்தம், 312 பேர், 450 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர். கடந்தாண்டு, 249 பேர் மட்டுமே, 450 மதிப்பெண்ணுக்கு மேல்
பெற்றிருந்தனர். மாநகராட்சி அளவில் கடந்தாண்டு, 492 மதிப்பெண் முதல் மதிப்பெண்ணாக பதிவானது. இந்தாண்டு, 494 மதிப்பெண் பெற்று மாணவி சாதனை படைத்தார்.


ரூ. 1 லட்சம் பரிசு


சிறப்பான தேர்ச்சியை பதிவு செய்த மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாநகராட்சி கல்வித்துறை துணை கமிஷனர் கோவிந்தராவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வழக்கமாக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, மாநகராட்சி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

பிளஸ் 2 தேர்வில் இந்த சாதனையை எட்டிய பள்ளிகளுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, தலைமை செயலகத்தில், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி, பாராட்டினார்.
நேற்று அமைச்சரும், மாநகராட்சி கமிஷனரும் சென்னையில் இல்லாததால், பள்ளிகளுக்கு
பரிசு வழங்கப்படவில்லை.

-நமது நிருபர்-

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்