வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை புகழ்வதா?ரஜினி மீது பா.ஜ., காட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை புகழ்வதா?
ரஜினி மீது பா.ஜ., காட்டம்

'அரசியல் சீர்திருத்தம் பற்றி பேசிய ரஜினி, அதை செயல்படுத்தி வரும், பிரதமர் மோடியை பற்றி குறிப்பிடாமல், துணை முதல்வராக இருந் தும், நிர்வாக சீர்திருத்தம் செய்யும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்டாலினை பாராட்டுவது சரி அல்ல' என, பா.ஜ.,வினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

வாய்ப்பை, தவறவிட்ட, ஸ்டாலினை, புகழ்வதா?,ரஜினி, மீது பா.ஜ., காட்டம்

சென்னையில், தன் ரசிகர்கள் மத்தியில் நேற்று பேசிய ரஜினி, 'தமிழகத்தில் அரசியல் சீர்கெட்டு விட்டது. அதை சரிப்படுத்த வேண்டும்' என்றார். ஸ்டாலினை சிறந்த நிர்வாகி என்றதுடன்,

அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோரை யும் புகழ்ந்தார். ஆனால், பிரதமர் மோடி பற்றி எதுவும் சொல்லவில்லை. இது, பா.ஜ.,வின ருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது:


அரசியல் சீர்கேட்டை பற்றி, ரஜினி பேசியுள்ளார். பிரதமர் மோடி, நிதி சீர்திருத்தத்திற்காக, பண மதிப் பிழப்பு திட்டத்தை அமல்படுத்தினார். விடுமுறை கூட எடுக்காமல், ஊழலற்ற ஆட்சியை கொடுத்து வருகிறார். நிர்வாக சீர்திருத்தம் பற்றி பேசும் போது, ரஜினி அவரைகுறிப்பிடவில்லை.

ஆனால், துணை முதல்வராக இருந்தும், நிர்வாக சீர்திருத்தம் எதையும் செய்யாமல், கிடைத்த வாய் ப்பை தவறவிட்ட ஸ்டாலினை, சிறந்த நிர்வாகியாக இருப்பார் என, சோ கூறியதாக பேசி உள்ளார்;ஜாதி அரசியல் செய்யும் திருமாவளவன், அன்புமணியை

Advertisement

பாராட்டி உள்ளார்.மேலும், தன்னை அரசியல் கட்சியினர் பயன்படுத்திய தாக ரஜினி கூறி யுள்ளார். நாங்கள் அவரை அன்பு காரணமாக சந்தித் தோம்; ஆதாயத்திற்காக அல்ல. பா.ஜ., வில் சேரும்படி, ரஜினியை, இதுவரை அழைத்த தில்லை. குடி, சிகரெட்டுக்கு எதிராக, அவர் பேசியது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Power Punch - nagarkoil,இந்தியா
21-மே-201709:26:53 IST Report Abuse

Power Punch " நாங்கள் அவரை அன்பு காரணமாக சந்தித்தோம்".. அப்பா .. ரஜினி மேல் இருக்கும் அன்பில் ஒரு துளி கூட நம் விவசாயிகளின் மேல் உங்களுக்கு இல்லையே...அது ஏன் ???? போய் வாயைக்கழுவு ....

Rate this:
20-மே-201723:24:14 IST Report Abuse

kulandhaikannanThe problem with Rajni is that he always afraid of trouble makers. That is why he has praised the four leaders. In the same way, he invited Veeramani, Vaiko, D. Pandian, Thiruma etc to his daughters marriage, ignoring his loyal fans.

Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
20-மே-201720:34:11 IST Report Abuse

SaiBabaஇத்தனைபேர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதுன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்கிறீங்களே,,அவர் இது வரைக்கும் யாரையாச்சும் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காரா? சரத்குமார், ராதிகா,குஷ்பூ, நக்மா, ராதா ரவி, கருணாஸ், ஏன் சசிகலா, தினகரன், தீபா etc., etc., எத்தனையோ பேர் அரசியலுக்கு வந்தாங்களேஅவங்களை எல்லாம் அரசியலுக்கு வரலாம் வரக்கூடாதுன்னு யாரையாச்சும் ரஜினி சொல்லி இருக்காரா? இல்லைஇத்தனை அரசியல்தலைவர்களும் அது பற்றி எல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார்களா? அவர் அரசியலுக்கு வரட்டும், மக்களை சந்திக்கட்டும். ஒரு கட்டு மானத்தோடு மக்களை சந்தித்தால் அவர் வெற்றி பெறுவது உறுதி. தனக்கு பக்க பலமாக நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் மக்களுக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும்.

Rate this:
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
20-மே-201717:57:37 IST Report Abuse

வைகை செல்வன்ரஜினி ஒரு நடிகன் .. அந்த அளவில் நிறுத்திக்கொள்வது அவருக்கு மரியாதை .. தமிழக மக்கள் இப்போது மாக்கள் அல்ல .. தெளிவாக இருக்கிறார்கள் ..

Rate this:
Basic Instinct - Coimbatore,இந்தியா
20-மே-201722:15:24 IST Report Abuse

Basic Instinctரஜினி கட்சி தொடங்கினால், தேர்தலில் போட்டி இட்டால், ஓட்டு இயந்திரத்தில் அவருடைய சின்னம் மட்டும் இருந்தால் அப்படி சொல்லலாம். அல்லது அவருடைய கட்சிக்கு மட்டும் ஓட்டு விழுந்தால் சொல்லலாம். மற்ற கட்சிகளின் சின்னங்களும் தானே இருக்க போகிறது. அவருடைய கட்சியை விட்டு விட்டு வேறுகட்சிக்கு ஓட்டு போடுலாமே அது தானே ஜனநாயகம்....

Rate this:
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
20-மே-201717:56:02 IST Report Abuse

வைகை செல்வன்indhiyan kumaru kooppaadu overaa irukkae..

Rate this:
skandh - chennai,இந்தியா
20-மே-201717:50:46 IST Report Abuse

skandhதமிழகத்திலேயே சட்டத்தை மதிக்கும் ஒரே கட்சி ஆ தீ முல்லை கா . தலைமை எப்படியோ அப்படியே. தொண்டர்கள்.ஆன்மீகமும் ஆ தீ முல்லை காவே.எளிய தொண்டனும் பெரிய மனிதராகலாம் ஆ தீ முகாவிலேதான்.எம் எல் ஏ ஆகலாம், மந்திரிப ஆகலாம். முதல் மந்திரி ஆகலாம். ரஜினி ஏழைப்பங்காளர். நன்கு யோசித்து ஏழைப்பங்காளன் ஆகா முடிவெடுக்க வேண்டும்.ஆ தீ முல்லை கா வில் சேர வேண்டும்.ஆ தீ முருகா வை எம் ஜீ ஆர் , அம்மாவழியில் வழிகாட்ட வேண்டும். அதுவே ரஜினிக்கு சிறந்தது அவர் புகழ் நிலைத்து நிற்கும். நல்லவர் என்று.

Rate this:
sundaram - Kuwait,குவைத்
20-மே-201717:32:06 IST Report Abuse

sundaramஇந்த ரஜனி ஜெயாவை எதிர்த்ததால் சன் டிவியும் திமுகவும் இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து விளம்பரப்படுத்தியது. பின்னர் இவரது படங்களுக்கு அதிக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன இதே சன் டிவியால். பின்னர் ரஜனி 25 என்று சிங்கப்பூரில் சிறப்பு விழாவினை சன் டி வி ஏற்பாடு செய்து ராஜனிக்கு பல கோடிகளை தாரை வார்த்து தானும் பல கோடிகளை சுருட்டிக்கொண்டது சன் டிவி. பின்னர் நன்றிக்கடனாக வாரம் தோறும் பாசத்தலைவனுக்கு பாராட்டு கூட்டம் நடந்தபோது தன் யாவாரத்தை பெருக்க எண்ணி ஒவ்வொரு வாரமும் மஞ்ச துண்டேந்தி ராஜனியார் கோவாலபுர குருமகா சந்நிதானத்தை நோக்கி பயணித்தார். இப்படியே இவருக்கு யாவாரா விளம்பரம் பெருகியதை தேர்தல் கமிஷனும் தன்பங்குக்கு இவருக்கு கையில் மை வைக்காமல் அனுப்புதல், இவர் வாக்களிக்கும்போது காணொளிக்கருவியை வாக்கு இயந்திரம் வரை அனுமதித்தல் என்றெல்லாம் செய்து இவரை பெரிய்ய்ய்ய மனிதன் ஆக்கியது. பின்னர்டீ குடிக்க இவர் வீட்டுக்கு தேடி வரும் அளவு நரேந்திர மோடியை உசுப்பியது. எப்படியாவது இவரை பாஜக கட்சிக்குள் இழுத்துவிடவேண்டும் என்று பாஜகவும், முயன்று பார்த்து தோல்வி அடைந்தது. இம்சை அரசியே பல முறை இவரை புகழ்ந்து அறிக்கை விட்டு எப்படியாவது இவர் பாஜகவுக்குள் வந்துவிடவேண்டுமென்று கனவு கண்டது உண்மை. ஆனால் அடிப்படையில் இவர் ஒரு தீவிர திமுக அனுதாபி. பாஜகவில் சேர்ந்தாலும் அங்கு இவர் திமுகவின் உளவாளியாக செயல்படுவார்.

Rate this:
Jhansi Jasan - chennai,இந்தியா
20-மே-201716:40:33 IST Report Abuse

Jhansi Jasanஉன்ன பத்தி புகழ்ந்திருந்தா சும்மா இருந்திருப்ப அதான உன் ஃபீலிங்கு...போதும் ரொம்ப பொங்காதீங்க பன்ரதெல்லாம் கேவலமான வேளை இதுல பேச்சு வேர உங்களுக்கு

Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
20-மே-201715:41:47 IST Report Abuse

Arumugamதினகரனை தீட்டுவதுபோல் கொஞ்சம் ரஜினியை தீட்டினால், இந்த நடிகர் உடனடியாக உங்களுக்கும் வெண்சாமரம் வீசுவார். உங்கள் கட்சியிலும் சேர்ந்து விடுவார். இதை நீங்கள் முன்பே செய்திருக்கலாம்.

Rate this:
Mohan Nadar - Mumbai,இந்தியா
20-மே-201715:19:47 IST Report Abuse

Mohan Nadarஊழலே செய்யாத சக்கரை குட்டிகள் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல எதுக்கு ஊழல் கட்சியின் ஓட்டுக்காக அலையுறீங்க

Rate this:
மேலும் 81 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement