'யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!'

''ரஜினி, மிகவும் நல்ல மனிதர்; சிறந்த ஆன்மிக வாதி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வந்தாலும், அவர்களை ஏற்பதும், நிராகரிப்பதும் மக்களின் கைகளில் உள்ளது. காரணம், மக்கள் தான் எஜமானர்கள்,'' என, பன்னீர்செல்வம் கூறினார்.

 'யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!'

அங்கீகாரம்


அ.தி.மு.க., புரட்சித் தலைவி அணி தலைவர் பன்னீர்செல்வம், நேற்று டில்லியில் நிருபர் களிடம் கூறியதாவது:இரட்டை சிலை சின்னத்தை பெற, தினகரன் லஞ்சம் கொடுத்த வழக்கை விரைந்து நடத்த வேண்டும். சசிகலா வின் நியமனத்திற்கே, இன்னும் தேர்தல் கமி ஷன் அங்கீகாரம் தரவில்லை.இந்நிலையில்,

அவரால் பொருளாளரான சீனிவாசன், கட்சி பணத்தை கோடிக்கணக்கில் வங்கிகளில் இருந்து எடுத்து செலவிடுகிறார்.

இது, கடும் குற்றமாகும்.விதிகளின்படி பார்த்தால், இப்போதும் கூட நான் தான், அ.தி.மு.க., பொருளாளர். வங்கி களிடம் நான் கடிதம் அளித்தும், அதற்கு பலனில்லை. எனவே, தேர்தல் கமிஷனும், ரிசர்வ் வங்கியும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து, முறை யானஅறிவிப்பு வெளியாகவில்லை. வேட்பாளர்கள் யார் என்பதெல்லாம் தெரிந்த பின்,யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு எடுப்போம்.கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ், இன்ன மும், சசிகலாவை பொதுச் செயலர் எனக்கூறி வரும் நிலையில், அவரை ஒதுக்கிவிட்டோம் என, கூறுவது சரியல்ல.

சசிகலாவை நீக்கினால் மட்டுமே பேச்சு


அ.தி.மு.க., தொண்டர்களின் இயக்கமாக மாற வேண்டும். மாறாக, ஒரு குடும்பத்தின் கட்டுப் பாட்டிற்குள் சென்றுவிடக் கூடாது. இரு அணிகளின்

Advertisement

இணைப்பு, ஆமை வேகம் ஆனதற்கு நாங்கள் காரணம் அல்ல.

நல்ல மனிதர்:ரஜினி மிகவும் நல்லமனிதர்; சிறந்த ஆன்மிகவாதி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வந்தா லும், அவர்களை ஏற்பதும் நிராகரிப்பதும், மக்களின் கைகளில் உள்ளது. காரணம், மக்கள் தான் எஜமானர்கள்; அவர்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருடன் சந்திப்பு:பிரதமர் மோடியை, நேற்று மாலை, பன்னீர்செல்வம் சந்தித்தார். இச்சந்திப் பின் போது, முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.பின், நிருபர்களிடம் பன்னீர் செல்வம் கூறுகை யில், ''குடிநீர் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, 'நீட்' தேர்வு விலக்கு என, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து, பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்.

பருவமழை பொய்த்துள்ளதால், வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரினோம். மற்றபடி, அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை,'' என்றார்.
- நமது டில்லி நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jhansi Jasan - chennai,இந்தியா
20-மே-201716:37:34 IST Report Abuse

Jhansi Jasanஉண்மைதான் துரோகியான நீயே அரசியலில் இருக்கும்போது யார் வந்தால் என்ன ...எதுவும் தவறில்லைதான்...

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
20-மே-201713:43:58 IST Report Abuse

kowsik Rishiஓ பி எஸ் பேச்சு மிக மோசம் சசிகலாவை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னவர் இன்று யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்லும் பேச்சு இவர்க்கு ஆப்பு காத்திருக்கிறது என்று தான் அர்த்தம் இவர் குடும்ப பசிக்கு இவர் கூட்டம் மட்டும் அரசியலுக்கு அண்ணாதிமுகாவை கைப்பற்ற அதர்ம யுத்தம் நடத்தலாம் - சசிகலா மட்டும் வரக்கூடாதாம் எங்கேயோ இடிக்கிறதே சார் உங்கள் கடை காலி என்று மட்டும் தெரிகிறது

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-மே-201713:42:27 IST Report Abuse

BalajiOPS அவர்கள் ரஜினி குறித்த கருத்துக்கள் நாகரீகமாக இருக்கிறது என்றாலும், இப்போதைக்கு அனைவருக்குமே ஒருவித பய உணர்வு ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் சேர்த்து பார்க்க முடிகிறது.......... சிலர் தற்போது ரஜினி சினிமா நடிகர் என்பதால் அவரை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை........ இது திரு.ராமதாஸ் அவரது வளர்ச்சிக்கு தடையாக இருப்பதால் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார்........ அதைவிடுங்கள், ஆனால் ரஜினி அரசியலுக்கு லாயக்கு படமாட்டார் என்பது தான் எனது கருத்து......... மேலும் தமிழர்களை ஆள ஒரு தமிழனே வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியதுள்ளது...........

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மே-201715:20:40 IST Report Abuse

Pasupathi Subbianஇங்க பாருங்க தமிழனை தமிழன் ஏமாற்றினால் பொறுத்துக்கொள்வார்களாம், அடுத்தவர் நல்லது செய்தால் கூட பொறுத்துக்கொள்ளமாட்டார்களாம். என்ன ஒரு குறுகிய மனப்பான்மை, எம்ஜி ராமச்சந்திரன் , இலங்கையில் பிறந்து, கேரளாவில் வளர்ந்தவர், அவர் நல்லது செய்யவில்லையா? செய்த்தாலும் தமிழன் கையால் சாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களினால் , தமிழகம் இன்று மிக கேவலமான நிலையில் உள்ளது. திருந்தமாட்டார்கள் இவர்கள்....

Rate this:
தலைவா - chennai,இந்தியா
20-மே-201720:56:49 IST Report Abuse

தலைவா அது இல்லை சுப்பையா அண்ணன்...பக்கத்துக்கு வீட்டுக்காரன் நமக்கு ஒத்தாசை செய்யலாம் ஆனா இந்த வீட்டையே ஆட்டைய போட நினைச்சா?? நம்ம வீட்டில நாம்தானே குடும்ப தலைவன்..மஹாராஷ்டிராவுல போய் ஒரு தமிழன் நான் முதலமைச்சர் பதவிக்கு போட்டி போட போறேன் அப்படின்னு சொன்னா என்ன ஆகும் தெரியுமா? ஒட்டு மொத்த தமிழர்களையும் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிருவானுங்க சேனா காரங்க....

Rate this:
மணிமாறன் - chennai,இந்தியா
20-மே-201713:16:34 IST Report Abuse

மணிமாறன் 1996 ல் வாய்ப்பை விட்டுட்டு 21 வருடம் கழித்து இப்போ பிடிக்க நினைப்பவர் முட்டாள் இல்லாமல் வேறென்ன...RIGHT DECISION AT RiGHT TIME எடுப்பவர் தான் அறிவாளிகள்..இப்போ இது wrong decision at a right time

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
20-மே-201712:58:25 IST Report Abuse

Jaya Ramஆமாம் ஆமாம் ஏனென்றால் அப்படி விட்ட்டதினால் வந்த வினை தான் நாங்கள் ( மக்கள் ) அவதிப்படுகிறோம் அன்று அந்த நல்ல மனிதர் எம் ஜி ஆர் அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் அவர் ஊழலை ஒழிப்பேன் என்று கூறி கட்சி ஆரம்பித்து அவரால் ஊழலை ஒழிக்க முடியாவிட்டாலும் பத்தாண்டுகள் நல்லாட்சி தந்தார் ஆனால் அவரால் அறிமுக படுத்த பட்ட (பின்னர் அவராலேயே ஒதுக்கப்பட்ட ஜெயலலிதாவினை வெளிவராத உண்மைதான் இது ஆனால் அப்போ கட்சியில் இருந்தவர்களுக்கு தெரியும் தென்னகம் பத்திரிகையில் வந்தது ) பின்னர் இந்த கட்சியினையும் ஜெயலலிதா கைப்பற்றி அதனை நல்ல முறையில் வளர்த்தாலும் எந்த நோக்கத்திற்க்காக ஆரம்பிக்கப்பட்ட்ட கட்சி கடைசியில் ஊழல் குற்றச்சாட்டில் அவரையே ஜெயிலுக்கு தள்ளும்படி ஆக்கினார், இன்று நீங்கள் அனைவரும் உத்தமர் போல் பேசுகிறீர்கள் ,. அது போலவே இவர் வந்து மக்களை எண்ணப்படுபடுத்த போகிறாரோ வேண்டாம் தமிழக மக்கள் மீண்டும் ஏமாறாதீர்கள். இத பகுதியில் ஒருவர் கூறினார் எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்றவர்களை ஆதரித்தீர்களே ரஜினியை ஏன் கன்னடத்தார் என்று கூறுகிறீர்கள் என்கிறார் அவருக்கு ஒன்று செல்வேன் , எம் ஜி ஆர் அரசியலுக்கு வரும் முன் கேரளவிலே ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார் அங்கு அவர் மலையாளி என்ற காரணத்தினால் மலையாள மொழியில் பேச சொன்னார்கள், அதற்க்கு அவர் என்னை வளர்த்தது தமிழ் நாடு, எனக்கு உணவு தந்தது தமிழ்நாட்டு மக்கள் எனவே நான் தமிழ் மொழியில் பேசுவதை அனுமதித்தால் பேசுகிறேன் இல்லையேல் பேசாமலேயே செல்கிறேன் என்றார், அது மட்டுமல்ல பெரியார் டாம் பிரிட்சினை நீங்கள் கூறுவது போல் கேரளா மக்கள் அந்த காலத்தில் நம்மை போல் சும்மாதான் இருந்தார்கள் ஆனால் அணை பல ஆண்டுகள் ஆகிவிட்டன அதனை மராமத்துப்பார்க்க வேண்டும் என கேரளா அரசு கோரிக்கை வைக்க அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆரும் அத்திற்காக பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். அதன் படி அணை மரமத்திற்காக டெண்டர் கோரப்பட்டது, அது சமயம் கேரளாவில் உள்ள ஒரு பெரிய காண்ட்ராக்டர் மலையாளி என்ற முறையில் அந்த பணியினை தனக்கு கொடுக்குமாறு எம் ஜி ஆரிடம் கேட்டார் அவரோ தமிழ் நாட்டில் அப்படி நடை முறை இல்லை டெண்டர் போடுங்கள் தகுதியிருந்தால் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறி விட்டார், ஆனால் அவரும் டெண்டர்பட இல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒதுக்குமாறு கேட்டார் ஆனால் எம் ஜி ஆர் முடியாது என்று அவரை அனுப்பிவிட்டார் அவர் சென்று அப்பகுதி மக்களை திரட்டி அணை உடையப்போகிறதது எனவே தண்ணீர் 136 அடிக்குமேல் தேக்க கூடாது என்று கோர்ட் மூலம் தடையாணை பெற்றார் அதன் பின்னர் எவ்வளவோ இடைஞ்சல்கள் மராமத்து செய்யவிடாமல் செய்து காலத்தினை வீணாக்கினார் நம்மவர்களும் அதற்க்கு துணை போனார்கள் இந்த இடை பட்ட காலத்தில் 136 அடி தண்ணீர் தேக்கினால் எவ்வளவு உயரம் தண்ணீர் தேங்குமோ அந்த அளவில் இருந்து சிறிது உயரத்தில் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்து வீடுகளும், ரெசார்ட்களும் மலையாளிகள் கட்டி விட்டனர் இப்போ 156 தண்ணீர் தேக்கினால் அவைகள் அணைத்து தண்ணீருக்குள் மூழ்கிவிடும் எனவே அவைகளை காப்பாற்றுவதற்காகவே அப்பகுதி அரசியல் கட்சிகளும், அரசும் கூக்குரல் எழுப்புகின்றன, இப்படி பட்ட தலைவர் தான் எம் ஜி ஆர், அவர் நினைத்திருந்தால் அந்த கான்ட்ராக்டருக்கு அந்த வேலையினை கொடுத்திருக்கலாம் ஆனால் மலையாளி என்று அவர் ஒருபோதும் கோரிக்கொண்டதும் இல்லை அவர்களுக்கு ஆதரவாக நின்றதும் இல்லை,ஜெயலலிதாவினை பற்றி கூறினார்கள் அவர் காவேரி தண்ணீர் வரவேண்டும் என்பதர்காக்க முதல்வராக இருந்த போதே இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடியவர், ஆனால் இவர் கூறும் ரஜினியோ அப்படியில்லையே சினிமாவில் எப்படியெல்லாம் நடிக்க கூடாதோ அப்படியெல்லாம் நடித்து இளைஞிர் காலை கெடுத்தவர், அவரால் இந்த தமிழ் நாட்டிற்கு எந்த ப்ரயோஜனமாவது ஏற்பட்டது உண்டா இவ்வளவு ஏன் அரசுகளை குறை கூறும் இவர் ஒரு மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியினை தத்தெடுத்து அந்த பள்ளிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தந்திருக்கலாமில்லையா இவர் நடித்த படங்கள் எதனை தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்கள் எதனை இதையெல்லாம் செய்திருந்தால் இவரை வரவேற்கலாம் ஆனால் ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போடாமல் நடிகன் என்ற இமாஜினை வைத்து ஆட்சி பிடிக்கலாம் என்ற காலம் எல்லாம் போய்விட்டது வேண்டாம் அவர் நல்லாயிருக்கட்டும்

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மே-201715:57:00 IST Report Abuse

Pasupathi Subbianஇந்த கருத்தில் சற்றே வேறுபாடு உள்ளது. ரஜினிகாந்த் அவர்கள் , இத்தனை நாள் தமிழக மக்களுக்கு சிறு துரும்பை கூட கிள்ளி போட்டது இல்லை என்று கூறினார். செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் முன் எத்தனை துரும்பை கிள்ளி போட்டார், திரு கருணாநிதி அவர்கள் ஆட்சி அரியணையில் உட்க்கார்ந்து எத்தனை துரும்பை கிள்ளினார் என்பதெல்லாம் மக்கள் அறிந்ததே. ஒரு தடவை அல்ல பல பல தடவை ஒரே தலைவர்கள் இவர் மாறினால் அவர் அவர் மாறினால் இவர் என்று கைப்பந்து விளையாட்டை பார்த்து பார்த்து , நாடும் மனமும் கெட்டுப்போய் உள்ள நிலையில் , யாரவது மாறுதலாக வருவாரா , விமோர்ச்சனம் கிட்டுமா என்று பரிதவித்துக்கொண்டு இருக்கும் நிலை இன்று. தற்பொழுது இருக்கும் தலைவர்களில் ஓ பி எஸ் , இ பி எஸ் , இந்த பக்கம் ஸ்டாலின் , இவர்கள்தான் நாளையும் முதல்வராக வருவார்களா? இதை மாற்ற கூடாதா ? ரஜினிகாந்த் பதவிக்கு வந்தால் நல்லதே செய்யமாட்டாரா? இதற்க்கு என்ன அத்தாட்சி. சிந்தியுங்கள் . திரு ரஜினிகாந்த் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நான் கூறவில்லை. வரக்கூடாது என்று நீங்கள் கூறுவதை மறுக்கிறேன்....

Rate this:
krishna - cbe,இந்தியா
20-மே-201711:49:18 IST Report Abuse

krishnaசசிகலா மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்கிறார்.

Rate this:
A shanmugam - VELLORE,இந்தியா
20-மே-201710:41:37 IST Report Abuse

A shanmugamஎழுத படிக்கச் தெரியாதவன், படிப்பறிவே இல்லாதவன், எவன் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என்னென்னில், கோடி கோடியாக லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்துதும் அரசியல்வாதிகளுக்கு "படிப்பு" ஒரு கேடா ? அந்த அளவுக்கு அரசியில் இன்றைய காலகட்டத்தில் தரம் தாழுந்துள்ளது.

Rate this:
Laser Eyes - Chennai,இந்தியா
20-மே-201710:39:11 IST Report Abuse

Laser Eyesயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கான அடிப்படை தகுதி தனக்கு இருக்கிறதா என்று சிந்தித்து செயல்பட வேண்டும் . இவரை அரசியல் ஜோக்கர் ஆக்கி, தேவை படும்போதெல்லாம் காய் நகர்த்தி தான் வெற்றிபெற வேண்டும் என பி ஜெ பி திட்டம் தீட்டுகிறது . கங்கை அமரனுக்கு ஆதரவு என்று அவருக்கு தெரியாமலே ஒரு Build Up கொடுத்து பின்பு அவர் வாயாலே யாருக்கும் ஆதரவு இல்லை என மறுப்பு தெரிவிக்க வைத்து. ஆதரவு கொடுத்தால் பி ஜெ பி இல்லையேல் யாருக்கும் கொடுக்க கூடாது என்ற அரசியல் சாணக்கிய தனமான பி ஜி பி யின் திட்டம் நிறைவேறியது . சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாத்தான் வரும் என்ற அவரது வார்த்தையில் உறுதியாக இருப்பாரா?? . எந்த காலத்திலும் இந்த கூட்டத்த்தோடு சேர கூடாது. இல்லையேல் அவருக்குத்தான் அசிங்கம்.

Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
20-மே-201710:34:32 IST Report Abuse

Dol Tappi Maaபணத்துக்காக யார் யார் காலில் விழும் இவரெல்லாம் தமிழனுக்கே அவமானம் .

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
20-மே-201710:17:10 IST Report Abuse

P. SIV GOWRIயார் வேண்டும் என்றாலும் வந்து கொண்டுதான் உள்ளார்கள். அனால் இதில் ரஜினி அவர்கள் வர வேண்டாம் .

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement