வெளிநாட்டுக்கு தப்பியோடும் குற்றவாளி சொத்துக்களை பறிமுதல் செய்ய மசோதா Dinamalar
பதிவு செய்த நாள் :
வெளிநாட்டுக்கு தப்பியோடும் குற்றவாளி
சொத்துக்களை பறிமுதல் செய்ய மசோதா

புதுடில்லி:பொருளாதார குற்றங்களில் ஈடு பட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிநாடு,தப்பியோடும்,குற்றவாளி,சொத்து,பறிமுதல்,மசோதா

சமீப காலமாக, பொருளா தார குற்றங்களில் ஈடுபடுவோர், வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது அதிகரித்து வருகிறது. ஐ.பி.எல்., எனப்படும் இந்திய பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் முறை கேடுகள் செய்ததாக, தொடரப்பட்ட வழக்கில், அதன் தலைவராக இருந்த லலித் மோடி, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

அதேபோல், வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் நிலுவை வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா,

லண்டனுக்கு தப்பிச் சென்றார்.மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவதற் கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வரு கிறது. இது போன்ற பொருளாதார குற்றவாளிகள், சட்டத்தில் இருந்து தப்பிக்க, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதுதடுக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, 'இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். அதன்படி, பொருளாதார குற்றங் களில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யும் வகையில், சட்டத் திருத்தம் செய்யும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட் டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்த வரைவு மசோதா, அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதன் மீது, ஜூன், 3ம் தேதி வரை கருத்துக் களை தெரிவிக்கலாம்.பொருளாதார குற்றங் களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி செல் வதன் மூலம், நம் சட்டங்களை மதிக்காதவர் கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய, புதிய மசோதா வழிவகுக்கிறது. இந்த மசோதாவின்படி,

Advertisement

ஒருவர் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றால், அவரை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக, சிறப்பு கோர்ட் அறிவிக்கும். அதைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முடியும். மேலும், இது போன்ற குற்றவாளிகள், இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.

அதிக அளவில் வழக்குகள் சேருவதை தடுக் கும் வகையில், 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மோசடிகளில் இந்த நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
20-மே-201720:46:24 IST Report Abuse

Sivagiriப.சி அன் கம்பெனிக்காக வைக்கப்பட்ட ஆப்பு . ? ? ? . .

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
20-மே-201719:47:22 IST Report Abuse

ramasamy naickenகொடநாடு, போயஸ் கார்டன், சிறுதாவூர் போன்ற உள்நாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாதவர்கள், வானம் ஏறி வைகுண்டம் போக போகிறார்களாம்.

Rate this:
20-மே-201722:06:16 IST Report Abuse

MurugesanSugumaranஅதையெல்லாம் கோா்ட் தான் செய்யனும். உளறாதிங்க....

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
20-மே-201714:46:01 IST Report Abuse

Needhiyin Pakkam Nil அடேய் ஒருத்தன் வெளிநாட்டுக்கு தப்பித்து செல்லணும்னு முடிவு பண்ணிட்டா அவன் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு தான்யா போவான், மல்லையாவும் அப்படி தான் ஆனால் இவர்கள் தான் அவரை பற்றி தினமும் ஒரு செய்தியை போட்டு நம்மை மடையர்கள் ஆக்குகிறார்கள். அப்போ இந்த சட்டத்தில் ஒருவர் தப்பித்து போக அனுமதி உண்டு எந்த தடையும் இல்லை ஆனால் அவன் போன பிறகு இந்த சட்டத்தை பயன்படுத்தி அவனுடைய கோமணம் ஏதேனும் இங்கே இருந்தால் அதை அரசாங்கம் முடக்கி வைக்கலாம் அப்படி தானே, காக்காவை பிடிக்க துப்பில்லை அதோட கக்காவை பிடிக்கறதுக்கு ஒரு சட்டமா...........விளங்கிடும் நம் தேசம்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-மே-201713:09:31 IST Report Abuse

Balajiவெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்கு சட்டங்களை கடுமையாக்குவதை விட்டுவிட்டு தப்பி சென்று விட்டால் என்ன செய்யவேண்டும் என்று யோசித்து சட்டம் இயற்றுவது என்று முடிவெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்....... இந்த சட்டத்துக்கு குறைந்த பட்சம் என்று தகுதி வேறு, அருமய்யா..................

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மே-201714:51:12 IST Report Abuse

Pasupathi Subbianதற்பொழுது இருக்கும் இ பி கோ சட்டப்படி , எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிடமுடியாது. போதிய ஆதாரம், சாட்சியம் இருந்தாலே , நீதிமன்றத்தில் அது சரி இல்லை , இது சரி இல்லை என்று கூறி குற்றவாளி தப்பிக்க ஏதுவாகிறது. இந்த நிலையில் எடுத்ததும் கைது, ஜப்தி என்று போய் , நீதி மன்றத்திடம் கொட்டு வாங்குவது , என்பதை தவிர்க்க , சட்ட நடவடிக்கைகளில் முழுவதும் நடைமுறை படுத்தவேண்டி வருகிறது. அதற்குள் குற்றவாளி தப்பித்து ஓடுவது , அல்லது தலைமறைவாவது என்பது நடைபெறுகிறது. அதிலும் இந்த மல்லையா சொந்த விமானம் வைத்துள்ளார், இதே போல மாறன் சகோதரர்கள் சொந்த விமான கம்பெனி வைத்துஉள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் ப சிதம்பரத்தின் மகன் , குற்றப்பத்திரிக்கை வாங்காமல் , வெளிநாடு சென்றுவிட்டார். இவ்வளவுக்கும், ப சிதம்பரம் ஒரு வக்கீல், நாட்டின் மந்திரி பதவியை இருமுறை வகித்தவர், அதுவும் உள்துறை அமைச்சராக இருந்தவர், இவரின் மகனே இப்படி என்றால் மற்ற குற்றவாளிகளை பற்றி என்ன சொல்ல...

Rate this:
20-மே-201722:03:34 IST Report Abuse

MurugesanSugumaranசட்டத்தை கடுமையாக்கி வெளிநாடு செல்வதை எப்படி தடுக்க முடியும். உங்க கிட்ட சொல்லிகிட்டா அவன் போவான். முட்டாள்தனமா பேசாதிங்க சாா்....

Rate this:
தமிழ் - ஈரோடு,இந்தியா
20-மே-201712:18:39 IST Report Abuse

தமிழ்வெளிநாட்டிற்கு ஓடுவது என முடிவு செய்றவன், எல்லாவற்றையும் முடிந்த அளவிற்கு சுருட்டிக்கொண்டு, வேறு ஏதாவது முன்னேற்பாடு செய்துவிட்டுத் தானே ஒடறான். மல்லையாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தால் வட்டிக்காவது ஆகுமா?

Rate this:
B.Indira - thane,இந்தியா
20-மே-201710:49:48 IST Report Abuse

B.Indiraநூறுகோடி என்பது கூடாது.தவிர அவர்கள் சொத்துக்கள் விலை போவதே இல்லை

Rate this:
gk -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-201709:52:32 IST Report Abuse

gkNo need for exemptions. No need for minimum limit. No need for submitting bill in Parliament. Release emergency act immediately.

Rate this:
krishna - cbe,இந்தியா
20-மே-201709:50:54 IST Report Abuse

krishnaமல்லையா, கார்த்தி சிதம்பரம் போன்றோரின் சொத்துக்கள் பறி முதல் செய்ய படுமா ?

Rate this:
krishna - cbe,இந்தியா
20-மே-201709:43:08 IST Report Abuse

krishnaகார்த்திக் சிதம்பரம் மாட்டி கொள்ள வாய்ப்பு உண்டா???

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:34:51 IST Report Abuse

Srinivasan Kannaiyaபொருளாதார குற்றங்களில் ஈடு பட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பிடிய்யே லஞ்சலாவண்யத்தில் வாங்கிய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய ஏதாவது செய்யுங்களேன்...

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement