சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., கோர்ட் அதிரடி: நிலக்கரி துறை 'மாஜி' செயலர் குற்றவாளி என அறிவிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
அதிரடி!
சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில்
சி.பி.ஐ., கோர்ட்... நிலக்கரி துறை
'மாஜி' செயலர் குற்றவாளி என அறிவிப்பு

புதுடில்லி:மத்திய பிரதேசத்தில், தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிலக்கரி துறை முன்னாள் செயலர், எச்.சி.குப்தா உள்ளிட்டோர் குற்றவாளி என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

 சுரங்க, ஒதுக்கீடு, முறைகேடு, வழக்கில், சி.பி.ஐ., கோர்ட்... அதிரடி!

மத்தியில், 2004 -- 2009ல், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது, சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்த தில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது, நிலக்கரி துறை செயலராக பதவி வகித்தவர், எச்.சி.குப்தா. சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பான குழுவின் தலைவராக இருந்த அவர், 40 சுரங்கங்கள் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கினார்.

இதில், மத்திய பிரதேச மாநிலம், ருத்ரபுரி பகுதி யில் உள்ள சுரங்கத்தை, கே.எஸ்.எஸ். பி.எல்., நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில், முறை கேடு நடந்ததாகவும், அதில், குப்தா உள்ளிட் டோருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.

குற்றச்சாட்டு

: இதையடுத்து, குப்தா உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு

செய்தது; ஏல நடை முறையில் வெளிப்படை தன்மையை கடை பிடிக்கவில்லை என அவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது.இந்த வழக்கு, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய, சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி பாரத் பராசர் தன் உத்தரவில் கூறியதாவது:

விடுவிப்பு


நிலக்கரி துறை முன்னாள் செயலர், எச்.சி.குப்தா, முன்னாள் இணை செயலர் குரோபா, சுரங்க ஒதுக் கீடு இயக்குனராக இருந்த சமரியா, கே.எஸ்.எஸ். பி.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் குமார் அலுவாலியா ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தண்டனை விபரம், நாளை மறு தினம் அறிவிக்கப் படும். இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட ஆடிட்டர் அமித் கோயல் மீதான புகார்கள் நிரூபிக்கப்படாத தால், அவர், வழக்கில் இருந்து விடுவிக்கப்படு கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

நிலக்கரி ஊழல் வழக்கில், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை,சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் நிராகரித்தது.

விசாரணையில் பகீர்!


இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, கோர்ட் டில், சி.பி.ஐ., தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப் பட்டன. அதன் விபரம்:நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு கோரி, கே.எஸ்.எஸ்.பி.எல்.,நிறுவனம் பூர்த்தி

Advertisement

செய்து அனுப்பியவிண்ணப்பத்தில், முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

வழிகாட்டும் நெறிமுறைகளை, அந்நிறுவனம் பின்பற்றவில்லை. அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பும் ஏற்புடையதாக இல்லை; அந்நிறு வனத்திற்கு ஒதுக்கீடு செய்யக்கோரி, மத்திய பிரதேச மாநில அரசும் பரிந்துரைக்க வில்லை. அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்பட்டி ருக்க வேண்டும். ஆனால், அதை ஏற்றுக் கொண்டு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டது.

எட்டு வழக்குகள்


நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு புகாருக்கு ஆளான நிலக்கரி துறை முன்னாள் செயலர், எச்.சி.குப்தா மீது, முறைகேடு செய் தது, ஏல நடைமுறையில் வெளிப்படை தன் மையை கடைபிடிக்காதது, மக்கள் வரிப் பணத்தை வீணடித்தது உட்பட, எட்டு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
20-மே-201722:49:09 IST Report Abuse

s t rajanஅது என்னய்யா எந்த அரசியல் வாதியும் சிக்க மாட்டேங்குறான்.

Rate this:
20-மே-201718:06:34 IST Report Abuse

ரங்கன்அரசியல்வாதிகளுடன் கூட்டுசேர்ந்து கும்மாளம் போட்டால் அதிகாரிகளுக்குத்தான் ஆப்பு. உணர்ந்து திருந்தினால் தேவலை...நாடும் உருப்படும்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-மே-201711:57:16 IST Report Abuse

Balajiஅதிகாரிகளின் துணையின்றி அரசியல்வாதிகள் ஊழல் செய்யமுடியாது என்பது அனைவரும் அறிந்தது தான்........ அதற்காக அதிகாரிகளை மட்டும் தண்டிப்பதும் யாரையோ தப்பிக்க வைப்பதற்காக அதிகாரிகளை மாற்றிவிடுவது போலத்தான் அமைகிறது....... முறைகேடு நடைபெற ஏதாவது துறை ரீதியில் அழுத்தம் இருந்ததா என்பதையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.........

Rate this:
JeevaKiran - COONOOR,இந்தியா
20-மே-201711:46:55 IST Report Abuse

JeevaKiranநாம் என்னதான் இந்தியாவின் முன்னேற்றத்தைப்பற்றி பேசினாலும், அரசியல்வியாதிகளை தண்டிக்காதவரை இந்தியா முன்னேறப்போவதில்லை. இது சத்தியம்.

Rate this:
JeevaKiran - COONOOR,இந்தியா
20-மே-201711:44:42 IST Report Abuse

JeevaKiranஅதானே, எப்படி இந்த அரசியல்வியாதிகளெல்லாம் தப்பித்துவிடுகிறார்கள். இவ்வளவு பெரிய (கேடி) கோடிகளில் நிகழ்ந்துள்ள ஊழலில் கேவலம் ஒரு அரசியல்வியாதிகூடவா சம்பந்தப்படவில்லை?

Rate this:
A shanmugam - VELLORE,இந்தியா
20-மே-201710:57:46 IST Report Abuse

A shanmugamநிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டவரை நிலக்கரிசுரங்க பாதையிலே ....விடவேண்டும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:29:31 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅடிமை ஒருத்தன் சிக்கிட்டான்...சாப்பிட்டவன் யார்யாரோ... ஏப்பம் விடறவன் யாரோ....

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
20-மே-201708:12:10 IST Report Abuse

தங்கை ராஜாஅதிகாரிகளின் துணையில்லாமல் தவறு நடக்க வாய்ப்பேயில்லை. இதுவொரு நல்ல சமிஞை.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
20-மே-201708:00:19 IST Report Abuse

தேச நேசன் இதே குற்றவாளி குப்தா மன்மோகன் சிங் சொன்னதைத்தான் நான் செய்தேன் அவரை விட்டு விட்டு என்னை மட்டும் தண்டிப்பதேன் எனக் கேட்ட்டார் இன்று வரை பதிலில்லை ஊழலில் பலன் பெற்ற சோனியா மீது வழக்குப்போட கோர்ட் கூட கேட்கவில்லை

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-மே-201707:52:48 IST Report Abuse

Kasimani Baskaranமன்மோகன் சிங்தான் அந்தத்துறையை கவனித்துக்கொண்டார்... அவர் தண்டனை பெற்று இருக்கவேண்டும்...

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement