பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார் ஆய்வுக்கு பின் அருண் ஜெட்லி அறிவிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார்
ஆய்வுக்கு பின் அருண் ஜெட்லி அறிவிப்பு

ஸ்ரீநகர்:''ஜம்மு - காஷ்மீர் எல்லையில், ராணுவம் தயார் நிலையில் உள்ளது. எந்த ஒரு சூழலை யும் எதிர்கொண்டு, எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க, வீரர்கள் துணிவுடன் உள்ளனர்,'' என, ராணுவத் துறைக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று கூறினார்.

 பாக்.,குக்கு, பதிலடி,ராணுவம், தயார், அருண்ஜெட்லி

அத்துமீறல்


ஜம்மு - - காஷ்மீர் மாநிலத்தில், இந்திய -- பாக்., எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத் தில், நம் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவ வீரர்கள், நம் வீரர்கள் இரு வரை சுட்டுக் கொன்று, அவர்களின் தலைகளையும் துண்டித்து சென்றனர்.

இதற்கு பதிலடியாக,எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை ஒட்டி, பாக்., எல்லையில் அமைந்திருந்த பதுங்கு குழிகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்த தாக்குதலால், எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பு வகிக்கும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஆய்வு செய்தார்.

பின், ராணுவ உயரதிகாரிகளுடன், அவர் விவாதித் தார்.ஜம்மு -காஷ்மீர்மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்தும், அதை தடுக்க எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

எதிர்கொள்ளும்:பின், ராம்பூர் பகுதிக்கு சென்ற

Advertisement

அவர், அங்குள்ள வீரர்களுடன் கலந்துரையாடி னார். இது குறித்து, அருண் ஜெட்லி கூறிய தாவது:எல்லையில், நம் ராணுவம், எந்த ஒரு சூழலையும், துணிவுட னும், எழுச்சியுடனும் எதிர்கொள்ளும்; அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் தயாராக உள்ளனர்.

ராணுவம், எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக் கும். ராணுவத்தின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
20-மே-201719:38:12 IST Report Abuse

K.Sugavanamதிறமையான பாதுகாப்பு அமைச்சர்..குறை கூறாதீர்கள்..இவ்வளவு திறமையான அமைச்சர் பல வருடங்களுக்கு அப்புறம் கிடைத்துள்ளது இந்தியா செய்த புண்ணியம்..VKK Menon கதை replicate ஆகாமல் இருக்க பிரார்த்திப்போம்.

Rate this:
Nancy - London  ( Posted via: Dinamalar Android App )
20-மே-201716:28:29 IST Report Abuse

NancyDoes he finance minister or defense minister

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
20-மே-201719:25:57 IST Report Abuse

K.SugavanamBoth ....

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மே-201714:55:45 IST Report Abuse

Pasupathi Subbianஇந்தியா பாகிஸ்தான் நாட்டை பழிசொல்லுவதும், பாகிஸ்தான் இந்தியாவை பழி சொல்லுவதும் வழக்கமாகி விட்டது. நடைபெறும் உண்மை செய்திகள் மறைக்கப்படுகின்றன. இந்த இரண்டு நாட்டு அரசியல்வாதிகளும் ஒருவரை ஒருவர் சவால் விட்டு மக்களை பயமுறுத்துவதே பிழைப்பாய் இருக்கிறது.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
20-மே-201719:26:56 IST Report Abuse

K.SugavanamSurvival Tactics என சொல்கிறீர்களா ஜி.....

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
20-மே-201713:31:45 IST Report Abuse

Karuthukirukkanஎன்ன சொல்றீங்க அய்யா ??? பண மதிபிழப்பு செஞ்சதால காஷ்மீரில் தீவிரவாதம் , கல் வீச்சு எல்லாம் ஒளிஞ்சிடுச்சுனு வாட்சப்பில உங்க கட்சியினர் டிசம்பர் மாதம் தொடங்கி மெசேஜ் அனுப்புனாங்களே ?? நம்ம ரூபாயை பாகிஸ்தான் கள்ள நோட்டு அடிச்சு தான் அவங்க பொழப்பே ஓடுது , அதையும் ஒரே அடியா மோடி நிறுத்திட்டார்னு வேற மெசஜ் வந்துச்சே ?? யாருக்குமே தெரியாம ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினோம் அதில் கால்வாசி பாகிஸ்தான் காலி.. இனிமே அவங்க துப்பாக்கி தூக்கவே பயப்படுவாங்கனு வேற சொன்னேங்களே அய்யா ?? பிறகு யார் கூட போரிட ராணுவ வீரர்களை இப்போ தயாரா இருக்க சொல்றீங்க ?? உங்களுக்கு ஒன்னும் தெரியாது , மோடியின் கடும் கடும் நடவடிக்கையால் பாக்கிஸ்தான் அழிந்து விட்டது .. இந்திய வல்லரசு ஆகி 6 மாசம் ஆச்சு ஜெட்லீ அவர்களே .. கண்ணா தொறந்து பாருங்க இந்தியாவை ..

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-மே-201712:51:39 IST Report Abuse

Balajiபாதுகாப்பு விஷயத்தில் சிறிதளவும் பாரபட்சம் காட்டக்கூடாது....... அவர்களை உள்ளே வந்து தாக்குதல் நடத்தி செல்லும் வரை நாம் எதற்காக மவுனமாக இருக்க வேண்டும்...... தற்போது மீண்டும் ஒரு சர்ஜிக்கல் அட்டாக் செய்யவேண்டும்......... இதற்கு முடிவை எடுங்கள், வீரர்கள் எப்போதும் தயாராகத்தான் இருக்கிறார்கள்..........

Rate this:
Ramesh Sundram - Muscat,ஓமன்
20-மே-201712:41:38 IST Report Abuse

Ramesh Sundramஉருப்படா பேச்சு இவர் மக்களால் தேர்ந்து எடுக்க பட்டவர் அல்ல இவர் ஒரு உதவாக்கரை அமைச்சர் . இவர் இப்படி தான் வீர வசனம் பேசி கொண்டு இருப்பர் பாதுகாப்பு துறையும் சரி நிதி துறையும் சரி இரண்டுமே தோல்வி தான் இவரால் ஏன் இன்னும் மோடி இவரை பதவியில் வைத்து இருக்கிறார் என்று தெரியவில்லை

Rate this:
20-மே-201713:56:35 IST Report Abuse

r.sadagopanயார் வந்தாலும் இப்படிதான்...

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மே-201714:53:14 IST Report Abuse

Pasupathi Subbianசற்று அதிகப்படியான பேச்சு இது....

Rate this:
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
20-மே-201709:27:30 IST Report Abuse

Jaya Prakashதலீவா... அவர்கள் எப்போதும் தயார்தான்.... அவர்களை தடுப்பது இந்த வெட்டி அரசியல் பேச்சு..... அதிகாரம் உங்கள் கையில் உள்ளது.... கொஞ்சம் பிரியா விட்டு பார் தலீவா அப்போ தெரியும்.... ஆனா செய்யமாட்டே தலீவா..... கட்சி பாகுபாடு இன்றி எல்லா அரசியல்வாதியும் வாயில்தான் வடை சுடுவான்..... துப்பாக்கியை சுடமாட்டான் .... சுட விடமாட்டான்.... அப்புறம் எந்த நாத்தை புடுங்க.... அவன் தலையை புடுங்கிகிகிட்டேயேதான் இருப்பான் நாம் அறிக்கைவிட்டுக்கிட்டிதான் இருப்போம்... ராணுவத்தை கோமாளி ஆக்குவதுதான் உங்கள் வேலை. அப்போ என்ன னத்துக்கு வெளிநாட்டில் இருந்து நவீன ஆயுதங்கள் வாங்கீறீங்க? காசு சம்பாபதிர்க்க?..... எங்க கையை கட்டிப்போட்டு நாத்தை புடுங்க சொன்னா எப்படி? (நான் ஏதும் தவறா சொல்லவில்லை.... தினமலர் இந்த கருத்தை தணிக்கை செய்யக்கூடாது.... ஒரு முன்னால் ராணுவனின் குமுறல் இது...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
20-மே-201719:29:26 IST Report Abuse

K.Sugavanamராணுவத்துக்கே கிளாஸ் எடுப்பார் போல விட்டா.....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201708:31:38 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇப்பிடியே சொல்லி சொல்லி உங்கள் தலைமுறையும் போய் விடும்... இதை வைத்து அரசியல் காமெடி செய்து கொண்டு இருக்க வேண்டியதுதான் .

Rate this:
Idli - Madras,இந்தியா
20-மே-201708:16:10 IST Report Abuse

Idliமக்களால் நிராகரிக்கப்பட்டவர், அதே மக்களுக்கு எப்படி மந்திரியாய் இருக்கிறார் ?

Rate this:
s sambath kumar - chennai,இந்தியா
20-மே-201710:10:11 IST Report Abuse

s sambath kumarமக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் என்னத்த கிழிச்சாங்க ?. இவர் புத்திசாலி. நமக்குத்தான் நேர்மையானவங்களையும் புத்திசாலிங்களையும் புடிக்காதே. தண்டங்களை தானே காசை வாங்கிட்டு தேர்ந்து எடுக்கிறோம். இட்லி தோசைக்கு இதெல்லாம் புரியாது....

Rate this:
gafnbktec - doha,கத்தார்
20-மே-201710:52:03 IST Report Abuse

gafnbktecமக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் என்னத்த கிழிச்சாங்க ? ராஜ்நாத்சிங்கையும், மோடியையும் சேர்த்து சொல்கிறீர்கள் என்று நினைக்கிறன். ஜெட்லீயின் நேர்மை, புத்திசாலித்தனம் உங்களுக்கு புரிகிற மாதிரி அவரை தோற்கடித்த பஞ்சாபி ஜனங்களுக்கு புரியவில்லை.ஆமாம் பஞ்சாபியர் எப்போது இட்லி,தோசை ஆனார்கள்....

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
20-மே-201708:14:53 IST Report Abuse

தங்கை ராஜாபுலி வருது .......

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement