5,500 அரசு பள்ளிகளில் 1,600 பள்ளிகள் முழு அளவு தேர்ச்சி முன்னேற்றம்! Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
5,500, அரசு, பள்ளிகளில், 1,600 பள்ளிகள், முழு அளவு, தேர்ச்சி முன்னேற்றம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன. வழக்கம் போல, இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

மார்ச்சில் நடந்த, ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ள, 5,463 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 4.03 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 3.69 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். அதிலும், 1,557 அரசு பள்ளிகளில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கடந்த ஆண்டுகளை

ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுதேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளிகள் எண் ணிக்கையும் உயர்ந்துள் ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக, விருது நகர் மாவட்டத் தில், 104 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

100 சதவீதம்:தலா, 83 பள்ளிகளுடன், ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாம் இடத்தை யும்;கன்னியாகுமரி, 91 பள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. சென் னையில், மூன்று பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளி மாணவர் களின் ஒட்டு மொத்த

Advertisement

5,500, அரசு, பள்ளிகளில், 1,600 பள்ளிகள், முழு அளவு, தேர்ச்சி முன்னேற்றம்!

தேர்ச்சியில், மாவட்ட அளவில், 97.79 சதவீதத் துடன், கன்னியாகுமரி முதல் இடத்தையும்; 97.69 சதவீதத்துடன், விருதுநகர் இரண்டாம் இடம்; 97.61 சதவீதத்துடன், ராமநாதபுரம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள் ளன. 28 அரசு பள்ளிகள் உடைய சென்னை மாவட்டம், 91.41 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

கூடுதல் தேர்ச்சி: பத்தாம் வகுப்பு பொது தேர்வில், ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களை விட, மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதேபோல, இந்த ஆண்டும், மாணவர்களை விட, மாணவியரே, ௩.௭ சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்வு எழுதிய மொத்த மாணவியரில், 96.2 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் தேவை


பாடத்திட்டங்களை மாற்றாமல், மெருகூட்டும் பயிற்சிகள் இல்லாமல், அரசு பள்ளி மாணவர் கள், இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளனர். எனவே, தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாண வர் சேர்க்கையை உயர்த்தவும், ஆங்கில மொழி திறன், போட்டித் தேர்வுகளில் பங்கேற் கும் ஆற்றலை வளர்க்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதவி மற்றும் சம்பள உயர்வில் மட்டுமின்றி, மாணவர்கள் முன்னேற்றத்திலும், அக்கறை காட்டும் ஆசிரியர்களை அதிக அளவில் உரு வாக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுத்தால், இன்னும் முன்னேற் றம் கிடைக்கும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் - ஈரோடு,இந்தியா
20-மே-201712:40:55 IST Report Abuse

தமிழ்- "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன" :- இது முன்னேற்றமா? கல்விக்கு நமது அரசு என்ன செய்கிறது, முக்கியத்துவம் கொடுக்கிறது என காறித்துப்ப வேண்டாம்??? பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கும் தொகையை என்ன தான் செய்றாங்க.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-மே-201711:16:21 IST Report Abuse

Balajiவெற்றி பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்........ தோல்வியடைந்தவர்கள் துவண்டுவிடாமல் வெற்றிபெற நமக்கு ஏற்பட்ட சிறு தடங்கல் என்று எடுத்துக்கொண்டு மீண்டுவர முயற்சிகளை பெற்றுக்கொள்ளுங்கள்........ அரசு கல்வியின் தரத்தை முன்னேற்றுவதில் மிகப்பெரிய அளவில் கவனத்தை செலுத்த வேண்டும்....... இல்லையென்றால் மாணவர்களின் தகுதியை முழுவதுமாக வெளிக்கொண்டு வர முடியாமல் இன்னும் நீட் போன்ற தேர்வுகள் வேண்டாம் என்று சொல்லி மேலும் அவர்கள் வளராமல் இருக்க இனியும் முயற்சிக்காமல் அவர்களை மிகுந்த தரத்துடன் வளர்த்தெடுப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும்...................

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-மே-201707:48:32 IST Report Abuse

Kasimani Baskaranவெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து வெற்றி பெறவும், தோல்வியடைந்தவர்கள் துயரம் கொள்ளாமல் அதை வெற்றியின் முதல் படியாக எடுத்துக்கொண்டு அடுத்து ஆகவேண்டியதை செய்யவேண்டும்...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
20-மே-201707:27:53 IST Report Abuse

தங்கை ராஜாவடக்குக்குத்தான் எப்போதும் பூஸ்ட் கிடைக்கும். ஆனால் தெற்கு போராடி முன்னிலை பெரும். அது இந்தியாவாக இருந்தாலும் சரி, தமிழ் நாடாக இருந்தாலும் சரி.

Rate this:
Karthik - Chennai,இந்தியா
20-மே-201701:43:30 IST Report Abuse

Karthikவெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கு என் வாழ்த்துக்கள். இந்தியாவின் வரும்கால தூண்கள். அரசு பள்ளிகளின் 100 சதவீதம் வெற்றி கேட்பதில் சந்தோசமா இருக்கு. அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு முன் வர வேண்டும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement