கல்வி, மருத்துவ துறைக்கு சேவை வரியில் விலக்கு Dinamalar
பதிவு செய்த நாள் :
கல்வி, மருத்துவ துறைக்கு
சேவை வரியில் விலக்கு

ஸ்ரீநகர்:''ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், சேவை வரியின் கீழ் இருந்தவற்றுக்கு, வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கல்வி மற்றும் மருத்துவச் சேவைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையால், பொருட்கள் மற்றும் சேவையின் விலை உயராது,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

 கல்வி, மருத்துவ, துறைக்கு ,சேவை, வரியில் ,விலக்கு

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை, வரும், ஜூலை, 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான சட்டங்கள் மற்றும் வரி விகிதங்களை இறுதி செய்வதற் காக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான, மாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கவுன்சிலின் கூட்டம், ஜம்மு - காஷ்மீர்

மாநிலத்தில், கடந்த இரண்டு நாட்களாக நடந் தது. முதல் நாளில், எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பது முடிவு செய்யப்பட்டது.

பொருட்களுக்காக ஏற்கனவே, 5, 12, 18, 28 சதவீத வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், எந்தெந்த பொருட்கள் எந்தெந்த வரி விகிதத் தின் கீழ் வரும் என, விவாதிக்கப்பட்டது; 1,211 பொருட்களுக்கான வரி விகிதங்கள் நிர்ணயிக்கப் பட்டன.

அதன்படி, தானியங்கள், பருப்பு வகைகள், பால் ஆகியவற்றின் விலை குறையும்.இந்த நிலை யில், இரண்டாவது நாளாக, நேற்றும் கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

கவுன்சிலின் இரண்டாவது நாள் கூட்டத்தில், இது வரை சேவை வரியின் கீழிருந்தவற்றுக்கு எவ்வ ளவு வரி விதிப்பது என்பது குறித்து விவா தித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, பொருட் களுக் கான வரி விகிதத்தைப் போலவே, சேவை களுக் கும், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு வகை யான வரி விகிதம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு, வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே சேவை வரியில் இருந்து விலக்கு பெற்றுள்ள பெரும்பாலான சேவைகளுக்கு, வரி விலக்கு தொடர்கிறது. லாட்டரிக்கு எந்த வரியும்

Advertisement

கிடையாது.தங்கம் உட்பட சில குறிப்பிட்ட பொருட் களுக்கான வரி விகிதம் மட்டும் இறுதி செய்ய வேண்டும். வரும், ஜூன், 3ம் தேதி நடைபெறும் கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும்.

ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையால், எந்தப் பொருளின் விலையும் உயராது என்று உறுதி யளிக்கிறோம். ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை அமல்படுத்த, அனைத்து மாநி லங் களும் தயாராக உள்ளன. அதற்கான பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த சேவைக்கு எவ்வளவு வரி?


* கல்வி, மருத்துவத்துக்கு வரி விலக்கு
* தொலைதொடர்பு, நிதி சேவைகளுக்கு, 18 சத வீதம் எகானமி வகுப்பு விமானம், 'ஏசி' வசதி யில்லாத ரயில் மற்றும் பஸ் சேவை உள் ளிட்ட போக்குவரத்துக்கு, 5 சதவீதம்
* ஓலா, உபேர் போன்ற, 'கால் டாக்சி' நிறுவன சேவைகளுக்கான வரி, 6ல் இருந்து, 5 சதவீத மாக குறைகிறது
* மெட்ரோ ரயில், மின்சார ரயில், ஹஜ் போன்ற மத ரீதியிலான பயணத்துக்கு வரி விலக்கு
* விமானத்தில் பிசினஸ் வகுப்பு பயணத்துக்கு, 12 சதவீதம் 'ஏசி' வசதியில்லாத உணவகங்கள், 12 சதவீதம்
* 'ஏசி' வசதியுள்ள மற்றும் மதுபானம் பரிமாற லைசென்ஸ் பெற்ற ரெஸ்டாரென்ட்களுக்கு, 18 சதவீதம்
* ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு, 28 சதவீதம்
* ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக வியாபாரம் செய்யும் ரெஸ்டா ரென்ட்களுக்கு, 5 சதவீதம் வரி
* வீடுகளுக்கு வெள்ளையடிப்பது உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கு, 12 சதவீதம்
* பொழுதுபோக்கு வரி, சேவை வரியுடன் சேர்க் கப்பட்டுள்ளது. சினிமா, சூதாட்டம் உள்ளிட்ட பொழுதுபோக்கு சேவைகளுக்கு, 28 சதவீதம் வரி விதிக்கப்படும். சினிமா தியேட்டர்களுக்கு, தற்போது, 40 முதல், 55 சதவீதம் வரை வரி விதிக்கப்படு கிறது. அது, 28 சதவீதமாக குறைக் கப்பட்டா லும், தியேட்டர்கள் மீது உள்ளூர் வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள் ளதால், டிக்கெட் விலை குறையாது.
* ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ் களுக்கு, வரி விலக்கு; 1,000 - 2,000 ரூபாய்க்கு, 12 சதவீதம்; 2,500 - 5,000 ரூபாய்க்கு, 18 சத வீதம். அதற்கு மேற்பட்டவைக்கு, 28 சதவீதம்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murali - DOHA ,கத்தார்
20-மே-201716:07:55 IST Report Abuse

MuraliGST நடை முறைக்கு வந்த பிறகுதான் சரியான நிலைப்பாடு பற்றி தெரிய வரும்.

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-மே-201711:25:48 IST Report Abuse

Lion Drsekarஇந்த இரண்டு துறைகளும் அரசியல் கட்சியினர்களது சொத்து எனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, வந்தே மாதரம்

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
20-மே-201711:01:59 IST Report Abuse

Needhiyin Pakkam Nil கல்வி மருத்துவத்திற்கு ஏன் வரி விலக்கு கொடுத்தீர்கள் அப்போ இனிமேல் கல்வி கட்டணமும் மருத்துவ கட்டணமும் குறைய போகுதா இல்லவே இல்லை, இதெல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் பணமுதலைகள் நடத்தும் கல்விநிறுவனங்களுக்கு சலுகை வழங்கி இருக்கிறது மத்திய அரசு, எனவே இது மக்களுக்காக அல்ல இது வன்மையாக கண்டிக்கதக்கது...............

Rate this:
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
20-மே-201710:40:43 IST Report Abuse

T.S.SUDARSANGST for gold and gold ornaments should be 28+10% and Diamond and Diamond ornaments is to be 28+15% to save the sole earning member( Head of the family) and to curb the Black money as well as block marketing.

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
20-மே-201710:15:28 IST Report Abuse

P. SIV GOWRIGST நடை முறைக்கு வந்த பிறகு தான் சரியான நிலவரம் தெரியும்.

Rate this:
Kailash - Chennai,இந்தியா
20-மே-201710:03:43 IST Report Abuse

Kailashவங்கி கட்டணங்களுக்கு தற்சமயம் 15 % செலுத்துகிறோம் இனி 18 % . டெபிட் கார்டு ஆண்டு கட்டணம், cheque புக், மினிமம் பாலன்ஸ், டெபாசிட் செய்ய, எடுக்க என்று அனைத்து கட்டணங்களும் 3 % அதிகரிக்கும். SBI வங்கியில் டெபிட் கார்டு ஆண்டு கட்டணம் மட்டும் 175 .00 இனி 206.50 வரியோடு கட்ட வேண்டும். 1000 ரூபாய் டெலிபோன் பில்லுக்கு 180 ரூபாய் வரி. இதனால் விலை வாசி குறையும் என்பது ஏமாற்றுத்தனம். சில நாட்கள் கழித்தால் மக்களுக்கு பழகி விடும். தனியார் வசம் இருக்கும் கல்வி, சுகாதார துறைக்கு வரி விலக்கு. இதுதான் highlight. மேற்கண்ட துறையினர் ஏற்கனவே கொள்ளையடிக்கின்றனர் பிறகு ஏன் நாம் வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க வேண்டுமா? என்ற நல்லெண்ணத்தோடு இருக்கிறது.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:33:24 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎவ்வளவு அடித்தாலும் மக்கள் தங்குவார்கள்... இதில் குறைப்பது போல் பாவலா காட்டி..வேறு ஏதாவது ஒன்றில் ஏத்திவிடலாம்...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-மே-201708:01:36 IST Report Abuse

Kasimani Baskaranஅடிப்படையில் பார்த்தல் பொருள்களின் விலை குறைய வேண்டும்... குறைகிறதா என்று பார்க்கலாம்...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
20-மே-201719:43:28 IST Report Abuse

K.Sugavanamஒருநாளைக்கு 1000 ரூ வரை அறைகளுக்கு வாடகை வசூலிக்கும் தாங்கும் விடுதிகளுக்கு வரி இல்லை.இப்போது 750 வசூலிப்பவர்கள் அதிகரித்து விடுவார்கள் வாடகையை .....

Rate this:
20-மே-201707:38:03 IST Report Abuse

ரினேக்ஷ்GST நடை முறைக்கு வந்த பிறகுதான் சரியான நிலைப்பாடு பற்றி தெரிய வரும்.

Rate this:
Karthik - Chennai,இந்தியா
20-மே-201702:17:56 IST Report Abuse

Karthikகல்வி, மருத்துவத்துக்கு, ரயில் மற்றும் பஸ் சேவை, மெட்ரோ ரயில், மின்சார ரயில், ஹஜ் போன்ற மத ரீதியிலான பயணத்துக்கு போன்றவை நடத்தற வர்த்தகத்துக்கு பயன்பட்டிருக்கு சேவை வரி இல்லை. பாராட்ட வேண்டிய தருணம். லாட்டரிக்கு எந்த வரியும் கிடையாது. அதனை ஊக்கப்படுத்தம் விதமாக ஆகிவிடும். அதனை கட்டுபடியிருக்கலாம். மொத்தத்தில் பாராட்டுக்குரியது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement